செய்திகள், மெருகேற்றங்கள் மற்றும் பெருமளவான பல பெறுமதி வாய்ந்த தகவல்களை வெளியக ஊழியர்கள், உள்ளக ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு சிறந்த பயனுள்ள ஊடகமாக கையடக்க தொலைபேசிகள் அமைந்துள்ளன.

இதனை கருத்தில் கொண்டு, டயலொக் ஆக்சியாடா பிஎல்சி நிறுவனம், தனது புத்தாக்க மற்றும் தொழில்நுட்ப ரீதியில் உயர்ந்த 3 வெவ்வேறு வடிவமைப்புகளில் அமைந்த தீர்வுகளை தனிநபர்களுக்கு அல்லது நிறுவனங்களுக்கு சிக்கனமான முறையில் உதவும் வகையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த தீர்வுகள் அசல் நேர தொடர்பாடல் திறனை பரந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் SMS ஊடாக செயற்படுத்துவதுடன், இலகுவான முறையில் எந்த பகுதியிலிருந்தும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. சிக்கனமான முறையில் ஆரம்ப கட்டணம் எதுவுமின்றி இந்த சேவையை பெற்றுக் கொள்ள முடியும்.

தீர்வு தெரிவு செய்வதற்கான காரணங்கள்
டயலொக் e-SMS Solution குறைந்த செலவு, Microsoft Office toolsகளை பயன்படுத்தும் திறன், கம்பனி வர்த்தக நாம குறியீடுகளை செய்திகளை அனுப்பும் போது பயன்படுத்த தேவையில்லை.
டயலொக் Bulk SMS Solution இது கம்பனிகளின் செய்திகளை அனுப்பும் போது வர்த்தக நாம குறியீடுகளை பயன்படுத்துவதற்கான தேவையை கொண்டுள்ளது.
டயலொக் SMPP Gateway Solution கட்டமைப்பு அல்லது டேடாபேஸ் உடன் ஒன்றிணைக்கப்படக்கூடிய திறன் வாய்ந்தது.

Services