ஆசிஆட்டா டிஜிட்டல் Labs மற்றும் டயலொக் ஆசிஆட்டா ஸ்ரீ லங்கா, TM Forum 2020 Excellence விருதினை வென்றுள்ளது.
2020 ஒக்டோபர் 17 (கொழும்பு)
ஆசிஆட்டா குழுமத்தின் டிஜிட்டல் கண்டுபிடிப்பு மற்றும் மென்பொருள் மேம்பாட்டு பிரிவான ஆசிஆட்டா டிஜிட்டல் லேப்ஸ் (ADL), இலங்கையில் உள்ள டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி (டயலொக்) உடன் இணைந்து TM Forum 2020 Excellence விருதினை தட்டிச்சென்றது. உலகளாவிய ரீதியில் காணப்படும் தொலைத்தொடர்பு சேவை வழங்குனர்கள் (CSPs) மற்றும் தீர்வு அபிவிருத்தியாளர்கள் (Solutions Developers) கண்டுபிடிப்பாளர்களின் அதி சிறந்த டிஜிட்டல் மாற்றத்தினை TM Forum 2020 Excellence விருது அங்கீகரிக்கிறது.
வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் நம்பிக்கை பிரிவில் Vodafone UK மற்றும் Infosys ஆகியவற்றுடன் இணைந்து Orange Polska SA, Vlocity, Matrixx Software & Salesforce, China Unicom, Three Ireland மற்றும் Amdocs ஆகிய தரப்படுத்தப்பட்ட நிறுவனங்களை பின்தள்ளி டயலொக் மற்றும் ADL இந்த விருதினை தனதாக்கிக்கொண்டுள்ளது. மிகவும் சிக்கலான டிஜிட்டல் சேவைகளை வடிவமைத்து நிர்வகித்து அதன் மூலம் சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்கி நம்பிக்கை மற்றும் விசுவாசத்தினை உருவாக்கி வணிக வளர்ச்சியை தூண்டும் நிறுவனங்களே இத்தகைய விருதிற்கு தரப்படுத்துப்படுகின்றது.
ஆசிஆட்டா குழுமத்தின் இலங்கை துணை நிறுவனமான டயலொக், நாட்டின் முன்னணி இணைப்பு வழங்குனராக திகழ்வதுடன், 15 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு அதிநவீன மொபைல் தகவல்தொடர்பு சேவைகளையும், 1 மில்லியனுக்கும் அதிகமான வீடுகளுடன் ஒருங்கிணைந்த இணைப்பு நிலையான மற்றும் தொலைக்காட்சி சேவைகளையும் வழங்குகிறது. GSM சங்கத்தின் குளோபல் மொபைல் (GLOMO) விருதுகளை டயலொக் 7 முறை வென்றுள்ளது.
ஆசிஆட்டாவின் பல இயக்கச் சந்தைகளில் செயல்படும் ஆசிஆட்டா டிஜிட்டல் ஆய்வகங்கள், டிஜிட்டல் உருமாற்ற தீர்வுகளின் முன்னணி வழங்குனராகவும் வினையூக்கியாகவும் உருவெடுத்துள்ளது. ADL முன்னர் App Trading Marketplace Catalyst திட்டத்திற்காக TM forum இனால் அங்கீகரிக்கப்பட்டது - 2019 ஆம் ஆண்டில் Digital Transformation ஆசியாவில் TM forum சொத்துக்களின் சிறந்த பயன்பாட்டிற்கான தங்க விருதை வென்றது.
உலக அரங்கில் நிறுவனத்தின் சாதனை குறித்து பேசிய டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழு தலைமை வாடிக்கையாளர் சேவை அதிகாரி சாண்ட்ரா டி சோய்சா, “TM Forum இன் இந்த உலகளாவிய பாராட்டால் நாங்கள் இருவரும் கௌரவிக்கப்படுகின்றோம். எங்கள் வாடிக்கையாளர் சேவை சேனல்களை டிஜிட்டல் முறையில் மாற்றுவது எங்கள் வாடிக்கையாளர்கள் டயலொக்கினை எவ்வாறு, எப்போது தொடர்பு கொள்ள வேண்டும் என்பதைத் தேர்வுசெய்ய அவர்களுக்கு முழு கட்டுப்பாட்டையும் நெகிழ்வுத்தன்மையையும் அளிக்கிறது. துரிதப்படுத்தப்பட்ட டிஜிட்டல் உருமாற்றத்தின் இந்த பயணம் முழுவதும் எங்கள் வாடிக்கையாளர்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து எங்களுக்கு ஆதரவளித்தமைக்கு நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் என மேலும் தெரிவித்தார்.
"டெல்கோஸ் இற்கான எங்கள் டிஜிட்டல் உருமாற்ற தயாரிப்பு தொகுப்பானது உலகளாவிய ரீதியில் உள்ள IT துறையின் முன்னிலையாளர்களுக்கிடையில் நாம் அங்கீகரிக்கப்பட்டதில் மகிழ்ச்சியடைகிறோம். மேம்பட்ட டிஜிட்டல் அனுபவத்தை மேம்படுத்துவதன் மூலம் மேம்பட்ட வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதில் டிஜிட்டல் மயமாக்கலின் ஆற்றலுக்கு இது சாட்சியமாகும்” என்று ஆசிஆட்டா டிஜிட்டல் லேப்ஸ் இன் தலைமை நிர்வாக அதிகாரி துஷர காவ்தாவத்த கூறினார்.
TM Forum என்பது சேவை வழங்குனர்கள் மற்றும் அந்தந்த விற்பனையாளர்களின் உலகளாவிய தொலைத்தொடர்பு சங்கமாகும், மேலும் 180 நாடுகளைச் சேர்ந்த 850 நிறுவனங்களின் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. உலகளாவிய தொலைத் தொடர்புத் துறை இரண்டு டிரில்லியனுக்கும் அதிகமான வருவாயை ஈட்டுகிறது மற்றும் 5 பில்லியனுக்கும் அதிகளவான வாடிக்கையாளர் தளத்தைக் கொண்டுள்ளது.
உதவி தேவையா?
நாம் உங்களுக்கு உதவுவதற்காக எப்போதும் காத்திருக்கின்றோம். எங்கள் அறிவுசார் தளத்திற்கு விஜயம்செய்யுங்கள் அல்லது எம்முடன் 24X7 ம் தொடர்பு கொள்ளுங்கள்
உதவிக்கு செல்லஎக்ஸ்புளோர் அன்ட் ஷொப்
Partners & Other Services
உதவி
- டயலொக் கையடக்க தொலைபேசி இணைப்பு ஒன்றை நான் எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும்?
- எனது கையடக்க தொலைபேசியின் உரிமையினை எவ்வாறு உறுதிப்படுத்திக்கொள்வது ?
- எப்படி நான் எனது டயலாக் டிவி கட்டணப்பட்டியலை பார்க்கலாம்?
- 4G மொபைல் LTE சேவை ஊடாக நான் எதைப் பெற்றுக்கொள்ளலாம்
- கடன் எல்லை நிறைவடைந்துள்ளதா ? தன்னியக்க கடன் வசதியை பெறவும்
- சகல அடிக்கடி கேட்க்கப்படும் வினாக்களையும் பார்வையிட