பொருள் விரிவாக்கம்

டயலொக் தனது Star Rewards Loyalty அங்கத்தவர்களுக்கான அற்புதமான வெகுமதிகள் மற்றும் சலுகைகளை அறிவித்துள்ளது

2023 ஜூலை 11         கொழும்பு

 

Star Rewards

இலங்கையின் முதன்மை தொலைத்தொடர்பு இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி வழங்கும் Dialog Star Rewards நிகழ்ச்சித் திட்டமானது, smartphones, Dialog TV, Dialog Home Broadband இணைப்புகள், பங்குதார வணிகர்களிடம் கிடைக்கும் பிரத்தியேக சலுகைகள் மற்றும் பலவற்றில் சிறப்பு தள்ளுபடிகள் உட்பட பல அனுகூலங்களை அதிகரித்துள்ளது.

Dialog Star Rewards Loyalty திட்டம் டயலொக் வாடிக்கையாளர்களுக்கே பிரத்யேகமானது, அதன்படி, ரீலோட்கள் மற்றும் செலுத்தப்பட்ட மாதாந்த பில் கொடுப்பனவுகள் மற்றும் வாடிக்கையாளர் Dialog இல் இருந்த கால அளவு ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட Tier புள்ளிகளின் அடிப்படையிலேயே மேற்படி வெகுமதிகள் மற்றும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. Star Rewards என்பது டயலொக்கின் விரிவான வலையமைப்பின் ஒரு அங்கமாக இருக்கும் அதே வேளையில், அதன் நாடளாவிய ரீதியிலான கூட்டு வணிகர்களுடன் இணைந்து Star Rewards உறுப்பினர்களுக்கு சிறந்த Loyalty சலுகைகளை வழங்குகின்றமை சிறப்பம்சமாகும்.

இந்த வருடம், வாடிக்கையாளர்கள் Dialog Lesi Pay மூலம் மலிவு விலையிலான மாதாந்த தவணைமுறை திட்டங்களுக்கான அணுகலுடன் smartphones, Dialog Home Broadband மற்றும் Dialog Television இணைப்புகளில் 15% வரை விலைக்கழிவையும் அனுபவிக்க முடியும். மேலும், வாடிக்கையாளர்கள் Nawaloka Medicare, Heritance Kandalama, Heritance Ahungalla, Thuryaa Kalutara, Amethyst Resort, Earls Regency, Imtiyaz Designers, Greenmart supermarkets மற்றும் பல வணிக கூட்டாளர்களிடம் 50% வரை தள்ளுபடியை பெற்றுக்கொள்ள முடியும். மேலும், Dialog Star Rewards திட்டமானது வாடிக்கையாளர்களுக்கு வருடம் முழுவதும் பலதரப்பட்ட அனுகூலங்களை வழங்குவதுடன், அவர்களின் வெகுமதி அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் Dialog Star Rewards Loyalty நிலையைச் சரிபார்த்து உங்களுக்கான வெகுமதிகள் மற்றும் சலுகைகளைப் பெற, MyDialog App இல் உள்ள Star Loyalty பகுதியைப் பார்வையிடவும், https://www.dialog.lk/ ஐ பார்வையிடவும் அல்லது #141#க்கு டயல் செய்யவும்.