இலங்கையில் முன்னணிஇணைப்பு வழங்குனரான டயலொக், 400 க்கும் அதிகளவான பிரதான பெறுமதி சேர் சேவைகளையும் மற்றும் Ideamart பங்காளர் தளத்தின் ஊடாக 15,000 சேவைகளையும் கொண்டுள்ளது. இந்த சேவைகளில் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மருத்துவ நியமனங்கள், மின் வணிக கொள்வனவு மற்றும் ஏனைய பொழுதுபோக்கு சேவைகள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

எங்கள் சேவைகளை விரிவுப்படுத்துகையில் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதில் உள்ள வெளிப்படைதன்மையினை வழங்க எந்நேரத்திலும் டயலொக் ஆகிய நாங்கள் முயற்சி செய்கின்றோம்.

உடனடி நடவடிக்கைகளுக்கு எங்களால் தீர்க்கப்படாத விடயங்களை எப்படி அணுக வேண்டும் என்பதை சரிபார்த்து எவ்வாறு செயற்படுத்துவது எவ்வாறு துண்டிப்பது உங்களுடைய இணைப்பினை எவ்வாறு நிர்வகிப்பது மற்றும் சிக்கல்களை எவ்வாறு சரிசெய்வது என்பது பற்றிய அனைத்து விடயங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை எவ்வாறு பார்வையிட முடியும்?

உங்களுடைய குறிப்பிடப்பட்ட இணைப்புக்களை நிர்வகிப்பதன் மூலம் பெறுமதி சேர் சேவைகளின் Call Forward, Call Waiting, Caller Line Identification, Missed Call Alert, SMS Block and Call Block போன்ற சேவைகள் இலவசமாகவும் RingIN Tones, Video Streaming, Content Download, News Alerts, Horoscope checks, lottery related services, Share Credit, காப்புறுதி மற்றும் கடன் சேவை போன்றவற்றை வாடிக்கையாளர்கள் நிதி தேவைக்கு அமையவும் செயற்படுத்திக்கொள்ள முடியும்.

உங்களுடைய முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு இணைப்புகளில் பக்கேஜ் கட்டணம், Voice, Data, IDD, SMS, ரோமிங் மற்றும் பெறுமதி சேர் சேவைகளுக்கான கட்டணங்களும் அரசாங்க வரிகளும் அறவிடப்படும்.

புதிய பெறுமதி சேர் சேவைகள் செயற்படுத்தப்படும் போது கட்டணங்கள் அறவிடப்படும் என ஒரு SMS அனுப்பப்டுகின்றது. அதே சமயம் அந்த சேவைகளை துண்டிப்பதற்கான முறைகளும் குறிப்பிடப்படுகின்றது.

முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு குரல் மற்றும் SMS சேவைகளுக்கான கட்டணங்கள் தங்களின் கணக்கு மிகுதியிலிருந்து கழிக்கப்படும் ஒவ்வொரு முறையும் அறிவிக்கப்படும்.

எனது Dialog இணைப்பில் செயற்படுத்தப்பட்டுள்ள சேவைகளை நான் எவ்வாறு தெரிந்துக்கொள்வது?

பின்வரும் முறைகளை பயன்படுத்தி மேலதிகமாக செயற்படுத்தப்பட்டுள்ள சேவைகள் பற்றிய விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

MyDialog mobile app மூலம்
 

 • படிமுறை 1
  Google Play Store மற்றும் Apple App Store இல் பெற்றுக்கொள்ளக்கூடிய MyDialog app இனை Open செய்யுங்கள்
 • படிமுறை 2
  'Additional Subscribed Services' tab இனை க்ளிக் செய்யுங்கள்
 • படிமுறை 3
  view My Services' tab இனை க்ளிக் செய்வதன் மூலம் செயற்படுத்தப்பட்டுள்ள உங்களுடைய அனைத்து பெறுமதி சேர் சேவைகளையும் பார்வையிட முடியும்.

ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்த வில்லையாயின் அல்லது MyDialog App இல்லையாயின் #678# டயல் செய்யுங்கள்

 • படிமுறை 1
  உங்களுடைய மொபைலில் இருந்து #678# டயல் செய்து USSD மெனுவினை தெரிவு செய்து மற்றும் இலக்கம் 6ஐ தெரிவு செய்து செயற்படுத்தப்பட்டுள்ள அனைத்து சேவைகளையும் பார்வையிடுங்கள்
 • படிமுறை 2
  தெரிவு 1ஐ தேர்வு செய்வதன் மூலம் உங்கள் இணைப்பிற்கு செயற்படுத்தப்பட்டுள்ள அனைத்து சேவைகளையும் பார்வையிட முடியும்.
 • படிமுறை 3
  'Next' மற்றும் 'Previous' தெரிவுகளை பயன்படுத்துவதன் மூலம் செயற்படுத்தப்பட்டுள்ள அனைத்து சேவைகளையும் பார்வையிட முடியும்.

பெறுமதி சேர் சேவைகளை எவ்வாறு செயற்படுத்திக்கொள்வது?

MyDialog mobile app மூலம்
 

 • படிமுறை 1
  Google Play Store மற்றும் Apple App Store இல் பெற்றுக்கொள்ளக்கூடிய MyDialog app இனை Open செய்யுங்கள்
 • படிமுறை 2
  'Value Added Services' tab இனை க்ளிக் செய்து செயற்படுத்த விரும்பும் பெறுமதி சேர் சேவைகளை தெரிவு செய்க
 • படிமுறை 3
  நீங்கள் செயற்படுத்த விரும்பும் சேவையினை தெரிவு செய்து செயற்படுத்துங்கள்

ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்தவில்லையாயின் அல்லது MyDialog App இல்லையாயின் #107# டயல் செய்யுங்கள்

 • படிமுறை 1
  உங்களுடைய மொபைலில் இருந்து #107# டயல் செய்து USSD மெனுவினை Open செய்க
 • படிமுறை 2
  'Next' மற்றும் 'Previous' தெரிவுகளை பயன்படுத்துவதன் மூலம் செயற்படுத்தப்பட்டுள்ள அனைத்து சேவைகளையும் பார்வையிட முடியும்.
 • படிமுறை 3
  நீங்கள் செயற்படுத்த விரும்பும் சேவையினை தெரிவு செய்து செயற்படுத்துங்கள்

ஏனைய செயற்படுத்தல் தெரிவுகள் என்ன?

 • SMS மூலம் - பெறுமதி சேர் சேவைக்கு பொருத்தமான செயற்படுத்தல் குறியீட்டினை டைப் செய்து பொருத்தமான Port க்கு SMS செய்யுங்கள்
 • Outbound Dialer (OBD) – பொருத்தமான தெரிவினை தேர்வு செய்க மற்றும் செயற்படுத்துவதற்கு உறுதிப்படுத்துக
 • Web banners & links – link இனை க்ளிக் செய்து two-factor authentication mechanism இனை பின்பற்றுங்கள்
  குறிப்பு: web banners ஐ பயன்படுத்தி பெறுமதி சேர் சேவைகளை செயற்படுத்தும் போது மற்றும் amp; இணைப்புகள், வாடிக்கையாளர் செயற்படுத்தும் கோரிக்கைகள் பின்வரும் இரண்டு காரணிகள் அங்கீகார வழிமுறைகளில் ஒன்றின் ஊடாக சரிபார்க்கப்படும்:
  • சேவையினை செயற்படுத்தும் போது SMS ஊடாக ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய உறுதிப்படுத்தல் கடவுச்சொல்லினை வாடிக்கையாளர் பெற்றுக்கொள்வார்.
  • Captcha ஊடாக இணையத்தள செயற்படுத்தலினை உறுதிப்படுத்த முடியும்;.
  • Dialog Consent Gateway இல் வாடிக்கையாளர் ஊடாக செயற்படுத்தலினை உறுதிப்படுத்த USSD popup ஒன்று அனுப்பப்படும்.

பெறுமதி சேர் சேவைகளை எவ்வாறு துண்டித்துக்கொள்வது?

