பொருள் விரிவாக்கம்

மண்சரிவில் பாதிக்கப்பட்ட மாத்தரை, களுபோவிடியான மகா வித்தியாலயத்தை மறு சீரமைக்கு நிகழ்வில் ஷர்தா ஊடக வலையமைப்பானது கைகோர்த்துக்கொண்டது.

October 30, 2017,        Colombo

 

பௌத்த மன்றம் பாதுகாப்பு அமைச்சு, அனர்த்த முகாமைத்தவ அமைச்சு மற்றும் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி ஆகியவற்றின் பங்களிப்புடன் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் செனஹே சியபத செயற்றிட்டன் மூலம் மாத்தரை மாவட்டத்தில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட களுபோவிடியான மகா வித்தியாலயத்திற்கான புதிய கட்டிடமானது நிர்மாணிக்கப்படுகின்து. இந்த கட்டிடத்தினை நிர்மாணிப்பதற்கான செயற்றிட்டத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வானது 2017 ஒக்டோபர் மாதம் 20ம் திகதி இடம்பெற்றது.

களுபோவிடியான மகா வித்தியாலயத்தில் ஒரு கட்டிடத்தில் ஒவ்வொரு வகுப்பறைகளும் 80X25 அடி என்ற அளவில்; கட்டப்படுகின்றது. மலேஷியா – மகா கருணா பௌத்த சங்கம், மலேஷியா – தேரவாத பௌத்த சபை ஆகியவற்றினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த செயற்றிட்டத்திற்கு நிதியுதவியுதவி வழங்கப்படுவதுடன் சிவில் நிர்மாண குழுவினரால் இந்த கட்டிடமானது கட்டப்படுகின்றது. அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மேற்பார்வையின் கீழ் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் பங்களிப்புடன் இடம்பெரும் ஒருங்கிணைந்த செயற்றிட்டமாகும்.

வண. ஹினிதுமா நந்த தேரர், கௌரவ மஹமேசனா புத்த மடத்தின் ஆலோசகர், கௌரவ ஷர்தா தொலைக்காட்சி வலையமைப்பின் ஆலோசகர் வண. அலுடீனி சுபோதி தேரர், சட்டம் மற்றும் ஒழுங்க மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சாகல இரத்நாயக்க மற்றும் தென் மாகாண கல்லவி அமைச்சர் சந்திமா இரசபுத்ர, ஷர்தா ஊடக வலையமைப்பின் தலைவர் சுதத் ஜயசுந்தர, பாதுகாப்பு அமைச்சகத்தின் துணை இயக்குனர், இராணுவ ஊழியர் நலன், பதும் ஹேவகே, சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் செயற்றிட்ட பணிப்பாளர் கேணல் W.M கருணாபால மற்றும் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் பிரதான சந்தைப்படுத்தல் நிறைவேற்று அதிகாரி அமலி நாணயக்கார, ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக இந்த அடிக்கல் நாட்டு நிகழ்வில் கலந்துக்கொண்டிருந்தார்கள்.