பொருள் விரிவாக்கம்

டயலொக் கட்டுக்கடங்கா இணையத்தேவைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் புதிய Unlimited Blaster பக்கேஜை அறிமுகப்படுத்துகிறது

2024 ஏப்ரல் 24         கொழும்பு

 

Dialog, Axiata Group and Bharti Airtel sign Definitive Agreement to Merge Operations in Sri Lanka

இலங்கையின் #1 இணைப்பு வழங்குனாரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, வாடிக்கையாளர்களின் அதிகரித்துவரும் இணையத்தேவையை கருத்தில் கொண்டுபுதிய ரூ.1299 Unlimited Blaster பக்கேஜை அறிமுகப்படுத்துகிறது. சமூகவலைத்தளங்களில் வேண்டியளவு நேரத்தை செலவிட இந்த பக்கேஜ் உதவிடும்அதேவேளை இதர பல இணையத்தேவைகளை பூர்த்தி செய்யவும் போதுமானளவுDataவை வழங்குகிறது. எந்த வலையமைப்பு என்று கவலைப்படாமல்மணிக்கணக்கில் உறவுகளோடு உரையாடிடக்கூடிய வசதியோடு, Facebook, WhatsApp மற்றும் YouTube ஆகிய தளங்களுக்கு எவ்விதமான data கட்டுப்பாடும்இல்லை. அதேவேளை வாடிக்கையாளர்கள் தமது இதர இணையத்தேவைகளைபூர்த்தி செய்வதற்கு 15GB வழங்கப்படும். இது 30 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

மக்களின் தேவை அறிந்து சேவையாற்றும் நிறுவனம் என்ற நாமத்திற்கு சான்றுபகரும் வகையில் இந்த பக்கேஜ் அறிமுகமாகிறது என்றால் மிகையில்லை. ஏற்கனவே ரூ.919 Unlimited Blaster பக்கேஜ் மக்கள் மத்தியில் ஏகோபித்தவரவேற்பை பெற்ற நிலையில் அதனை எங்ஙனம் மேலும் சிறப்பிக்கலாம் என்றயோசனைக்கு அமைய, என்ன தான் மக்கள் Facebook, WhatsApp மற்றும்YouTube ஆகிய வலைத்தளங்களை பெருவாரியாக பயன்படுத்தினாலும்அவர்களது நண்பர்களோடு மணிக்கணக்கில் அளவளாவ இது வசதியாகஅமைந்தாலும் இந்த டிஜிட்டல் யுகத்தில் கல்வி, பணப்பரிமாற்றம், விளையாட்டு, புத்தாக்கம், வணிகம் என அவரவர் தேவைக்கு ஏற்ப பிற வலைத்தளங்களின்பயன்பாடு என்பது தவிர்க்கமுடியாத ஒன்று. அவ்வாறான தேவைகளை கருத்தில்கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த பக்கேஜ் முழுமையானஇணையப்பாவனைக்கான அனுபவத்தை அளிக்கும் என்பதில் ஐயமில்லை.

புதிய ரூ.1299 Unlimited Blaster ஆனது எந்த வலையமைப்பிற்கும் Unlimited Calls மற்றும் 1000 SMS என மாதம் முழுவதும் வாடிக்கையாளர்களின்தொடர்பாடல் தேவையை செவ்வனே பூர்த்தி செய்கிறது. அதேவேளை Facebook, WhatsApp மற்றும் YouTube ஆகிய வலைத்தளங்களுக்கு Unlimited அணுகலைவழங்குகிறது. இவற்றுடன் சேர்த்து மற்றுமொரு சிறப்பம்சமாக 15GB Dataவையும்அளிக்கிறது. இதற்கு காலை, மாலை என எவ்விதமான நேரக்கட்டுப்பாடோ, இன்றைய நாளைக்கு இவ்வளவு GB என்ற வரையறையோ இல்லை. வாடிக்கையாளர்கள் பக்கேஜை செயற்படுத்திய நாளிலிருந்து 30 நாட்களுக்குள்தமது விருப்பம்போல இந்த Dataவை பயன்படுத்திக்கொள்ள முடியும். உண்மையான Unlimited அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதில்டயலொக் எப்போதும் கண்ணாயிருக்கிறது. மேலும் 30 நாட்களுக்கு எந்தவொருவலையமைப்பிற்கும் Unlimited Calls மற்றும் 1000 SMS, Unlimited Facebook, WhatsApp மற்றும் YouTube தரும் ரூ.919 Unlimited Blaster பக்கேஜ் அத்தோடு 7 நாட்களுக்கு Unlimited Calls மற்றும் Unlimited Facebook, WhatsApp மற்றும்YouTube உடன் 2GB மேலதிக Anytime Data தரும் ரூ.307 Unlimited Blaster பக்கேஜ் ஆகியனவும் வாடிக்கையாளர்களின் தெரிவுக்காக உள்ளன என்பதுகுறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்களுக்கு https://dlg.lk/495en ஐ பார்வையிடவும்.