அபாயகரமான கழிவுகளின் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட இயக்கங்கள் கட்டுப்படுத்துவது மற்றும் அவற்றை அழிப்பது தொடர்பிலான பசெல் மாநாடு 1989 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டு, 1992 மே மாதம் 5 ஆம் திகதி அமுலுக்கு கொண்டு வரப்பட்டது. பசெல் மாநாட்டின் மூலம் அபாயகரமான கழிவுகளை இயலுமானவரை மனித ஆரோக்கியத்துக்கும், சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் அழிப்பது தொடர்பிலும், அவற்றினால் எவ்வித பாதிப்புகள் ஏற்படுவதை தவிர்ப்பதையும் வலியுறுத்துவதாக அமைந்திருந்தது. இதற்காக பின்வரும் குறிக்கோள்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன:

  • அபாயகரமான மற்றும் இதர கழிவுகளின் எல்லைகடந்த செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது.
  • தலைமுறைகளுக்கு தொடரக்கூடிய அபாயகரமான கழிவுகளை தவிர்ப்பது மற்றும் குறைப்பது.
  • தூய்மையான தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது மற்றும் அவற்றை மாறுவது தொடர்பில் ஊக்குவிப்பது.

இந்த இலக்குகளுக்கு உதவியளிக்கும் வகையில், அபாயகரமான கழிவுகளை கட்டுப்படுத்துவதை மேற்பார்வை செய்தல் மற்றும் ஒழுங்குபடுத்தும் வகையில் அமைந்த கட்டமைப்பு ஒன்றும் ஏற்படுத்தப்பட்டிருந்தது. பன்செல் மாநாட்டின் போது மேற்கொள்ளப்பட்ட ஒழுங்குபடுத்தல்கள் கட்டமைப்பின் சில முக்கிய உள்ளடக்கங்கள் முற்கூட்டியே தீர்மானிக்கப்பட்டிருந்ததுடன், அவற்றில்: மாநாட்டில் பங்கேற்காத நாடுகளுக்கு ஏற்றுமதிகளை தவிர்த்தல்; மீள இறக்குமதிக்கான கடமைக்குரிய சட்டபூர்வ விதிகள்; மற்றும் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட இயக்கங்களை கட்டுப்படுத்துவது தொடர்பிலான பிரிவுகளின் பொறுப்புகள் போன்றன உள்ளடங்கியிருந்தன. அபாயகரமான கழிவுகளை ஏற்றுமதி செய்யும் நாடொன்று, முற்கூட்டியே இறக்குமதி செய்யும் நாட்டுக்கு அறிவித்து, அதற்கான அனுமதியை குறித்த நாட்டிலிருந்தும், மாற்றீடு செய்யும் நாட்டிலிருந்தும் பெற்றிருத்தல் வேண்டும் என்பது பசெல் மாநாட்டின் தீர்மானத்தின் போது வழங்கப்பட்டிருந்த விதி விலக்குகளாக அமைந்திருந்தன. சகல நாடுகளும் வெளிநாடுகளிலிருந்து தமது நாடுகளுக்குள் வரும் அபாயகரமான கழிவுகளை தடை செய்வதற்கான அதிகாரத்தை கொண்டிருப்பது என்பது தீர்மானிக்கப்பட்டது.

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் நாடுகள் குறித்த கழிவுகள் சூழலுக்கு பாதுகாப்பான முறையில் அகற்றப்படுவது அல்லது மீள் சுழற்சி செய்யப்படுவது என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இறக்குமதி செய்யும் மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் மூலம் கையாளப்படும் அபாயகரமான கழிவுகளின் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட இயக்கங்கள் கட்டுப்படுத்தப்பட முடியாதவையாக இனங்காணப்பட்டிருந்தால் அவை எந்த சந்தர்ப்பத்திலும் முன்னெடுக்கப்படக்கூடாது. இறுதியாக, ஒவ்வொரு அபாயகரமான கழிவு அல்லது இதர கழிவு போக்குவரத்து என்பது ஆரம்பிக்கும் பகுதி முதல் முறையாக அழிக்கப்படும் பகுதியில் நிறைவடையும் வரை முறையான அறிக்கையிடலுக்கு உட்படுத்தப்பட வேண்டும். முறையான அனுமதிகள் கிடைத்தவுடன் குறித்த கழிவுகள் சர்வதேச ரீதியில் ஐக்கிய நாடுகளின் மூலம் பரிந்துரைக்கப்பட்ட அபாயகரமான பொருட்களை அனுப்புவது தொடர்பான கருத்துக்களுக்கு அமைய பொருத்தமான பொதியிடல் மற்றும் லேபிள்களுடன் அனுப்பப்படல் வேண்டும்.

BBG

Sri Lanka Connects to Ultra High Speed 100G-Plus Submarine Cable

மேலும் பார்வையிட

பங்காளர்கள்

Learn more about our extensive global partnership portfolio.

மேலும் பார்வையிட

International Network Solutions

Offering services like Co-location, Global IPVPN and more.

மேலும் பார்வையிட

Wi-Fi

Get instant and secure access to High Speed Internet from over 2500 locations across the coutnry.

மேலும் பார்வையிட