பொருள் விரிவாக்கம்

Dialog Pay வர்த்தக அமைப்பில் இணைந்துள்ள Asiri Health

2026 ஆகஸ்ட் 18         கொழும்பு

 

இடமிருந்து வலமாக: முதித பிரேமரத்ன, துணைத் தலைவர் - டிஜிட்டல் தளங்கள் மற்றும் கூட்டாண்மைகள் (Digital Platforms and Partnerships), டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; ரோஷனி சேனாநாயக்க, சந்தைப்படுத்தல் தலைவர் (Head of Marketing), Asiri Health.

இலங்கையின் முதன்மைத் தொலைத்தொடர்புக் கட்டமைப்பு வழங்கி நிறுவனமானடயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, Asiri Health நிறுவனத்துடனான தனது கூட்டாண்மையை அறிவித்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் Asiri மருத்துவமனைகள் மற்றும் Asiri ஆய்வகங்களில் Dialog Pay மூலமாகப் பாதுகாப்பான LankaQR செலுப்பனவுகளை (Payments) மேற்கொள்ள முடியும். Asiri Health அமைப்பின்கீழ் சுகாதாரச் சேவைகளைப் பெறும் வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் செலுப்பனவு வசதியை வழங்கும் இக்கூட்டாண்மை, கட்டணம் செலுத்துவதில் கூடுதல் தெரிவுகளையும் நெகிழ்வுத்தன்மையையும் வழங்குவதுடன், தகுதியுடைய LankaQR பரிவர்த்தனைகளுக்கு இலவச Dialog Data வழங்கி வெகுமதியும் அளிக்கிறது.

வாடிக்கையாளர்கள் இப்போது Asiri Health இன் பங்களிப்புப் பெற்ற நிலையங்களில் மருத்துவக் கலந்தாய்வுகள் (Consultations), ஆய்வகச் சேவைகள் (Laboratory services), நோயறிதல் (Diagnostics), மருந்தகக் கொள்வனவுகள் (Pharmacy purchases) மற்றும் பிற பொருந்தக்கூடிய சுகாதாரச் சேவைகளுக்கான கட்டணங்களைச் செலுத்தும் போது Dialog Pay ஐப் பயன்படுத்தலாம். ஒரு கூடுதல் டிஜிட்டல் செலுப்பனவுத் தெரிவை வழங்குவதன் மூலம், இக்கூட்டாண்மை கட்டணம் செலுத்தும் செயன்முறையை எளிதாக்குவதுடன், சுகாதாரச் சேவைகளைப் பெறும்போது கூடுதல் நெகிழ்வுத்தன்மையையும் அளிக்கிறது.

இக்கூட்டாண்மை குறித்து Asiri Health இன் சந்தைப்படுத்தல் தலைவர் திருமதி ரோஷனி சேனாநாயக்க கருத்துத் தெரிவிக்கையில்: "நோயாளிகளின் அனுபவத்தில் சௌகரியம் என்பது ஒரு முக்கியமான அங்கமாகும். மேலும் சுகாதாரத் துறையானது மேலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டதாகவும் இணைக்கப்பட்டதாகவும் மாறி வருகிறது. எங்களது நோயாளிகளுக்குத் தங்களது பரிவர்த்தனைகளைப் பாதுகாப்பாகவும் நடைமுறைக்கேற்ற வகையிலும் நிறைவு செய்வதற்கு ஒரு தெரிவை வழங்குவதுடன், Asiri Health இல் சுகாதாரச் சேவைகளைப் பெறுவதில் டிஜிட்டல் செலுப்பனவுகளை ஒரு இலகுவான அங்கமாக எங்களது Dialog Pay உடனான கூட்டாண்மை மாற்றுகிறது. மென்மேலும் டிஜிட்டல் மயமாக்கப்படும் இலங்கையில், அன்றாடச் செயல்பாடுகளை எளிதாக்குவதற்கும் சுகாதாரச் சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்துவதற்கும் இதுபோன்ற முன்முயற்சிகள் மிக முக்கியமானவை என நாங்கள் நம்புகிறோம்."

Dialog Pay App மற்றும் MyDialog App ஆகியவற்றின் மூலம் கிடைக்கப்பெறும் Dialog Pay, இணைப்புத்தன்மை (Connectivity), டிஜிட்டல் செலுப்பனவுகள் மற்றும் நிதிச் சேவைகளை ஒரே அமைப்பின்கீழ் கொண்டுவருகிறது. இது ஒவ்வொரு இலங்கையருக்கும் டிஜிட்டல் செலுப்பனவுகளை எளிமையாகவும், அணுகக்கூடியதாகவும், மேலும் பலனளிப்பதாகவும் மாற்றுவதற்கான Dialog இன் தொலைநோக்குப் பார்வைக்கு ஆதரவளிக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்களது eZ Cash கணக்கைப் பயன்படுத்தி அல்லது தங்களுக்கு விருப்பமான வங்கிக் கணக்கை இணைப்பதன் மூலம் Dialog Pay ஐ இலகுவாகச் செயற்ப்படுத்தலாம் (Activate). இதன் மூலம் பாதுகாப்பான LankaQR செலுப்பனவுகளை மேற்கொள்ளவும், பணப்பரிமாற்றம் செய்யவும், தங்களது Digital Wallet - ஐ பயன்படுத்தவும், சேமிப்புக் கணக்குகள் மற்றும் நிலையான வைப்புகளைத் திறக்கவும், Dialog Finance மூலமான கடன்களுக்கு விண்ணப்பிக்கவும் முடியும்.

நாடு முழுவதும் 100,000க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களில் ஏற்றுக்கொள்ளப்படும் Dialog Pay, தகுதியுடைய QR செலுப்பனவுகளுக்கு இலவச Dialog Data வை வழங்கி வெகுமதி அளிக்கிறது. இது அன்றாடப் பயன்பாட்டை ஊக்குவிப்பதுடன், இலங்கை டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட்ட, பணப் பயன்பாடு குறைந்த (Cash-light) பொருளாதாரத்தை நோக்கி நகர்வதற்கும் ஆதரவளிக்கிறது. மேலதிக தகவல்களுக்கு, https://dialog.lk/dialog-pay என்ற இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.