பொருள் விரிவாக்கம்

Google Play Storeக்கான நேரடி கேரியர் பில்லிங் வசதிகளை வழங்கும் டயலொக்.

நவம்பர் 22, 2019         Colombo

 

news-1

 

இலங்கையின் முதன்மை இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பி.எல்.சி, பாவனையாளர்கள் தங்கள் சாதனங்களில் Google Play Store லிருந்து அப்களை, கேம்களை, டிஜிட்டல் உள்ளடக்க சேவைகளை, in-game/in-app களை வாங்குதல், திரைப்படங்கள், சந்தாக்கள் மற்றும் பலவற்றை எளிதாக வாங்குவதற்காக, google உடன் நேரடி கேரியர் பில்லிங் சேவையினை ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளது.

Google உடன் நேரடி கேரியர் பில்லிங் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், டயலொக் வாடிக்கையாளர்கள் இப்போது Google Play Storeல் கேம்கள், அப்கள் மற்றும் திரைப்படங்கள் முதலான சேவைகளை வாங்க one-tap மொபைல் கட்டண வசதியின் மூலம், தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி கொள்வனவுகளை நிறைவுசெய்யலாம் - அவை தனிப்பட்ட அல்லது கடனட்டை பற்றிய தகவல்களின் தேவை இல்லாமல், சந்தாதாரரின் பிற்கொடுப்பனவு மொபைல் கட்டணத்தின் மூலம் அல்லது அவர்களின் முற்கொடுப்பனவு நிலுவையிலிருந்து அறவிடப்படும்.

இதுபற்றி விளக்கமளிக்கையில், டயலொக் ஆசிஆட்டா பி.எல்.சியின் குழு தலைமை இயக்க அதிகாரி டாக்டர். ரெய்னர் டாட்ச்மென் (Dr. Rainer Deutschmann) , “digital-first நிறுவனமாக, டயலொக் ஆனது google நேரடி பில்லிங் சேவை போன்ற முன்முயற்சிகள் மூலம் 14 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு மதிப்புமிக்க மிகப்பெரிய சேவையினை கொண்டுவருகிறது. மேலும் எந்தவொரு ஆன்லைன் கொள்வனவையும் நிகழ்த்துவதற்கான கூடுதல் வசதியுடன் கிரெடிட் அல்லது டெபிட் கார்ட் அவசியமின்றி, Google Play Storeல் அவர்களின் மொபைல் ஃபோன் மிகுதியினை கொண்டு தங்களுக்குப் பிடித்த google play content மற்றும் சேவைகளை வாங்க நம்பகமான மற்றும் தடையற்ற வழியை செயல்படுத்துகிறது. கூடுதலாக, டயலொக் ViU Mini ஆண்ட்ராய்டு ஸ்டிக்கை வாங்கிய வாடிக்கையாளர்கள் இப்போது google நேரடி பில்லிங் சேவை வழியாக சமீபத்திய திரைப்படங்களை வாங்கலாம், மேலும் அவற்றை தங்கள் வீட்டிலுள்ள தொலைகாட்சியில் எந்தவொரு கவலையும் தொந்தரவும் இல்லாமல் வசதியுடன் பார்க்கலாம்.” என்றார்.

கட்டண முறையை “Dialog” என மாற்ற, Google Play Store ஐப் பார்வையிடவும், மேல் இடது மூலையில் உள்ள drop-down மெனுவைக் கிளிக் செய்து, ‘Payment Methods’ என்பதைத் தேர்ந்தெடுத்து, உங்கள் கட்டண முறையாக டயலொக்கைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் புதுப்பிக்கவும்.