பொருள் விரிவாக்கம்

Dialog Club Vision அங்கத்தவர்கள் பொன்னியின் செல்வன் 2 பிரத்தியேக திரையிடலை கண்டுகளித்தனர்

2023 மே 19         கொழும்பு

 

Dialog Club Vision Members Enjoy Exclusive Screening of Ponniyin Selvan 2

இவ்வாண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் 2, யாழ்ப்பாணம் Regal Silver திரையரங்கில் Dialog Club Vision அங்கத்தவர்களுக்கென பிரத்தியேகமாக திரையிடப்பட்டது. தமிழ் சினிமாவின் பல ஆண்டுகள் கனவான இத்திரைப்படம் Dialog Club Vision அங்கத்தவர்களுக்கென பிரத்தியேகமாக திரையிடப்பட்டவேளையில் அவர்கள் தமது அன்புக்குரியவர்களுடன் கண்டுகளித்தனர். அங்கத்தவர்கள் திரைப்படத்தின் பிரமிக்கவைக்கும் காட்சிகளையும், நடிகர்களின் நடிப்பையும் பல்லாண்டு பழைமை வாய்ந்த நாவல் திரைக்கதையாக வடிவமைக்கப்பட்ட விதத்தையும் வாயார புகழ்ந்தனர். Dialog Club Vision அங்கத்தவர்களுக்கு கிடைக்கப்பெறும் ஏராளமான அனுகூலங்களில் இதுவும் ஒன்று. தனது அங்கத்தவர்களுக்கு பிரத்தியேகமான சேவை தனித்துவமான அனுபவங்களையும் வழங்கும் அர்ப்பணிப்புக்கு இதுவும் ஒரு சான்று.