பொருள் விரிவாக்கம்

சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருதுகள் 2022 | டயலொக் ஆசிஆட்டா ஊடகத்தின் மேன்மையை போற்றியது

2023 டிசம்பர் 14         கொழும்பு

 

சிறந்த கட்டமைக்கப்பட்ட செய்தி இணையத்தளத்துக்கான விருதை வென்றது Dailyft.lk – விருதை டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் வர்த்தகநாம மற்றும் ஊடக துணைத்தலைவர் ஹர்ஷ சமரநாயக்க அவர்கள் வழங்குகிறார்

இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருதுகள் 2022 இற்கு டிஜிட்டல் ஊடக அனுசரணையாளராக தனது ஆதரவை 8வது முறையாக வழங்கியது. 2014 முதல் ஊடகத்துறையின் சாதனைகளுக்கு தன் நிலையான ஆதரவை அளித்துவருவதுடன் ஊடகவியலின் மேன்மையை வளப்படுத்த தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருவதை இது எடுத்துக்காட்டுகிறது. பெருமதிப்புடன் 24வது முறையாக இடம்பெறும் “சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருதுகள் 2022” மௌண்ட் லவினியா ஹோட்டலில் நடைபெற்றது. இலங்கையில் அளப்பரிய பங்காற்றிய மும்மொழி அச்சு ஊடகங்களையும் கொண்டாடும் வகையில் இது இடம்பெற்றது. இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும் பிற சங்கங்களுடன் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன. இந்த வைபவம் ஊடகவியலில் அபரிமிதமான தொழில்நேர்த்தியை வெளிப்படுத்துவோரை அங்கீகரித்து விருது அளித்தது.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் வர்த்தகநாம மற்றும் ஊடக துணைத்தலைவர் ஹர்ஷ சமரநாயக்க அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருதுகள் 2022 இற்கான டிஜிட்டல் ஊடக அனுசரணையாளராக ஆதரவளித்து ஊடகத்துறையின் வளர்ச்சிக்கு உதவுவதை எண்ணி பெருமிதம் கொள்கிறோம். தகவலறிந்த சமூகங்களை வளப்படுத்துவதிலும் சமூகங்களை செதுக்குவதிலும் ஊடகங்கள் ஆற்றும் முக்கிய பங்கை டயலொக் ஆசிஆட்டா அங்கீகரிக்கின்றது. 2014 முதல் இடையறாது நாம் அளித்து வரும் ஆதரவே நாம் ஊடகங்கள் மீது கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு சான்று பகர்கின்றது.”

சிறந்த கட்டமைக்கப்பட்ட செய்தி இணையத்தளத்துக்கான விருதை வென்றது Aruna.lk – விருதை டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் வர்த்தகநாம மற்றும் ஊடக துணைத்தலைவர் ஹர்ஷ சமரநாயக்க அவர்கள் வழங்குகிறார்

சிறந்த கட்டமைக்கப்பட்ட செய்தி இணையத்தளத்துக்கான விருதை வென்றது Dailymirror.lk – விருதை டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் வர்த்தகநாம மற்றும் ஊடக துணைத்தலைவர் ஹர்ஷ சமரநாயக்க அவர்கள் வழங்குகிறார்

சிறந்த கட்டமைக்கப்பட்ட செய்தி இணையத்தளத்துக்கான விருதை வென்றது Lankadeepa.lk – விருதை டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் வர்த்தகநாம மற்றும் ஊடக துணைத்தலைவர் ஹர்ஷ சமரநாயக்க அவர்கள் வழங்குகிறார்

சிறந்த கட்டமைக்கப்பட்ட செய்தி இணையத்தளத்துக்கான விருதை வென்றது Virakesari.lk – விருதை டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் வர்த்தகநாம மற்றும் ஊடக துணைத்தலைவர் ஹர்ஷ சமரநாயக்க அவர்கள் வழங்குகிறார்

சிறந்த காணொளி கதை கூறலுக்கான விருதை வென்றது வீரகேசரி டிஜிட்டல் - திறமை சான்றிதழை டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் வர்த்தகநாம மற்றும் ஊடக துணைத்தலைவர் ஹர்ஷ சமரநாயக்க அவர்கள் வழங்குகிறார்

சிறந்த காணொளி கதை கூறலுக்கான விருதை வென்றது வீரகேசரி டிஜிட்டல் – விருதை டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் வர்த்தகநாம மற்றும் ஊடக துணைத்தலைவர் ஹர்ஷ சமரநாயக்க அவர்கள் வழங்குகிறார்

சிறந்த கட்டமைக்கப்பட்ட செய்தி இணையத்தளத்துக்கான விருதை வென்றது Tamilmirror.lk – விருதை டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் வர்த்தகநாம மற்றும் ஊடக துணைத்தலைவர் ஹர்ஷ சமரநாயக்க அவர்கள் வழங்குகிறார்