பொருள் விரிவாக்கம்

Doc990, Healthguard மருந்தகத்துடன் இணைந்து சுகாதார சேவையை மேம்படுத்துகிறது

2025 செப்டம்பர் 25         கொழும்பு

 

Dialog Customers Contribute to Little Hearts

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி-இன் துணை நிறுவனமான Digital Health (Pvt) Ltd-ஆல் இயக்கப்படும், இலங்கையின் முன்னணி டிஜிட்டல் சுகாதார தீர்வுகள் வழங்குனரான Doc990, புதியதொரு கூட்டணியை அறிவித்துள்ளது.Sunshine Healthcare-இன் துணை நிறுவனமும், நாட்டின் முன்னணி மருந்தக சங்கிலித்தொடர்களில் ஒன்றும், பரந்த அளவிலான மருந்துகள், நலவாழ்வுப் பொருட்கள் மற்றும் சிறந்த வாடிக்கையாளர் சேவைக்காக அறியப்பட்டதுமான Healthguard மருந்தகத்துடன் இந்தக் கூட்டாண்மை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டாண்மை மூலம், Doc990 வாடிக்கையாளர்கள் இனி Doc990 App மற்றும் இணையத்தளத்தின் வழியாக மருந்துச்சீட்டு உள்ள மற்றும் இல்லாத மருந்துகளையும் order செய்யலாம். வீட்டிற்கே மருந்து விநியோகம் அல்லது Healthguard கிளைகளில் நேரடியாகச் சென்று பெற்றுக்கொள்ளும் வசதியும் இதில் அடங்கும். இதன் மூலம், வீட்டில், அலுவலகத்தில் அல்லது பயணத்தில் என எங்கு இருந்தாலும், வரிசையில் காத்திருக்காமல் தடையற்ற முறையில் மருந்துகளைப் பெறுவது உறுதி செய்யப்படுகிறது.

ஆரம்பம் முதல், Healthguard மருந்தகம் அதன் விரிவான கிளைகளின் வலையமைப்பு மூலம், தொழில்முறை அணுகுமுறை, புதுமையான சேவைகள் மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட செயல்பாடுகளால் ஒரு வலுவான நற்பெயரைக் கட்டியெழுப்பியுள்ளது. மருந்து சில்லறை வர்த்தகத்தின் தரத்தை உயர்த்துவதில் அதன் அர்ப்பணிப்புடன், Healthguard ஆயிரக்கணக்கான இலங்கையர்களின் சுகாதார மற்றும் ஆரோக்கியப் பயணத்தில் தொடர்ந்து ஒரு நம்பகமான பங்காளியாகத் திகழ்கிறது.

Doc990 ஆனது மருந்துச்சீட்டுகளை refill செய்யும் வசதியையும் வழங்குகிறது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் சிகிச்சைக்கான மருந்துகளை எளிதாக நிர்வகிக்கலாம். சரியான நேரத்தில் கிடைக்கும் நினைவூட்டல்கள் மற்றும் எளிய திட்டமிடல் வசதிகளுடன், இந்தத் தளம் அத்தியாவசிய மருந்துகளைத் தொடர்ந்து பெறுவதை உறுதிசெய்து,மன அழுத்தமில்லாத மற்றும் திறமையான சுகாதார நிர்வாகத்திற்கு ஆதரவளிக்கிறது.

இந்தக் கூட்டாண்மை, இரண்டு நம்பகமான சுகாதார சேவை வழங்குநர்களின் சிறப்பம்சங்களை ஒருங்கிணைத்து, மிகவும் சீரான மற்றும் எளிமையான மருந்து சேவை அனுபவத்தை வழங்குகிறது. Doc990 தனது டிஜிட்டல் தளத்துடன் மருந்துகளை order செய்தல் மற்றும் விநியோகித்தல் போன்ற சேவைகளை இணைப்பதன் மூலம், "உங்களின் கைகளில் ஆரோக்கியம்" என்ற தனது அர்ப்பணிப்பை இந்தக் கூட்டு முயற்சி மூலம் நிரூபித்துள்ளது. இதன் விளைவாக, இலங்கையர்களுக்கு உயர்தர சுகாதார சேவைகள் மேலும் எளிதாகக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.