பொருள் விரிவாக்கம்

டயலொக் சிறப்புத்தேர்ச்சி புலமைப்பரிசில் திட்டம், கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் இணைந்து தனது 20வது ஆண்டில் தடம் பதிக்கிறது

2023 நவம்பர் 30ந்திகதி         (கொழும்பு)

 

 Official Website to Support Inclusive Online Journeys

Photographed left to right: Nihal Ranasinghe, Secretary to the Ministry of Education, Hon. Susil Premajayantha, Minister of Education, Supun Weerasinghe, Group Chief Executive, Dialog Axiata PLC, and Asanga Priyadarshana, Head of Sustainability and Group Chief of Risk and Compliance, Dialog Axiata PLC

கல்விக்கான சமமான அணுகலை அளிக்கும் கூட்டு நோக்கத்துடன் கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் இணைந்து க. பொ.த சா/த மற்றும் க.பொ.த உ/த பரீட்சைகளில் மாவட்ட ரீதியில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி அளிக்கும் டயலொக் சிறப்புத்தேர்ச்சி புலமைப்பரிசில் திட்டம் 20ம் ஆண்டை பூர்த்தி செய்யும் இவ்வேளையில், தமக்கிடையிலான ஒப்பந்தத்தை புதுப்பிக்கவுள்ளமையை அறிவித்துள்ளனர்.

இந்த புதுப்பித்தல் வைபவம் கல்வி அமைச்சர் கலாநிதி. சுசில் பிரேமஜயந்த அவர்களின் தலைமையில் கல்வி அமைச்சில் இடம்பெற்றது. 2023இல் க.பொ.த உ/த பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற 81 மாணவர்களும் க. பொ.த சா/த பரீட்சையில் நல்ல பெறுபேறுகளை பெற்ற 77 மாணவர்களும் அவர்களது அபரிமிதமான திறமைக்கேற்ப இந்த மதிப்புமிக்க திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனர். அளப்பரிய திறன்களை வெளிக்காட்டிய இம்மாணவர்களை கௌரவிக்கும் இந்த அங்குரார்ப்பண வைபவம் கல்வி அமைச்சு கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 2002 இல் வித்திடப்பட்ட நாள் முதல் இன்று வரை மொத்தமாக ரூ.120 மில்லியன் நிதி கல்விவளத்தை ஊட்டும் வகையில் டயலொக் சிறப்புத்தேர்ச்சி புலமைப்பரிசில் திட்டம் மூலமாக பகிர்ந்தளிக்கப்பட்டது.

இந்த முன்னெடுப்பை பற்றி உரையாற்றிய கௌரவ கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்கள், “டயலொக் மற்றும் கல்வி அமைச்சு ஆகியன க.பொ.த சா/த மற்றும் உ/த பரீட்சைகளில் சித்தியெய்தியவர்களுக்கு திறன் அடிப்படையிலான புலமைப்பரிசில்களை அளிப்பதற்கான ஒப்பந்தத்தை புதுப்பித்துக்கொண்டன. ஆரம்பத்தில் உயர்தரத்தில் பௌதிகவியல் விஞ்ஞான பிரிவை பின்பற்றவுள்ள மாணவர்களுக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டிருந்த இந்த திட்டம் தற்போது விரிவடைந்து ஏனைய பிரிவுகளில் கற்கும் மாணவர்களுக்கும் உதவி புரிகின்றது. இந்த ஒப்பந்தம் மற்றும் நெனஸ தொலைதூர கல்வித்திட்டம் போன்ற இவ்வாறான முன்னெடுப்புகள் கல்வியை ஆதரிப்பதில் டயலொக் கொண்டுள்ள ஒப்பற்ற முனைப்பை எடுத்துக்காட்டுகிறது” என்றார்.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்க அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “மேன்மை பொருந்திய அதன் 20ம் ஆண்டில் கல்வி அமைச்சுடனான டயலொக் சிறப்புத்தேர்ச்சி புலமைப்பரிசில் திட்ட ஒப்பந்தத்தை நாம் புதுப்பிக்கிறோம். இதன் மூலம் கல்விக்கான சமமான அணுகலை ஏற்படுத்தும் எமது கூட்டு நோக்கத்தை மீளஉறுதிப்படுத்துகின்றோம். தேவையுள்ள நல்ல திறமைவாய்ந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசிலை வழங்குவதன் மூலம் அடுத்த தலைமுறை தலைவர்களையும் மாற்றத்தை கொண்டு வருபவர்களையும் வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளோம். ஒளிமயமான எதிர்காலத்திற்காக மாற்றத்தை தரும் வாய்ப்புகளை உருவாக்கி பாதை வகுப்பதை நாம் தொடர்ந்தும் செய்வோம்” என்றார்.

குழந்தைகளுக்கு தரமான கல்வியை சமமாக அணுகுவதற்கான அதன் உறுதிப்பாட்டிற்கு இணங்க, டயலொக் நெனச தொலைக்காட்சி, நெனச ஸ்மார்ட் பள்ளிகள் மற்றும் டயலொக் சிறப்புத்தேர்ச்சி புலமைப்பரிசில் திட்டம் போன்ற முன்னெடுப்புகளை உள்ளடக்கியதாக இன்றுவரை கல்வித்துறையில் ரூ. 1 பில்லியனுக்கும் அதிகமாக முதலிட்டுள்ளது. டயலொக் சிறப்புத்தேர்ச்சி புலமைப்பரிசில் திட்டமானது கற்றல் திறனை அங்கீகரிப்பதற்கு அப்பால், ஐக்கிய நாடுகளின் பேண்தகு நிலையான வளர்ச்சி இலக்கு 4: தரமான கல்விக்கு பங்களிக்கும் வகையில் டயலொக்கின் பரந்த பார்வையுடன் சேர்த்து, மாற்றங்கள்மிக்க வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த பரந்த அணுகுமுறையானது, உட்சேர்க்கைமிக்க, சமமான கல்விக்கான அணுகலை உறுதி செய்வதிலும், அனைவருக்கும் வாழ்நாள் முழுவதும் கற்றல் வாய்ப்புகளை ஊக்குவிப்பதிலும், அதன் மூலம் பிரகாசமான மற்றும் பேண்தகு நிலையான எதிர்காலத்தை வடிவமைப்பதில் டயலொக் காட்டும் அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கிறது.