பொருள் விரிவாக்கம்

டயலொக்கும் ஆசிஆட்டா குழுமமும் பார்த்தி எயார்டெலும் இலங்கையில் தமது தொழிற்பாடுகளை ஒன்றிணைக்க வரையறுக்கப்பட்ட ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுகின்றன

• வாடிக்கையாளர்களுக்கு உன்னதமான அனுபவத்தை வழங்கவும் பங்குதாரர்களின் வருவாயை மேம்படுத்தவும் வலிமைமிக்க வகையில் இணையவுள்ளன.

2024 ஏப்ரல் 18         கொழும்பு

 

Dialog, Axiata Group and Bharti Airtel sign Definitive Agreement to Merge Operations in Sri Lanka

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி (“Dialog”), ஆசிஆட்டா குழுமம் பெர்ஹாட் (“Axiata”) மற்றும் பார்த்தி எயார்டெல் லிமிடட் (“Bharti Airtel”) (“தரப்பினர்” அனைவரும் ஒன்றாக), ஆகியன பார்த்தி எயார்டெல் லங்கா (பிரைவேட்) லிமிடட்டின் (“Airtel Lanka”) வெளியிடப்பட்ட பங்குகளை முழுமையாக கையகப்படுத்துதல் குறித்த வரையறுக்கப்பட்ட ஒப்பந்தத்திற்கு இணங்குகின்றன. இந்த உடன்படிக்கையின் கீழ் எயார்டெல் லங்காவின் வெளியிடப்பட்ட பங்குகளில் 100%ஐ டயலொக் கையகப்படுத்தும் அதேவேளை டயலொக்கின் மொத்த வெளியிடப்பட்ட 10.355% மதிப்பிலான சாதாரண வாக்குரிமை பங்குகளை பங்குமாற்று முறை மூலம் பார்த்தி எயார்டெலுக்கு டயலொக் வழங்கும். இந்த பரிவர்த்தனை டயலொக் பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டது மற்றும் பங்கு விற்பனை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பிட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் வரை நிலுவையில் உள்ளது, இதில் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையின் (CSE) அனுமதி மற்றும் பொருந்தக்கூடிய பிற சட்ட, கூட்டாண்மை மற்றும் ஒழுங்குமுறை இணக்க நடைமுறைகள் ஆகியவை அடங்கும்.

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL) முன்மொழியப்பட்ட இவ்வொன்றிணைவுக்கு அதன் அனுமதியை வழங்கியுள்ளது, இது இலங்கை முழுவதும் தொலைத்தொடர்பு சேவைகளை ஏற்றுக்கொள்வதற்கான அதன் தொலைநோக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்த ஒன்றிணைவு, இணைக்கப்பட்ட நிறுவனத்தை பாரிய அளவிலான பொருளாதாரங்களைத் திரட்டவும், உட்கட்டமைப்பில் நகலெடுப்புகளை குறைப்பதற்கும், தொழில்நுட்பம் மற்றும் மூலதனச் செலவினங்களில் ஒருங்கிணைவை அடைவதற்கும், மேம்படுத்தப்பட்ட அதிவேக Broadband இணைப்பு, குரல் மற்றும் பெறுமதி சேர் சேவைகள், செலவு சேமிப்பு மற்றும் தொழிற்பாட்டு வினைத்திறன் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும்.

ஆசிஆட்டா குழுமம் பெர்ஹாட்டின் முகாமைத்துவப் பணிப்பாளர் மற்றும் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான விவேக் சூட் அவர்கள் “டயலொக் மற்றும் எயார்டெல் லங்காவுக்கு இடையிலான இந்த ஒன்றிணைவு ஆசிஆட்டாவின் சந்தை இணைப்பு மற்றும் மீண்டெழுந்தன்மைக்காக வகுக்கப்பட்ட மூலோபாயத்தின் வழி சீரமைக்கப்பட்டுள்ளது. இந்த ஒன்றிணைவு ஆசிஆட்டாவின் பங்குதரர்களுக்கு மதிப்புகளை உருவாக்கும். மேலும் இவ்விரு நிறுவனங்களும் ஒன்றிணைவதை நாம் எதிர்நோக்கியுள்ளோம். எயார்டெல் லங்கா மற்றும் அதன் ஊழியர்கள் மீது நாம் மிகுந்த மரியாதை வைத்துள்ளோம். அவர்களுடன் சேர்ந்து இலங்கை மக்கள், வனிகங்கள், மற்றும் பொதுத்துறைக்காக பணியாற்ற ஆவலாக உள்ளோம்” என தெரிவித்தார்.

