banner

Dialog முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் எந்நேரத்திலும் தேவை ஏற்படின் கிரடிட் முடிந்தவுடன் Dialogல் இருந்து கிரடிட்டைப் பெற முடியும். 2 வகை Dialog Reload Loan காணப்படுகிறது.

Automatic Loan

இச்சேவைக்கு கட்டணங்கள் எதுவும் இன்றி பதிவு செய்யலாம். உங்கள் Balance 0 வை வந்ததும் உங்கள் கோரிக்கை இல்லாமலே Loan தொகை வந்தடையும். தடங்களின்றி அழைப்பு, SMS மற்றும் Data பாவனைகளை உங்கள் மொபைலில் ஆகக்குறைந்த கிரடிட் மீதி இல்லாத போதும் பாவிக்கலாம்.

  • இச்சேவையை செயற்படுத்த 356 அல்லது #356#க்கு டயல் செய்யுங்கள்
  • 356க்கு அழைத்து விரும்பிய மொழியைத் தெரிவு செய்த பின் 1 ஐ அழுத்தி Automatic Loan ஐ பெற்றுக் கொள்ளுங்கள்.
  • #356# ஐ டயல் செய்து 'Ask For Loan' ஐ தெரிவு செய்க. பின்னர் Automatic Loan ஐ பெற 1 ஐ அழுத்துங்கள்
  • Loan பெறுமதி கிரடிட் மீதி இல்லாத போது தன்னிச்சையாகவே அழைப்பும் Data பாவனைக்கும் உதவும்
  • ரூ.2.00 நிர்ணயிக்கப்பட்ட சேவைக்கட்டணம் 24 மணித்தியாலத்திற்குள் ரீசார்ஜ் செய்தால் கழிக்கப்படமாட்டாது.

One time Loan

உங்கள் மொபைலில் Balance முடிந்தவுடன் One Time Loan வசதியைப் பெறுவதற்கு கோரிக்கை விடுங்கள். ஓவ்வொரு தடவையும் இவ்வசதி தேவைபடும் வேளையில் இச்சேவைக்கு கோரிக்கை விடல் வேண்டும்.

  • இச்சேவையை செயற்படுத்த 356 அல்லது #356#க்கு டயல் செய்யுங்கள்
  • 356க்கு அழைத்து விரும்பிய மொழியைத் தெரிவு செய்த பின் 2 ஐ அழுத்தி One Time Loan ஐ பெற்றுக் கொள்ளுங்கள்.
  • #356# டயல் செய்து 'Ask For Laon' ஐ தெரிவு செய்க. பின்னர் 2 ஐ அழுத்தி One Time Loan ஐ தெரிவு செய்க
  • இச்சேவையைப் பெற்றுக் கொள்ள உங்கள் மொபைல் Balance ரூ.10.00க்கு குறைவாகஇருக்க வேண்டும்.
  • ரூ.2.00 நிர்ணயிக்கப்பட்ட சேவைக்கட்டணம் அறவிடப்படும்
  • Subscribersகளுக்கு இச்சேவையை பெற பதிவு செய்யத் தேவையில்லை

கடன் குறைப்பு பொறிமுறை

அடுத்த Top-up செய்யும் வேளையிலேயே கிரடிட் தொகை கழிக்கப்படும். எனினும் Loan தொகை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ Top-up செய்யப்படும் தொகைக்கேற்ப கழிக்கப்படும். பொறிமுறை பின்வருமாறு.

