பொருள் விரிவாக்கம்

இலங்கை மக்களுக்கு இந்திய மொழியில் மிகப்பெரிய உள்ளடக்கத்தினை கொண்டு வருவதற்கானமூலோபாய பங்காளித்துவத்தை டயலொக் மற்றும் ZEE5 அறிவித்துள்ளது.

2019 பெப்ரவரி 20         கொழும்பு

 

news-1

 

இலங்கையின் பிரதான இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இலங்கை பார்வையாளர்களுக்கு Dialog ViU ஊடாக 100,000 மணி நேர இந்திய உள்ளடக்கங்களை வழங்குவதற்காக இந்திய மொழி உள்ளடக்கத்திற்கான மிகப்பெரிய டிஜிட்டல் பொழுது போக்கு தளமான ZEE5 உடன் ஒரு முக்கிய மூலோபாய பங்காளித்துவத்தை அறிவித்துள்ளது.

இப்போது 190க்கும் அதிகளவான நாடுகளில் காணப்படும் ZEE5 ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, மராத்தி, பெங்காலி, ஓரியா, போஜ்பூரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி மொழிகளிலும் பல வகையான மற்றும் பல மொழி உள்ளடக்கங்களை மிகப்பெரியளவில் வழங்கி வருகின்றது. ZEE5 ஆனது 12 மொழிகளில் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை மற்றும் உடல் நலம் தொடர்பான நிகழ்ச்சிகள், வாழ்க்கை முறை பற்றிய வீடியோக்கள் போன்றவற்றின் உள்ளடக்கங்களை 1,00,000 மணி நேரங்கள் வழங்குகின்றது. மேலும் இது 60க்கும் மேற்பட்ட பிரபலமான நேரடி தொலைக்காட்சி சேனல்களுடன் விரிவான Live TV இனையும் கொண்டுள்ளது.

காணப்படும் 12 மொழிகளில் நீங்கள் விரும்பிய மொழியில் உள்ளடக்கங்களை தனிப்பயனாக்கக்கொள்ள கூடியதுடன், நீங்கள் ஒரு பாடலை பாடுவதன் மூலம் அந்த பாடலை தேடிக்கொள்ளக்கூடிய வசதியினையும் கொண்டுள்ளதுடன், நீங்கள் விரும்பியவற்றை டவுன்லோட் செய்து Offline இல் பார்க்கக்கூடிய வசதியினையும், HD தரத்திலான வீடியோக்களையும் adaptive bit rate streaming போன்ற தனிப்பயனாக்கப்பட்ட சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் உலாகளாவிய மற்றும் உள்ளடக்க சேவைகளின் சிரேஷ்ட பொது முகாமையாளர் மங்கள ஹெட்டியாராச்சி இந்த நிகழ்வில் உரையாற்றிய போது ZEE5 இணைந்தமையினையிட்டு நாங்கள் பெருமிதம் கொள்கின்றோம். இது எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பிராந்தியத்தின் சிறந்த உள்ளடக்க நூலகங்களில் ஒன்றை திறப்பதன் மூலம் உள்ளடக்க portfolio ஐ பலப்படுத்துகின்றது. இணைய திரையில் எந்தவிதமான விளம்பரங்களும் இன்றி டயலொக் வாடிக்கையாளர்கள் இலங்கையின் சிறந்த வீடியோ வலையமைப்பில் சிறந்த இணைய உள்ளடக்கத்தை காணலாம் என தெரிவித்தார்.

உலகளாவிய ZEE5 நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி அர்ச்சனா ஆனந்த் உரையாற்றிய போது டயலொக் ஆசிஆட்டா வுடன் நாங்கள் ஒரு பங்காளியாக இணைந்திருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம். டயலொக் வாடிக்கையாளர்கள் இப்போது 12 மொழிகளில் 1,00,000 மணிநேர உள்ளடக்கத்தை ஒரே இடத்திலிருந்து இந்த உள்ளடக்கத்தின் மிகப்பெரிய நூலகத்தை அணுகிடலாம். பொழுதுபோக்கு உள்ளடக்கத்திற்கான சிறப்பான சந்தையை நோக்கி இலங்கை துரிதமாக வளர்ந்து வருகின்றது. மேலும் இந்த வாய்ப்பினை கூட்டு ரீதியாக ஆராய்வதற்கு டயலொக் ஆசிஆட்டாவுடன் இணைந்து எதிர்நோக்குகின்றோம் என தெரிவித்தார்.

Dialog ViU பாவனையாளர்கள் மாதத்திற்கு இலங்கை ரூபாய் 350க்கு பிராந்தியத்தின் சிறந்த உள்ளடக்க நூலகங்களின் ஒன்றை அணுகிட முடியும். டயலொக் வாடிக்கையாளர்கள் ZEE5 Originals Karenjit Kaur மற்றும் Zero Kms, Veere Di Wedding போன்ற பாலிவுட் வெற்றி நிகழ்ச்சிகளையும் பார்வையிட முடியும். மேலும் செம்பருத்தி, பூவே பூச்சூடவா, யாரடி நீ மோகினி போன்ற பிரபலமான நாடகங்களையும் கல்லாச்சிரிப்பு, அமெரிக்கா மாப்பிள்ளை போன்ற நகைச்சுவை நிகழ்ச்சிகளையும் மெர்சல் போன்ற மிக வெற்றி கண்ட blockbusters திரைப்படங்களையும் பார்வையிட முடியும்.