டயலொக் ஆசிஆட்டா நிறுவனம் SASB மற்றும் GSMA தரநிலைகளை கைக்கொள்ளும் தெற்காசியாவின் முதல் தொலைத்தொடர்பு நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது
டயலொக் நிலைபெறுதகு அறிக்கை - 2022 ஆனது ESG மற்றும் நிலைபெறுதகு அறிக்கையிடல் மீதான GRI, SASB மற்றும் GSMA வழிகாட்டல்களை உறுதிப்படுத்தியுள்ளது
2023 செப்டம்பர் 18 கொழும்பு
இலங்கையின் முதன்மை இணைப்பு வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, நிலைபெறுதகு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான அதன் உறுதிப்பாட்டில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளதன் மூலம், நிலைபெறுதகு கணக்கியல் தரநிலை சபை (SASB -Sustainability Accounting Standards Board) மற்றும் மொபைல் தொலைத்தொடர்பு கட்டமைப்பிற்கான உலகளாவிய அமைப்பு (GSMA - Global System for Mobile Communications Association) ஆகியன உட்பட உலகளாவிய அறிக்கையிடல் முன்முயற்சி (GRI -Global Reporting Initiative) அறிக்கையிடல் தரநிலைகள் சகிதம் தெற்காசியாவில் முதன்மை தொலைத்தொடர்பு சேவை வழங்குனர் என்ற சிறப்பை பெற்றுள்ளது.
உலகளவில் நிலைபெறுதகு அறிக்கையிடலுக்கான தங்கத் தரத்தை கொண்டதாக அங்கீகரிக்கப்பட்டுள்ள GRI தரநிலைகளுக்கு இணங்கும் வகையில் 15 ஆண்டுகால பாரம்பரியத்தை கட்டியெழுப்புவதுடன், 2023 இல் SASB மற்றும் GSMA தரநிலைகளையும் டயலொக் ஏற்றுக்கொண்டுள்ள அதேவேளை, தொலைத்தொடர்பு துறையில் உள்ள தனித்துவமான சவால்கள் மற்றும் வாய்ப்புகளை எதிர்கொள்ளும் வகையில் அதன் வடிவமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். இவ்வாறு இந்த கூடுதல் அறிக்கையிடல் கட்டமைப்பை ஏற்றுக்கொள்வதன் மூலம், டயலொக் தனது சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாகம் (ESG environmental, social and governance) ஆகிய நிகழ்ச்சி நிரல் மற்றும் அறிக்கையிடல் நடைமுறைகளை மேலும் மேம்படுத்துவதை இலக்காக கொண்டு செயற்படுகின்றது எனலாம். அதற்கமைய, ஒரு முன்னணி ESG சாதனையாளராக, நிகர பூஜ்ஜிய காபனீரொக்சைட் (CO 2) வெளியீட்டை அடைவது உட்பட, நிறுவனத்தின் நிலைபெறுதகு இலக்குகளால் எடுத்துக்காட்டப்பட்ட, நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் டயலொக் உறுதிபூண்டுள்ளது. டயலொக்கின் சமீபத்திய நிலைபெறுதகு அறிக்கையானது, 2022 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் நிலைபெறுதகு செயல்திறன் பற்றிய விரிவான ஒரு பார்வையை வழங்குகிறது, இது காலநிலை நடவடிக்கை, சமூகப் பொறுப்பு மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.
டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுப்புன் வீரசிங்க இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில், “GRI தரநிலைகளுக்கான எமது நீண்டகால அர்ப்பணிப்புடன் கூடிய SASB மற்றும் GSMA அறிக்கையிடல் தரங்களை ஏற்றுக்கொண்டு தெற்காசியாவில் ஒரு முன்னோடி முன்மாதிரியை அமைப்பதையிட்டு நாம் பெருமை கொள்கிறோம். இந்த அடைவானது ESG சிறப்பிற்கான எங்கள் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுவதுடன் நிலைபெறுதகு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான நமது அசைக்க முடியாத அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்றது, இது எங்கள் தொழில்துறையில் மட்டுமன்றி அதற்கு அப்பாலும் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக, நிலையான எதிர்காலத்தை நோக்கிய பொறுப்பினை வழிநடத்துவதையிட்டு நாங்கள் பெருமை கொள்கின்றோம் " என்றார்.
இதேவேளை, நிலைபெறுதகு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான அர்ப்பணிப்பிற்காக டயலொக் பல பாராட்டுக்களைப் பெற்றுள்ளதுடன், 2021/2022 நிலைபெறுதகு அறிக்கையிடலுக்கான சிறந்த அர்ப்பணிப்பிற்காக ACCA நிலைபெறுதகு அறிக்கையிடல் விருதுகளில் டயலொக் ஒட்டுமொத்த வெற்றியாளராகவும் பொது சேவைகள் பிரிவின் வெற்றியாளராகவும் அங்கீகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும், 2021 ஆண்டுக்கான e-Swabhimani (ஈ -ஸ்வபிமானி) விருது வழங்கலின் போது டயலொக் அதன் டிஜிட்டல் உள்ளடக்கத்திற்கான 'சயுரு', 'யெஹெலி' மற்றும் 'சரு' ஆகிய சமூக முதலீட்டு முயற்சிகளுக்காக விருது வழங்கி கெளரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இந்த சமூக முதலீட்டு முயற்சிகளானது உள்ளடக்கல், அதிகாரமளித்தல் மற்றும் சுற்றுச்சூழல் நிலைபெறுதகு ஆகிய ஊக்குவிப்புகளை கொண்டதாக அமைந்துள்ளமை அவற்றின் சிறப்பம்சமாகும்.
அத்துடன், Dialog இன் Karuna.lk சேவையானது SLASSCOM திறன்சார் தேசிய விருதுகளில் தொழில்நுட்பத்தை நற்செயல்களுக்காக பயன்படுத்துவதற்கான அதன் ஒப்புவமையில்லா தகைமையை அங்கீகரிக்கும் வகையில், SLASSCOM தேசிய திறன்சார் விருதுகள் 2023 இல் 'நற்செயல்களுக்கான சிறந்த மென்பொருள் கண்டுபிடிப்பு அல்லது புத்தாக்கம்’ என்பதற்கான தேசிய விருதைப் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
Dialog இன் நிலைபெறுதகு அறிக்கைகளை https://dlg.lk/3sJqvkt மூலம் அணுகலாம்