  • அடுத்த Top-up பெறுமதி Loan மற்றும் சேவைக்கட்டணத்தை விட அதிகமாயின் Loan பெறுமதி முழமையாகக் கழிக்கப்படும்.
  • அடுத்த Top-up பெறுமதி Loan மற்றும் சேவைக்கட்டணத்தை விட குறைவாயின் Loan பெறுமதி பகுதி பகுதியாக ரூ. 10.00 ஐ வாடிக்கையாளரின் அவசர தேவைக்காக ஒதுக்கீடு செய்து கழிக்கப்படும்.
    i.e.
    • Loan பெறுமதி ரூ.90.00 மற்றும் சேவைக்கட்டணம் ரூ.2.00 எனின் மொத்த Loan பெறுமதியாக ரூ. 92.00 கழிக்கப்படும்
    • வாடிக்கையாளர் ரூ. 50.00 Top-up செய்தால் Loan பெறுமதியில் ஒரு பகுதி அதாவது ரூ. 40.00 கழிக்கப்பட்டு ரூ. 10.00 வாடிக்கையாளரின் அவசர தேவைக்காக ஒதுக்கி வைக்கப்படும்.
      Loan Balance ரூ. 40.00 ஐ அறவிட்டு ரூ.52.00 ஐ பின்னர் அறவிடப்படும்.
    • மீண்டும் வாடிக்கையாளர் ரூ. 50.00க்கு Top-up செய்தால் Loan பெறுமதியில் ரூ.40.00 கழிக்கப்பட்டு ரூ.10.00 வாடிக்கையாளரின் அவசர தேவைக்காக விடப்படும்
      Loan Balance - மொத்தமாக ரூ. 80.00 அறவிடப்பட்டு இன்னும் ரூ.10.00 அறவிடப்படவுள்ளது
    • மீண்டும் வாடிக்கையாளர் ரூ.50.00க்கு Top-up செய்தால் மீதி ரூ12.00 கழிக்கப்பட்டு Loan பெறுமதி 0 ஆகிவிடும்.
  • வாடிக்கையாளர் ரூ.92.00 ஐ விட மேலதிகமாக Top-up செய்தால் ஒரே தடவையில் Loan பெறுமதியும் சேவைக்கட்டணமும் கழிக்கப்படும்.

மேலதிக விபரங்கள்

குறிப்புகள்

  • தகுதி பெறுவதற்கு குறைந்த பட்சம் 3 மாதங்களுக்கு வலையமைப்பில் இணைந்திருக்க வேண்டும்
  • 3 மாதங்களுக்கு மேல் எமது வலையமைபின் பாவனையாளராயின் அந்த வாடிக்கையாளருக்கு தனிப்பட்ட ரீதியில் Reload Loan பெறுமதி வழங்கப்படும்
  • முதல் எடுக்கப்பட்ட Loan பெறுமதி முற்றிலுமாக அறவிடப்பட்ட பின்னரே அடுத்த Loan பெறுமதி வழங்கப்படும்
  • வாடிக்கையாளர் தமக்கேற்ற வகையில் அவரவருக்கான அதிகூடிய மற்றும் ஆகக் குறைந்த Loan பெறுமதியை 356 அல்லது #356# க்கு டயல் செய்வதன் மூலம் தனிப்பயனாக்கம் செய்யலாம்.
  • தனிப்பட்ட Loan பெறுமதி ஒவ்வொரு தடவையும் வாடிக்கையாளர் Automatic Loan மற்றும் One Time Loan க்கு மாறும் போதும் மாற்றியமைக்கப்படும்
  • 356க்கு அழைத்து அல்லது #356# ஐ டயல் செய்து செய்றபடுத்தல் பாவனை/Loan பெறுமதி மாற்றம்/ Dialog Reload Loan ஐ துண்டித்தல் போன்ற சேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம்
  • குறிப்பிட்ட நேரத்தில் வாடிக்கையாளருக்கு ஒரு குறிப்பிட்ட சேவையை மாத்திரமே பாவிக்க முடியும்

VAS (பெறுமதி சேர் சேவைகள்) பரிந்துறைக்கப்பட்ட கேள்வி பதில்கள்

3 மாதங்களுக்கு மேலாக வலையமைப்பில் இணைந்திருக்கும் பாவனையாளர்கள் இந்த சேவையினை பெற்றுக்கொள்ள முடியும் (முதலாவது அழைப்பிலிருந்து கணக்கிடப்படுகின்றது.)
அதிகபட்ச கடன் பெறுமதி ரூ.100 ஆகும்
குறைந்தபட்ச கடன் பெறுமதி ரூ.20 ஆகும்
பாவனையாளர் வலையமைப்பில் இணைந்திருக்கும் காலத்தினையும் அவருடைய பாவனையினையும் அடிப்படையாக கொண்டு தீர்மாணிக்கப்படுகின்றது
இல்லை. முன்பு பெற்றுக்கொண்ட கடனினை செலுத்துவதற்கு முன் புதிய கடனினை பெற்றுக்கொள்வதற்கு பாவனையாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்
ஆம், பாவனையாளர்கள் #356# டயல் செய்வதன் மூலம் பெறுமதியினை மாற்றியமைத்துக்கொள்ள முடியும்.