MyDialog mobile app மூலம்
 

 • படிமுறை 1
  Google Play Store மற்றும் Apple App Store இல் பெற்றுக்கொள்ளக்கூடிய MyDialog app இனை Open செய்யுங்கள்
 • படிமுறை 2
  'Value Added Services' tab இனை க்ளிக் செய்க
 • படிமுறை 3
  'View My Services' tab இனை க்ளிக் செய்க
 • படிமுறை 4
  நீங்கள் துண்டிக்க விரும்பும் சேவையினை தெரிவு செய்க

ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்தவில்லையாயின் அல்லது MyDialog app இல்லையாயின் #678# டயல் செய்யுங்கள்

 • படிமுறை 1
  உங்களுடைய மொபைலில் இருந்து #678# டயல் செய்து USSD மெனுவினை தெரிவு செய்து மற்றும் இலக்கம் 6ஐ தெரிவு செய்து செயற்படுத்தப்பட்டுள்ள அனைத்து சேவைகளையும் பார்வையிடுங்கள்
 • படிமுறை 2
  'Next' மற்றும் 'Previous' தெரிவுகளை பயன்படுத்துவதன் மூலம் செயற்படுத்தப்பட்டுள்ள அனைத்து சேவைகளையும் பார்வையிட முடியும்.
 • படிமுறை 3
  குறிப்பிட்ட பெறுமதி சேர் சேவையினை தெரிவு செய்க
 • படிமுறை 3
  deactivate தெரிவினை பயன்படுத்தி சேவையினை துண்டியுங்கள்

துண்டிப்பதற்குரிய ஏனைய தெரிவுகள் என்ன?

SMS மூலம் - பெறுமதி சேர் சேவைக்கு பொருத்தமான செயற்படுத்தல் குறியீட்டினை டைப் செய்து பொருத்தமான Port க்கு SMS செய்யுங்கள். சேவை துண்டிக்கப்பட்டவுடன் உறுதிப்படுத்தப்பட்ட SMS தகவல் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும்.


எனது பாவனையினை நான் எவ்வாறு தெரிந்துக்கொள்வது?

MyDialog mobile app மூலம்
 

 • படிமுறை 1
  Google Play Store மற்றும் Apple App Store இல் பெற்றுக்கொள்ளக்கூடிய MyDialog app இனை Open செய்யுங்கள்
 • படிமுறை 2
  கணக்கு மிகுதியினையும் மற்றும் home screen இல் உள்ள போனஸ்களையும் சரிபார்க்கவும்.
  home screen இனை க்ளிக் செய்வதன் மூலம் கணக்கின் செயற்பாடு மற்றும் பாவனை விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.
  குறிப்பு: பாவனையாளரின் அடையாள அட்டை இலக்கத்தில் இணைப்பு பதிவு செய்யப்பட்டிருந்தால் மட்டுமே பாவனை பற்றிய விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்தவில்லையாயின் அல்லது MyDialog app இல்லையாயின் #678# டயல் செய்யுங்கள்

 • படிமுறை 1
  உங்களுடைய மொபைலில் இருந்து #678# டயல் செய்து USSD மெனுவினை தெரிவு செய்து மற்றும் இலக்கம் 6ஐ தெரிவு செய்து செயற்படுத்தப்பட்டுள்ள அனைத்து சேவைகளையும் பார்வையிடுங்கள்
 • படிமுறை 2
  இலக்கம் 2ஐ தெரிவு செய்வதன் மூலம் கடந்த 7 நாட்களுக்கு கட்டணங்கள் அறவிடப்பட்ட விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும். (முற்கொடுப்பனவு இணைப்பிற்கு மட்டும்)

ஆன்லைன் மூலம் : உங்களுடைய சேவைகளை நிர்வகிக்கவும் பார்வையிடவும் dialog.lk இல் My Account portal க்கு செல்லுங்கள்


சேவைகள் செயற்படுத்தப்பட்டிருப்பதை நான் மறந்து விட்டால் அல்லது பயன்படுத்தவில்லையாயின் என்ன செய்வது?