ஆசிஆட்டா குழுமம் பெர்ஹாட், தொலைத்தொடர்பு வணிகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் குழும நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய அவர்கள் இது குறித்து தெரிவிக்கையில், “இலங்கையின் தொலைத்தொடர்பு துறையில் முன்னிலை வகிக்கும் இரு தொலைத்தொடர்பு குழுமங்களினது இந்த ஒன்றிணைவு, இலங்கை தொலைத்தொடர்பு துறையின் வளர்ச்சிக்கும் பேண்தகுநிலைக்கும் நன்மைபயக்கும் வகையில் அவற்றை ஒன்று சேர்க்கிறது. இலங்கையின் நுகர்வோருக்கும் நிறுவனங்களுக்கும் நாம் அளிக்கும் வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் புத்தாக்கத்தில் புதிய எல்லைகளை அடைய எதிர்பார்த்துள்ளோம்” என்றார்.

“டயலொக்குடன் எமது தொழிற்பாடுகளை ஒன்றிணைப்பதில் நாம் மகிழ்ச்சி அடைகின்றோம். அவர்கள் அளிக்கும் பாரிய இடமும் தனித்துவமான முன்மொழிவுகளையும் வைத்து பார்க்கையில் எமது வாடிக்கையாளர்கள் தொடர்ச்சியாக அதிநவீன சேவைகளை தங்குதடையற்ற வலையமைப்பினூடாக பெறுவர் என்பதில் நாம் உறுதியாகவுள்ளோம்” என பார்த்தி எயார்டெல் லிமிடட்டின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கோபால் விட்டல் அவர்கள் தெரிவித்தார்.

“இலங்கையில் உன்னதமான தொலைத்தொடர்பு சேவைகளை வழங்குவதற்கு நாம் காட்டும் அர்ப்பணிப்பில் இந்த ஒப்பந்தம் ஒரு முக்கியமான படியாக அமையும்” என டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி பணிப்பாளர்/ குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்க அவர்கள் தெரிவித்தார்.

“டயலொக் மற்றும் எயார்டெல் லங்கா இடையிலான இந்த தொழிற்பாட்டு ஒன்றிணைப்பானது புத்தாக்கம் மற்றும் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை தோற்றுவிப்பதோடு எமது நுகர்வோருக்கும் பல்வேறு வழிகளில் அனுகூலங்களை அள்ளித்தரும்” என பார்த்தி எயார்டெல் லங்கா (பிரைவேட்) லிமிடட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷிஷ் சந்திரா அவர்கள் தெரிவித்தார்.

ஆசிஆட்டா பற்றி

ஒரு பன்முக தொலைத்தொடர்பு நிறுவனமாக இயங்கிவரும் ஆசிஆட்டா ஆனது அடுத்த தலைமுறைக்கான டிஜிட்டல் முன்னோடியாக திகழவேண்டும் எனும் தொலைநோக்குப் பார்வைக்கமைய, அதன் டிஜிட்டல் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், டிஜிட்டல் வணிகங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வணிகங்கள் மூலம் தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (ASEAN) மற்றும் தெற்காசிய பிராந்தியங்களில் பரவலாக தடம்பதித்துள்ளது.

இக்குழுமம், இந்தோனேசியாவில் உள்ள XL மற்றும் Link Net, இலங்கையில் உள்ள Dialog, பங்களாதேஷில் உள்ள Robi மற்றும் கம்போடியாவில் உள்ள Smart போன்ற பிராந்தியத்தின் முன்னணி மொபைல் மற்றும் நிலையான தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களின் கட்டுப்பாட்டு பங்குகளை தன்னகத்தே கொண்டுள்ளது. மலேசியாவில் உள்ள 'செல்கொம்டிஜி' (CelcomDigi) ஒரு முக்கிய கூட்டு நிறுவனமாகும். ஆசிஆட்டாவின் பிராந்திய டிஜிட்டல் வணிக முன்னெடுப்புகளாக Boost (ஒரு நிதிசார் தொழில்நுட்ப நிறுவனம்), ADL (தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கான மென்பொருள் மற்றும் டிஜிட்டல் தீர்வு வழங்குனர்) மற்றும் ADA (ஒரு டிஜிட்டல் பகுப்பாய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனம்) ஆகியன திகழ்கின்றன. ஈடொட்கோ (EDOTCO) உலகளாவிய ரீதியில் உள்ள முதல் 10 சுயாதீன தொலைத்தொடர்பு கோபுர நிறுவனங்களில் ஒன்றாகும், இது ஒன்பது நாடுகளில் தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு சேவைகளை வழங்குகிறது.

