டயலொக் விரைவான, எளிதான பரிவர்த்தனைகளுக்காக இலங்கையின் முதல் QR அடிப்படையிலான முற்கொடுப்பனவு ரீலோட் முறையை அறிமுகப்படுத்துகிறது
2025 மே 15 கொழும்பு

இலங்கையின் #1 இணைப்பு வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, நாட்டில் முதல்முறையாக QR ரீலோட் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல், Home Broadband அல்லது Dialog Television இணைப்புகளை சில்லறை விற்பனை நிலையங்களில் எளிதாக ரீலோட் செய்யும் வசதி வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கிறது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய இந்த சமீபத்திய அறிமுகம் காரணமாக, டயலொக் வாடிக்கையாளர்கள் தங்கள் இணைப்புகளுக்கு ரீலோட் செய்வதை மிகவும் எளிதாகவும் வேகமாகவும் தாங்களாகவே செய்து கொள்ள முடியும்.
இந்த புதிய டிஜிட்டல் தொழில்நுட்பம் Scan, Select, மற்றும் Pay ஆகிய மூன்று எளிய நடவடிக்கைகளில் பரிவர்த்தனைகளை வேகமாக முடிக்க உதவுகிறது., வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான திட்டம் அல்லது ரீலோட் தொகையை ரீலோட் செய்து, அதற்கான பணத்தை கடைக்காரரிடம் செலுத்தலாம். இந்த முறையில் ரீலோட் செய்யும்போது, மொபைல் எண்ணை மற்றவர்களுக்குச் சொல்லாமல் விரைவாக ரீலோட் செய்து கொள்ள முடியும் என்பது கூடுதல் வசதியாகும். அதுமட்டுமின்றி, எ ந்த தாமதமும் இல்லாமல் தேவையான எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியும். டயலொக்குடன் இணைந்திருக்கும் எண்ணற்ற வாடிக்கையாளர்களின் வசதிக்காகவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சமீபத்திய கண்டுபிடிப்பு, அவர்களுக்கு வசதியை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அவர்களுடன் கைகோர்த்து நிற்கும் வணிகப் பிரதிநிதிகளுக்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் ஒரு முறையாகும். அதாவது, வணிகப் பிரதிநிதிகளின் பணிகளை இதன் மூலம் எளிதாக்கி, வாடிக்கையாளர்களுக்கு ரீலோட் செய்வது போன்ற அவர்களின் அன்றாடப் பணிகளையும், இவ்வாறு டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டயலொக் எளிதாக்குகிறது.
"QR மூலம் ரீலோட் செய்யும் முறையை இலங்கையில் முதன்முறையாக வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்த முடிந்தது Dialog நிறுவனமாகிய எங்களுக்குப் பெருமை. நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இலங்கையர்களின் அன்றாட வாழ்க்கையை இவ்வாறு மேலும் எளிதாக்குவதுடன், இது 'எதிர்காலம் இன்றே' என்ற எங்கள் வர்த்தக நாம வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான எங்கள் அர்ப்பணிப்புக்கு இசைவானதாகும். இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தின் முன்னோடியாக இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த அறிமுகத்துடன், ரீலோட் செய்யும் போது மொபைல் எண்களைப் பகிர வேண்டிய தேவையை நீக்குவதன் மூலம் வாடிக்கையாளர்களின் தனியுரிமையை Dialog மேம்படுத்துகிறது - பாதுகாப்பான, டிஜிட்டல் சேவைகளை நோக்கி மாறுவதை ஊக்குவிப்பதோடு தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க உதவுகிறது
இந்த சமீபத்திய தீர்வு மூலம், வாடிக்கையாளர்கள் எங்களோடு தொடர்பு கொள்ளும் விதம் புதிதாக வடிவமைக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி லசந்த தெவரப்பெரும தெரிவித்தார். வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற ரீலோட் அனுபவத்தை வழங்கும் இந்த சமீபத்திய QR ரீலோட் முறை மூலம் அருகிலுள்ள கடையில் இருந்து ரீலோட் செய்து கொள்ளலாம். வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் புதுமையான தீர்வுகளை வழங்குவதில் முன்னோடியாகத் திகழும் டயலொக், இலங்கையர்களுக்கு தொடர்புடன் கூடிய சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.