 • செயற்படும் நிலையில் உள்ள வாடிக்கையாளர்கள் - பெறுமதி சேர் சேவைகளுக்கு கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு டயலொக் நிறுவனம் செயற்றிறன் மிக்க மாதாந்த SMS தகவலினை அனுப்பும். எங்களின் சேவைகள் சில ஏற்கனவே இந்த சிறப்பம்சத்தினை கொண்டுள்ளன. சேவையினை செயற்படுத்துவதை வாடிக்கையாளர் மறந்துவிட்டால் சேவையானது செயற்படுத்தப்பட்டுள்ளமையினை நினைவூட்ட மற்றும் உறுதி செய்ய இந்த அறிவித்தல் தகவலினை விரிவு படுத்துகின்றோம். இந்த SMS தகவல் சேவையினை துண்டிப்பதற்கான முறைகளையும் கொண்டுள்ளது.
 • செயற்படுத்தாத வாடிக்கையாளர்கள் – Dialog ஒவ்வொரு வாடிக்கையாளரினதும் சேவைகளுக்கான கட்டணங்களை தொடர்ச்சியாக பரிசிலித்து வருகின்றது. வாடிக்கையாளர்கள் சேவையை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பெற்றுக்கொள்ள வில்லை என்பதை எங்கள் பதிவுகள் மூலம் கண்டறியக்கூடியதாக இருப்பதால் அந்த சேவை பயன்படுத்தப்படாது இருந்தால் அதற்கான குறிக்கோள்கள் அகற்றப்படும். மேலும் வாடிக்கையாளர் பாதுகாப்பினை கருத்திற் கொண்டு 2019ஆம் ஆண்டு பெப்ரவரி 1ம் திகதி முதல் பெறுமதி சேர் சேவைகளுக்கு கட்டணங்களை செலுத்திய வாடிக்கையாளர்களை டயலொக் மதிப்பீடு செய்யும். வாடிக்கையாளர்கள் தொடர்ந்து 90 நாட்கள் சேவையினை பயன்படுத்த வில்லையாயின் அந்த சேவைகள் துண்டிக்கப்படும். துண்டிக்கப்பட்ட சேவைகளை மீண்டும் பெற்றுக்கொள்ள விரும்பினால் மீண்டும் அந்த சேவைகளை செயற்படுத்திக்கொள்ள வேண்டும்.

உங்களுடைய இணைப்பின் பாதுகாப்பினை எவ்வாறு உறுதிப்படுத்திக்கொள்வது?

பாதுகாப்பு செயற்பாடுகளை பயன்படுத்தி உங்களுடைய சாதனத்தினை நீங்கள் பாதுகாத்தல் வேண்டும். தனிப்பட்ட உள்ளடக்கங்கள் கொண்ட App களை அல்லது Folders ஐ பாதுகாப்பு மற்றும் அணுகல் கட்டுப்பாட்டு அமைசங்களை பயன்படுத்தி Lock செய்யுங்கள். மேலும் Data இழக்கப்படுவதை தவிர்ப்பதற்கு device data backup இனை சரியான முறையில் அமைக்க வேண்டும். மேலும் பாவனையாளர்கள் தங்களுடைய சாதனத்தினை இன்னுமொருவருக்கு ஒப்படைக்கும் போது அல்லது சாதனத்தினை பகிர்ந்துக்கொள்ளும் போது எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும்.


உதவிக்கு

 • The MyDialog app
 • #678#டயல் செய்யுங்கள்
 • www.Dialog.lk website
 • மின்னஞ்சல் service@dialog.lk
 • Chat சேவைகள் - http://chat.dialog.lk/Dialog/Chat.htm
 • சமூக ஊடகங்கள் - sm.dialog.lk
 • 1777 1777க்கு அழையுங்கள்
 • ஏதேனுமொரு Dialog வாடிக்கையாளர் சேவை நிலையத்திற்கு விஜயம் செய்யுங்கள்

பிரச்சினைகள் மற்றும் புகார்களை வழங்க :

 • The MyDialog app
 • Dialog.lk இணையத்தளம் - https://www.dialog.lk/browse/complaint.jsp
 • 1777 1777க்கு அழையுங்கள்
 • ஏதேனுமொரு Dialog வாடிக்கையாளர் சேவை நிலையத்திற்கு விஜயம் செய்யுங்கள்

தீர்க்கப்படாத பிரச்சினைகளை தெரியப்படுத்த https://www.dialog.lk/escalation-contact-pointsக்கு செல்லுங்கள்.