பொருள் விரிவாக்கம்

Doc990 இலங்கையின் முதலாவது முழுமையான AI சுகாதார உதவியாளரை அறிமுகப்படுத்துகிறது

Suvawi அறிமுகம்: இலங்கையின் மிகவும் மேம்பட்ட உரையாடல் அடிப்படையிலான சுகாதாரத் தளம்

2026 அக்டோபர் 4         கொழும்பு

 

இடமிருந்து வலமாக: திக்ஷண ஏகநாயக்க (வணிக அபிவிருத்திப் பணிப்பாளர், Digital Health Pvt Ltd); மதார அபேசிங்க (நிதி முகாமையாளர், Digital Health Pvt Ltd); தேவின்தி வனசுந்தர (சந்தைப்படுத்தல் மற்றும் வளர்ச்சி முகாமையாளர், Digital Health Pvt Ltd); ரேணுகா பெர்னாண்டோ (குழும முதன்மை டிஜிட்டல் சேவைகள் அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி) ; ஜனித் பீரிஸ் (பிரதம நிறைவேற்று அதிகாரி, Digital Health Pvt Ltd); கசுன் ரணசிங்க (தொழில்நுட்பப் பணிப்பாளர், Digital Health Pvt Ltd); அமில ஜயஷங்க (இணை தொழில்நுட்பக் குழுத் தலைவர், Digital Health Pvt Ltd); சரித்ர ஜயசிங்க (மென்பொருள் பொறியியலாளர், Digital Health Pvt Ltd).

இலங்கையின் முதன்மை இணைப்புச் சேவை வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இன் துணை நிறுவனமான Digital Health (Pvt) Ltd இயக்கும், முன்னோடி டிஜிட்டல் சுகாதார தீர்வுகள் வழங்குநரான Doc990, இலங்கையர்கள் மருத்துவ சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் முறையை புதிதாக வரையறை செய்யும் நோக்கில் 'Suvawi' என்ற அடுத்த தலைமுறை மெய்நிகர் சுகாதார உதவியாளரை (Virtual Healthcare Assistant) உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. Doc990 இன் அமைப்பியல் சூழலில் தடையின்றி இணைக்கப்பட்டுள்ள Suvawi, மேம்பட்ட உரையாடல் செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இத்தளத்தை ஒரு சாதாரண முன்பதிவுச் சாதனத்திலிருந்து அறிவார்ந்த, முழுமையான டிஜிட்டல் சுகாதார வழிகாட்டிச் சேவையாக மாற்றுகிறது.

சாதாரண உரையாடல் செயலிகளைப் (Chatbots) போலல்லாமல், நோயாளிகள் சந்திக்கும் முக்கிய சவாலான - உடனடி மருத்துவப் பிரச்சினைகளுக்குப் பொருத்தமான மருத்துவர்களின் நேரடிப் பணி நேரத்தைக் கண்டறிந்து வழங்குவதை Suvawi சுலபமாக்குகிறது. பயனாளிகள் தங்களுடைய உடல்நல அறிகுறிகளை அந்த மெய்நிகர் உதவியாளரிடம் தெரிவிப்பதன் மூலம், Suvawi இன் மருத்துவத் தகவல் பொறிமுறை (Medical Intelligence Engine) அவர்களுக்குத் தேவையான சரியான மருத்துவ நிபுணத்துவத் துறையை உடனடியாக அடையாளம் காணும். மேலும் ஒரு படி மேலே சென்று, இந்த AI தொழில்நுட்பமானது நிகழ்நேர மருத்துவமனை அட்டவணைகளை ஆய்வு செய்து, பயனாளிகள் விரும்பும் திகதி மற்றும் இருப்பிடத்திற்கு ஏற்ப குறிப்பிட்ட மருத்துவ நிபுணர்களைச் சந்திப்பதற்கான (Specialist Channeling) தேர்வுகளைப் பரிந்துரைக்கிறது.

இந்த அறிமுகம் குறித்து Doc990 இன் CEO ஜனித் பீரிஸ் கருத்து தெரிவிக்கையில், "மருத்துவ உதவியைப் பெறுவதில் உள்ள தேவையற்ற குழப்பங்கள் மற்றும் சிக்கலான படிநிலைகளை நீக்கி, இலங்கையில் டிஜிட்டல் சுகாதாரத்துறை இயங்கும் முறையில் 'Suvawi' ஒரு மாபெரும் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. Suvawi மூலம், ஒரு நோயாளி தனக்கு என்ன அசௌகரியம் உள்ளது என்பதைக் கூறி, வீட்டிற்கு அருகில் இருக்கும் சரியான மருத்துவ நிபுணரைத் தனது ஓய்வுநாளுக்கு ஏற்பக் கண்டறிந்து, ஒரே உரையாடலில் தனது முழுமையான சிகிச்சைச் சுழற்சியையும் பூர்த்தி செய்ய முடியும்" எனக் குறிப்பிட்டார்.

Doc990 இன் நாடு தழுவிய பரந்த உள்கட்டமைப்புடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளதன் மூலம், Suvawi நிகழ்நேர மருத்துவத் தரவுகளைப் பெற்று உடனடியாகவும் நம்பிக்கையுடனும் வழிகாட்டுகிறது. இந்த உரையாடல் உதவியாளர் தற்போது Doc990 மொபைல் செயலியின் சமீபத்திய பதிப்பில் கிடைக்கப் பெறுகின்ற அதேவேளை, நாடு முழுவதும் விரைவான, அறிவார்ந்த மற்றும் இலகுவாகப் பெறக்கூடிய சுகாதார அனுபவத்திற்கு வழிகோலுகிறது.