அகலக்கற்றை (புரோட்பேண்ட்) இணையம் என்பது குறிப்பிட்ட கால எல்லைக்குள் பல அலைவரிசைகளாக பிரிக்கப்படக் கூடிய அதிகளவான அதிர்வெண்களை உள்ளடக்கிய அல்லது கையாளும் ஒரு சமிக்ஞை முறையாகும். அலைவரிசை அல்லது அகலகற்றை பரந்தளவில் இருந்தால் தகவல்கல் கொண்டு செல்லும் திறனும் அதிகமாகும். வழக்கமான தகவல் தொடர்பின் போது, ஒரு மோடம் ஒரு நொடியில் 64 கிலோ பைட்ஸ் (Kbit/s) அலைகற்றைகளை தொலைபேசிக் கம்பியினூடாக கடத்தும் ; அதே தொலைபேசிக் கம்பியினூடாக ஒரு நொடியில் அதிகளவான மெகா பைட்ஸ்(Mbits/s) அலைகற்றைகளை புரோட் பேண்ட் தொடர்பினால் கையாளமுடிவதோடு உங்கள் இணைய வேகம் அதிகரித்து செயல்படுவதனை உணரலாம்
உலகெங்குமுள்ள பல்வேறு இயக்குனர்களால் பல்வேறு விதமான 4G தொழினுட்பம் உபயோகிக்கப்படுவதால், உங்கள் ஸ்மார்ட்போன் குறித்த ஒரு நாட்டின் 4G வலையமைப்பில் மட்டும் செயற்படும் வகையில் கட்டமைக்கப்பட்டிருக்கலாம். அதன்காரணமாகவே டயலொக் 4G வலையமைப்பிற்கு பொருத்தமற்றதாக இருக்கலாம்
  • செல்லுமிடமெல்லாம் நேர்த்தியான வீடியோ அனுபவம்
  • மொபைல் HD ஸ்ட்றீமிங்
  • துரித புகைப்பட அப்லோட்கள்
  • இணையத்தளங்கள் விரைவாக லோட் செய்யப்படல்
  • செல்லுமிடமெங்கும் துரித கதியில் பாடல்களை டவுன்லோட் செய்தல்
  • குறுகிய காலப்பகுதிக்குள் ஆவணங்கள் மற்றும் காட்சிப்படுத்தல் கோப்புகளை டவுன்லோட் செய்தல்

Have Another Question?