ஒரு உறுதியான மற்றும் நீண்ட கால முதலீட்டாளராக, இளைஞர்களின் திறமை மேம்பாடு, சமூக நலத்திட்டங்கள் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான முன்னெடுப்புகளை இக்குழுமம் தீவிரமாக ஆதரித்து ஊக்குவிக்கிறது. டிஜிட்டல் உள்ளிணைக்கை மற்றும் பேண்தகுநிலையான முன்னேற்றத்தை தங்கள் சந்தைகளில் முன்னேற்றுவதற்காக, பிராந்தியத்தின் சிறந்த கண்டுபிடிப்பு, இணைப்பு மற்றும் திறமைகளை ஒன்றிணைப்பதே ஆசிஆட்டாவின் ‘ஆசியாவை முன்னேற்றுதல்’ எனும் பாரிய இலக்காகும். மேலதிக தகவல்களுக்கு www.axiata.com ஐப் பார்வையிடவும்.

மேலதிக ஊடக தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும்:
சுஜார்தா குமார்
கூட்டுத்தாபன தொடர்பாடல்களின் தலைவர்
தொலைபேசி: +6011.10.000.177
மின்னஞ்சல்: sujartha@axiata.com

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி பற்றி

டயலொக் ஆசிஆட்டா குழுமம், ஆசிஆட்டா குழுமம் பெர்ஹாட் (Axiata) இன் துணை நிறுவனமாகும். இது இலங்கையின் முன்னணி Quad-Play (கையடக்க தொலைபேசி, நிலையான தொலைபேசி, டெலிவிஷன் மற்றும் இணையம்) இணைப்பு வழங்குனர் நிறுவனமாகும். மொபைல், நிலையான தொலைத்தொடர்புகள், டிஜிட்டல் கட்டண தொலைக்காட்சி, டிஜிட்டல் சேவைகள், நிதி சேவைகள், மற்றும் சர்வதேச சேவைகளில் சந்தை முன்னோடியாக திகழ்வதோடு டிஜிட்டல் சேவைகள், நிதிச்சேவைகள், மற்றும் தகவல் தொடர்பாடல் சேவைகள் ஆகியவற்றிலும் சந்தையில் வலுவான தடம்பதித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளது. டயலொக் ஆசிஆட்டா குழுமமானது கொழுப்பு பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகும். மொத்தமாக 3.25 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனும் முதலீடு மூலமாக டயலொக் ஆசிஆட்டா குழுமமே இலங்கையின் பாரிய நேரடி வெளிநாட்டு முதலீட்டாளர் (FDI) ஆகும். 2019-2023 காலப்பகுதியில் ஐக்கிய இராச்சியத்தின் Brand Finance இனால் இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க வர்த்தகநாமம் எனும் கௌரவத்தை டயலொக் பெற்றுள்ளது.

இந்நிறுவனம் 17 மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்களுக்கு மேம்பட்ட மொபைல் தொலைபேசி மற்றும் அதிவேக மொபைல் Broadband சேவைகளை வழங்குகிறது. Pay Television மற்றும் Home Broadband துறைகளில் சந்தையில் முன்னணி வகிக்கும் டயலொக், இலங்கை முழுவதிலும் உள்ள மில்லியன் கணக்கான குடும்பங்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பொழுதுபோக்கு சேவைகள் மற்றும் சிறந்த நிலையான இணைப்பை வழங்குகிறது. 200க்கும் மேற்பட்ட இடங்களுக்கு 650க்கும் மேற்பட்ட சேவை வழங்குனர்களுடன் roaming கூட்டாண்மை மற்றும் ஆசியா முழுவதும் பல ஆழ்கடல் வடங்களில் (subsea cables) முதலீடுகள் உட்பட, இந்நிறுவனம் சர்வதேச ரீதியில் தனக்கென ஒரு வலுவான தடத்தை பதித்துள்ளது.

ஆறு குளோபல் மொபைல் விருதுகளை வென்ற டயலொக், SLIM-KANTAR மக்கள் விருதுகள் 2024 இல் தொடர்ந்து பதின்மூன்றாவது முறையாகவும் 'ஆண்டின் சிறந்த தொலைத்தொடர்பு வர்த்தக நாமமாக' இலங்கை நுகர்வோரால் வாக்களிக்கப்பட்டது. ISO 9001 தர முகாமைத்துவ அமைப்பு, ISO 27001:2013 தகவல் பாதுகாப்பு முகாமைத்துவ அமைப்பு மற்றும் ISO 14001:2015 சுற்றுச்சூழல் முகாமைத்துவ அமைப்பு. தனியுரிமை தகவல் முகாமைத்துவ அமைப்புகளுக்கான ISO 27701 சான்றிதழைப் பெற்ற நாட்டின் முதல் தொலைத்தொடர்பு சேவை வழங்குனர் என்ற பெருமை இந்நிறுவனத்தை சாரும். தேசிய தர விருது (National Quality Award), இலங்கை வணிக மேன்மைக்கான விருது (Sri Lanka Business Excellence Award) மற்றும் ACCA பேண்தகுநிலை விருது உட்பட பல உள்ளூர் மற்றும் சர்வதேச விருதுகளை டயலொக் பெற்றுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு www.dialog.lk ஐப் பார்வையிடவும்.

