டயலொக் தொடர்ச்சியாக 12வது தடவையாகவும் 'ஆண்டின் பிரபலமான தொலைத்தொடர்பு வர்த்தக நாமம்' என்ற விருதை வென்றுள்ளது
2023 மார்ச் 29 கொழும்பு
2023 SLIM KANTHAR மக்கள் விருது விழாவில், டயலொக் நிறுவனம் தொடர்ச்சியாக 12வது தடவையாகவும் 'ஆண்டின் பிரபலமான தொலைத்தொடர்பு வர்த்தக நாமம்' என்ற விருதை வென்றுள்ளது. இலங்கையர்களின் வாழ்வில் தனித்துவமான தாக்கத்தை ஏற்படுத்திய வர்த்தக நாமங்களை அங்கீகரிக்கும் SLIM KANTHAR மக்கள் விருதுகள், இலங்கை மக்களின் இதயங்களுடன் இணைந்த வர்த்தக நாமங்களுக்கு விருதுகளை வழங்கி வருகின்றது.
அதற்கமைய, இலங்கை மக்களின் வாழ்க்கையையும், வர்த்தகங்களையும் வலுவூட்டி, நாட்டின் புத்தாக்கம் மற்றும் டிஜிட்டல் மாற்றத்திற்கான முன்னோடி பணியை நிறைவேற்றுவதன் மூலம், 'ஆண்டின் பிரபலமான தொலைத்தொடர்பு வர்த்தக நாமம்' என்ற விருதை பெறுவதன் மூலம், நாட்டை டிஜிட்டல் மயமாக்கலுடன் வலுவூட்டுவதற்கான டயலொக்கின் அர்ப்பணிப்பு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
SLIM KANTHAR மக்கள் விருது விழாவில் டயலொக்கின் இந்த தனித்துவமான சாதனை குறித்து கருத்து தெரிவித்த டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும பிரதான சந்தைப்படுத்தல் அதிகாரி அமலி நாணாயக்கார, "12 ஆவது தடவையாகவும் 'ஆண்டின் பிரபலமான தொலைத்தொடர்பு வர்த்தக நாமம்' என்ற விருது வழங்கி கௌரவிக்கப்படுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இலங்கை மக்களின் வாழ்வில் ஒரு நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தவும், என்றும் மங்காது ஒரு அர்த்தமுள்ள இணைப்பை உருவாக்கவும் நம்மால் முடிந்துள்ளதை பெருமையாகவும் கருதுகிறோம். 'எதிர்காலம் இன்றே' எனும் நமது வர்த்தக நாம தொனிப் பொருளுக்கமைய உண்மையாகவே, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதில் எங்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கான சான்றாக இந்த விருது அமைந்துள்ளது. எங்கள் வாடிக்கையாளர்களின் விருப்பமான தொலைத்தொடர்பு சேவை வழங்குநராக எங்களைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் எங்கள் மீது காட்டப்படும் நம்பிக்கை மற்றும் நல்லெண்ணத்திற்கு நாங்கள் என்றும் நன்றியுள்ளவர்களாக இருக்கின்றோம்" என்றார்.
SLIM KANTHAR மக்கள் விருது வழங்கும் விழா இந்த ஆண்டு 17 வது முறையாக நடைபெற்றது, மேலும் இந்த விழாவை நாட்டின் சந்தைப்படுத்தலுக்கான தேசிய நிறுவனமான Sri Lanka Institute of Marketing (SLIM) ஏற்பாடு செய்திருந்தது. பல்வேறு துறைகளில் மக்களின் விருப்பப்படி வழங்கப்படும் இந்த விருதுகளுக்காக நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடத்தப்படுவதுண்டு. 15 முதல் 60 வயதுக்குட்பட்ட ஆண்களும் பெண்களும் இந்த கணக்கெடுப்பில் பங்கேற்பார்கள், மேலும் 5 மாத காலப்பகுதியில் நடத்தப்படும் இந்த செயல்முறையின் போது, கணக்கெடுப்பில் பங்களிக்கும் நபர்களுக்கு ஒரு கட்டமைக்கப்பட்ட கேள்விக்கொத்து வழங்கப்படும். இலங்கை மக்களின் இதயங்களுக்கு நெருக்கமான வர்த்தக நாமங்கள் மற்றும் ஆளுமைகள் இந்த விருது வழங்கும் விழாவில் அங்கீகரிக்கபட்டு கௌரவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.