பொருள் விரிவாக்கம்

டயலொக் Home Broadband விரும்பியவாறு YouTube மற்றும் social media பயன்படுத்த மிகச்சிறந்த முற்கொடுப்பனவு Anytime planகளை அறிமுகப்படுத்துகிறது.

2024 பிப்ரவரி 29         கொழும்பு

 

Dialog Powers Junior National Netball Championship 2023

இலங்கையின் #1 இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, இன்றைய வாடிக்கையாளர்கள் மத்தியில் சடுதியாக அதிகரித்து வரும் சமூக வலைத்தளப்பாவனைக்கு ஏற்ற வகையில், ஈடுஇணையற்ற இலாபகரமான மட்டுமின்றி அனைவரும் பெற்றுக்கொள்ளக்கூடியவாறு விரிவுபடுத்தி வடிவமைக்கப்பட்ட புதிய முற்கொடுப்பனவு Home Broadband Plan களை அறிமுகப்படுத்துகின்றது.

வீட்டிலுள்ள அனைவரின் தெரிவுக்கேற்பவும் பல அம்சங்களுடன் கூடிய. வீட்டிற்கு Home Wi-Fi YouTube Plan மற்றும் வீட்டிற்கு Home Wi-Fi Social Plan என இரண்டு Planகள் உள்ளன. இதில் வெறும் ரூ.760க்கு, வாடிக்கையாளர்கள் TikTok, Instagram, மற்றும் Facebook ஆகியனவற்றிற்கு பிரத்தியேகமாக 20GB உடன் ஏனைய இணையத்தேவைக்காக மேலதிகமாக 20GB வழங்கப்படுகிறது.அத்துடன் ரூ.860 Plan ஆனது ஏனைய இணையத்தேவைக்காக வழப்படும் 20GB உடன் 30GB மேலதிக டேட்டாவை பிரத்தியேகமாக YouTube இற்கு வழங்குகிறது.

ஒரே ரீலோட்டில் மாதத்திற்கு தேவையான அனைத்து Data தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையிலேயே இந்த planகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் YouTube, Facebook, Instagram மற்றும் TikTok போன்ற பிரபலமான சமூக வலைத்தளங்களுக்கு தாராளமான Dataவை அள்ளி வழங்குகின்றன. காலத்திற்கு காலம் மாறிவரும் வாடிக்கையாளர்களின் Data தேவையை பூர்த்தி செய்யும் வகையில் டயலொக் அறிமுகப்படுத்தும் இலாபகரமான Planகளின் வரிசையில் இவையும் முக்கிய இடத்தை வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Dialog Home Broadband வீட்டிற்கு Wi-Fi முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் தற்போது தாம் தெரிவு செய்யும் Planகளை அவற்றுக்கான பெறுமதியை ரீலோட் செய்வதனூடாக அல்லது MyDialog App ஊடாக செயற்படுத்திக்கொள்ள முடியும்.

Dialog Home Broadband முற்கொடுப்பனவு Planகள் பற்றிய மேலதிக விபரங்களை www.dialog.lk/home-broadband/prepaid/addon/home-wi-fi-prepaid-plans மூலம் பார்வையிடலாம்.