பொருள் விரிவாக்கம்

டயலொக் மற்றும் MEPA இணைந்து, இலங்கையின் முதல் 5G ஆதரவுள்ள தன்னாட்சி நீர் மேற்பரப்பு சுத்திகரிப்பு இயந்திரத்தை அறிமுகப்படுத்தின

2025 நவம்பர் 12         கொழும்பு

 

Dialog Customers Contribute to Little Hearts

புகைப்படம்∶ இடமிருந்து வலம்: மேற்கு மாகாண கழிவு முகாமைத்துவ ஆணையத்தின் தலைவர் திரு. கே.ஏ.டி. சதுர ருவன் தரங்க; மொரட்டுவ மாநகர சபையின் முதல்வர் திரு. நிஷாந்த பெர்ணான்டோ; டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இன் பணிப்பாளர்/குழும தலைமை நிர்வாகி திரு. சுபுன் வீரசிங்க; கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் திரு. சமந்த குணசேகர; சுற்றுச்சூழல் அமைச்சர் கௌரவ கலாநிதி தம்மிக பத்தபெண்டி; மற்றும் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இன் குழும தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி திரு. லசந்த தெவரப்பெரும ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இலங்கையின் முதன்மையான இணைப்புச் சேவை வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, சுற்றுச்சூழல் அமைச்சின் கீழ் உள்ள கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்துடன் (Marine Environment Protection Authority - MEPA) இணைந்து, இலங்கையின் முதலாவது 5G தொழில்நுட்ப ஆதரவுடன் கூடிய தன்னாட்சி நீர் மேற்பரப்புச் சுத்திகரிப்பு இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மிதக்கும் கழிவுகளைச் சேகரிப்பதற்கும், அத்துடன் சுற்றுச்சூழல் நிலைமைகளை நிகழ்நேரத்தில் (Real-time) கண்காணிப்பதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த முன்னோடியான புதிய கண்டுபிடிப்பு, இலங்கையின் நீர்வழிகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்க உதவும் அறிவார்ந்த, நிலைத்தன்மை வாய்ந்த தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதில் 5G தொழில்நுட்பத்தின் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றலை நிரூபிக்கிறது.

இந்த தானியங்கி இயந்திரம், ஏரிகள், ஆறுகள் மற்றும் கால்வாய்களில் பயணித்து, பிளாஸ்டிக் போத்தல்கள், பைகள் மற்றும் இலைகள் போன்ற மிதக்கும் குப்பைகளைச் சேகரிக்க 5G இணைப்பு, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திரவியல் ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. இது ஒரு பணியில் 50–100 ஏக்கர் பரப்பளவிலான மேற்பரப்பு நீரைச் சுத்தம் செய்யக்கூடியதுடன், ஒரு தடவையில் 50 கிலோகிராம் வரையிலான கழிவுகளைச் சேகரிக்கும் திறன் கொண்டது. இதன் மூலம், பிளாஸ்டிக் கடலில் கலப்பதைத் தடுப்பதுடன், ஐ.நா-வின் நிலைத்த அபிவிருத்தி இலக்கு 14: நீருக்குக் கீழான வாழ்வு (Life Below Water) என்பதற்கு ஆதரவளிக்கிறது.

நவம்பர் 11 ஆம் திகதி பெய்ரா ஏரியில் (Beira Lake) நடைபெற்ற இந்த அறிமுக நிகழ்வில், சுற்றுச்சூழல் அமைச்சர் கௌரவ கலாநிதி தம்மிக பத்தபெண்டி, கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் (MEPA) தலைவர் திரு. சமந்த குணசேகர , டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இன் குழும தலைமை நிர்வாகி சுபுன் வீரசிங்க மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு, MEPA, Dialog ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். 5G, AI மற்றும் இயந்திரவியல் (Robotics) போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களை, அவசர சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்ள எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதற்கான ஒரு நேரடி செயல்விளக்கத்தை இந்த நிகழ்வு வழங்கியது.

இவ்வாறான முன்முயற்சிகள், எமது சுற்றுச்சூழல் நோக்கங்களை அடைவதில் பல்துறை ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கின்றன. இலங்கையின் நீர்வழிகளைப் பாதுகாத்து, எதிர்கால சந்ததியினருக்காக அவற்றைக் காப்பாற்றும் தேசியப் பணிக்குத் துணைபுரியும் வகையில், தொழில்நுட்பத்தை திறம்படப் பயன்படுத்தியதற்காக டயலொக் மற்றும் MEPA ஆகியோரைப் பாராட்டுகிறோம்," என சுற்றுச்சூழல் அமைச்சர் கௌரவ கலாநிதி தம்மிக பத்தபெண்டி தெரிவித்தார்.

"இந்த 5G-ஆதரவுடைய தன்னாட்சிச் சுத்திகரிப்பு இயந்திரம் , கடல்சார் பாதுகாப்புத் துறையில் ஒரு புதிய எல்லையைக் குறிக்கிறது, அத்துடன் சுற்றுச்சூழல் மீள்தன்மைக்காகப் புத்தாக்கத்தைப் பயன்படுத்துவதில் இலங்கையின் அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கிறது. இந்த முன்னோடி முயற்சியை உயிர்ப்பிக்க எங்களுடன் கைகோர்த்த டயலொக் ஆசிஆட்டாவுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம் — தொழில்நுட்பமும் கூட்டு முயற்சியும் எவ்வாறு ஒரு தூய்மையான, நிலையான எதிர்காலத்தை நோக்கி இட்டுச் செல்ல முடியும் என்பதற்கு இது ஒரு ஊக்கமளிக்கும் எடுத்துக்காட்டாகும்," என கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் திரு. சமந்த குணசேகர தெரிவித்தார்.

இணைப்பை விட மிகப் பெரிய நோக்கத்திற்காக 5G எவ்வாறு சேவை செய்ய முடியும் என்பதற்கு இது ஒரு சக்திவாய்ந்த உதாரணம் ஆகும். சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதற்காக, அடுத்த தலைமுறைத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் MEPA மற்றும் தேசிய நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இது, ஒரு புத்திசாலித்தனமான, பசுமையான மற்றும் நிலையான இலங்கையை கட்டியெழுப்புவதற்கான எங்களின் பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வையை (shared vision) பிரதிபலிக்கிறது," என டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி -இன் குழும தலைமை நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்க கூறினார்.

5G, செயற்கை நுண்ணறிவு மற்றும் நிலைத்தன்மையை இணைப்பதன் மூலம், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான புத்தாக்கத்தின் பங்கை டயலொக் தொடர்ந்து மறுவரையறை செய்கிறது - இது இலங்கை முழுவதும் புத்திசாலித்தனமான, பசுமையான மற்றும் மீள்தன்மையுடைய நகர்ப்புற சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு வழி வகுக்கிறது.