பொருள் விரிவாக்கம்

டயலொக் அதன் சேவைகளுக்கு Amazon Alexa குரல் கட்டளை வசதியை அறிமுகப்படுத்துகிறது

2023 ஜூலை 26         கொழும்பு

 

VIU Mini Prepaid Plans

சிறந்த மற்றும் வசதியான வீட்டுச் சூழல் அமைப்பிற்கான அடுத்த பாரிய அடியை முன்னெடுத்துவைக்கும் வகையில், வாடிக்கையாளர்களுக்கு வசதியான உலகத்தை வழங்கும், இலங்கையின் முதன்மை தொலைத்தொடர்பு இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசி ஆட்டா பிஎல்சி இலங்கையில் முதல் முறையாக தனது பரந்துப்பட்ட அளவிலான சேவைகளுக்கான Amazon Alexa குரல் கட்டளை (Voice Command) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, டயலொக் வாடிக்கையாளர்கள் தற்போது Alexa வசதி கொண்ட வீட்டுச் சாதனங்கள் வழியாக குரல் கட்டளைகள் மூலம் Dialog Mobile, Home Broadband, Television, Doc 990 மற்றும் Star Points சேவைகளை இலகுவாக அணுக முடிவதுடன் கட்டுப்படுத்தவும் முடிகின்றது. Alexaவில் இயங்கக்கூடிய வீட்டுச் சாதனத்தை கொண்டிராத வாடிக்கையாளர்கள், iOS மற்றும் Android சாதனங்களிலும் Alexa Smart phone App மூலம் டயலொக் சேவைகளை கட்டுப்படுத்த முடியும்.

இவற்றிற்கு மேலதிகமாக, Dialog Mobile, Home Broadband மற்றும் Television பில் கட்டணங்களை சரிபார்ப்பதுடன், டயலொக் வாடிக்கையாளர்கள் தமது டேட்டா மிகுதி இருப்பு மற்றும் செயலிழந்த இணைப்பை மீண்டும் இணைத்தல் உட்பட இன்னும் பல்வேறு சேவைகளை அணுக முடியும். மேலும், வாடிக்கையாளர்கள் தங்களுடைய Star Points மிகுதி மற்றும் நடப்பில் உள்ள ஊக்குவிப்பு திட்டங்களை சரிபார்ப்பதுடன், மருத்துவர்கள் மற்றும் பார்வையிடும் மருத்துவர்களின் சந்திப்புகளை எளிதாகச் சரிபார்க்கவும் முடியும்.

இந்தச் சேவை குறித்து தெரிவித்த டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழுமத்தின் பிரதான தொழிற்பாட்டு அதிகாரி லசந்த தெவெரப்பெரும, “டயலொக்கின் சேவைகளுக்கான Amazon Alexa குரல் கட்டளை வசதியை (Voice Command support) ஒருங்கிணைப்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஒருங்கிணைப்பு எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு வசதியான உலகத்தை வழங்குவதுடன், அவர்களின் குரல் மூலம் பலவிதமான டயலொக் சேவைகளை கட்டுப்படுத்த அவர்களுக்கு அதிகாரத்தை வழங்குகின்றது. தொழில்நுட்பத்துடன் நாம் தொடர்பு கொள்ளும் விதத்தில் உண்மையிலேயே ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகின்ற மேம்பட்ட மற்றும் தடையற்ற அனுபவத்தை வழங்குவதற்கான மற்றுமொரு பாரிய படியாக இது அமைவதுடன், நமது வாடிக்கையாளர்களுக்கு சேவையின் எதிர்காலத்தை கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது” என்றார்.

டயலொக் வாடிக்கையாளர்கள் தமது Alexa App இல் skill பிரிவின் கீழ் “My Dialog Service” ஐச் சேர்ப்பதன் மூலம் இந்தச் சேவைகளை அனுபவிக்க முடியும். Amazon Echo Dot மற்றும் Amazon Echo Show உள்ளிட்ட பல்வேறு சமீபத்திய Alexa சாதனங்களை டயலொக் வழங்குகிறது, இதன் விலை ரூ.24,999 ஆகும். மேலதிகமாக, வாடிக்கையாளர்கள் TeDi Alexa சாதனத்தை ரூ. 14,999 க்கு வாங்கலாம். டயலொக் நிலையங்கள் மற்றும் https://www.dialog.lk/smart-home