எயார்டெல் ஸ்ரீ லங்கா பற்றி

2009 ஆம் ஆண்டில் இலங்கையில் தமது நடவடிக்கைகளை ஆரம்பித்த பார்த்தி எயார்டெல் ஸ்ரீலங்கா நிறுவனம் தற்போது ஒரு மில்லியன் வாடிக்கையாளர் மட்டத்தை நெருங்கிய இலங்கையின் வேகமான தகவல் தொலைத்தொடர்பு வலயமாகும். Airtel Sri Lanka வழங்கும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் சேவை சிறப்புகள் இலங்கை இளைஞர்கள் மத்தியில் வேகமாக பரவியுள்ளது. தற்போது Airtel இலங்கையின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கும் வகையில் அதன் அதிநவீன 5G-தயாரான 4G வலையமைப்பை விரிவுபடுத்தியுள்ளது மற்றும் அதிகபட்ச மதிப்பை வழங்குவதற்காக அதன் வலையமைப்பு ஆற்றலெல்லையை (Network Coverage) தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.  Airtel பற்றி மேலும் அறிய, MyAirtel App அல்லது சமூக வலைத்தளங்கள் மூலம் Airtel உடன் தொடர்பு கொள்ளவும் அல்லது www.airtel.lk ஐப் பார்வையிடவும்.

எயார்டெல் தொடர்பாக

இந்தியாவைத் தலைமையகமாகக் கொண்ட எயார்டெல், தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்கா முழுவதும் 17 நாடுகளில் 500 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்ட உலகளாவிய தகவல்தொடர்பு தீர்வுகளை வழங்கும் நிறுவனமாகும். இது உலகளவில் முதல் மூன்று மொபைல் செயற்பாட்டாளர்கள் வரிசையில் இடம்பிடித்துள்ளது மற்றும் வலைப்பின்னல்கள் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான அதன் மக்களை உள்ளடக்கியது. எயார்டெல் இந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த தகவல் தொடர்பு தீர்வுகளை வழங்குவதுடன் ஆப்பிரிக்காவில் இரண்டாவது பெரிய மொபைல் செயற்பாட்டாளர் ஆகும். அதிவேக 4G/5G Mobile Broadband, எயார்டெல் Xstream Fiber ஆகியவை 1 Gbps வரை வேகத்தை வழங்குகிறது, இது தேவைக்கேற்ப பொழுதுபோக்கு, இசை மற்றும் வீடியோ, டிஜிட்டல் கட்டணங்கள் மற்றும் நிதிச் சேவைகள், ஸ்ட்ரீமிங் சேவைகள் ஆகியன எயார்டெல்லின் வாடிக்கையாளர் விற்பனைப் பட்டியலில் அடங்கும். நிறுவன வாடிக்கையாளர்களுக்கு, பாதுகாப்பான இணைப்பு, Cloud மற்றும் Data Center சேவைகள், Cyber Security, loT, Ad Tech மற்றும் Cloud-based தகவல் தொடர்பு ஆகியவற்றை உள்ளடக்கிய பல தீர்வுகளை எயார்டெல் வழங்குகிறது. மேலதிக விபரங்களுக்கு, www.airtel.com ஐப் பார்க்கவும்.

மேலதிக ஊடக தகவல்களுக்கு, தொடர்பு கொள்ளவும்:
ஹர்ஷ சமரநாயக்க
துணைத்தலைவர் - வர்த்தக நாமம் மற்றும் ஊடகம்,
குழும சந்தைப்படுத்தல், டயலொக் ஆசிஆட்டா பி.எல்.சி
மின்னஞ்சல்: harsha.samaranayake@dialog.lk

கின்ஷூக் குப்தா
சிரேஷ்ட துணைத்தலைவர் – கூட்டுத்தாபன தொடர்பாடல்கள்
பார்த்தி எயார்டெல் லிமிடட்
மின்னஞ்சல்: Kinshuk.gupta@airtel.com