பொருள் விரிவாக்கம்

டயலொக் ஆசிஆட்டா நிறுவனம் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான Forrester's Customer-obsessed Enterprise விருதை வென்றது

2023 மே 28         கொழும்பு

 

Innovative IoT Solution to Nurture Local Rubber Plantations

புகைப்படத்தில் இடமிருந்து வலமாக: டினர வகவத்த, தலைவர் - வாடிக்கையாளர் அனுபவ மாற்றம் மற்றும் வணிக தரவு மொழிபெயர்ப்பு, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, சாண்ட்ரா டீ சொய்ஸா, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இன் தலைமை வாடிக்கையாளர் சேவை குழும அதிகாரி மற்றும் டேன் ஆண்டர்சன், Forrester நிறுவனத்தின் சர்வதேச ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியின் சிரேஷ்ட துணைத்தலைவர்

சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை நிறுவனமான Forrester நிறுவனமானது, வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட வணிக மேம்பாடு, வாடிக்கையாளர்களைத் தக்கவைத்தல் மற்றும் வணிகச் செயற்பாட்டில் தொழிற்படும் பணியாளர்களின் ஈடுபாடு ஆகிய விடயங்களில் டயலொக் நிறுவனத்தின் செயற்பாட்டை அங்கீகரிப்பதற்காகவே டயலொக் நிறுவனத்திற்கு மேற்படி விருதை வழங்கியது.

அதற்கமைய, இலங்கையின் முதன்மை தொலைத்தொடர்பு இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை அனுபவத்தை வழங்குவதற்காக தனது சேவைகளில் தொடர்ந்து முதலீடு செய்தமைக்காகவே மேற்படி ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான Forrester's Customer-Obsessed Enterprise - APAC விருதைப் பெற்றது. இலங்கையில் முதன்முறையாக 5G தொழில்நுட்பத்தை பரிசோதித்த பெருமையைப் பெற்றுள்ள டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தனித்துவமான அனுபவத்தை வழங்குவதன் மூலம் தனது வாடிக்கையாளர்களிடையே சிறந்த நம்பகத்தன்மையையும் நல்ல தொடர்பையும் பேணுவதன் மூலம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் சேவைச் சூழலை உருவாக்க எப்போதும் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகின்றது.

"ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான வாடிக்கையாளரின் அபிமானத்தை குறிக்கும் விதமாக Customer-obsessed Enterprise விருதை நமது நிறுவனம் பெறுவது எங்கள் நிறுவனத்திற்கு ஒரு பெரிய கெளரவமாகும்" என டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி தலைமை வாடிக்கையாளர் சேவைகள் குழும அதிகாரி திருமதி சாண்ட்ரா டி சொய்சா தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "ஆத்மார்த்தமான சேவையை வழங்குல் எனும் நமது அடிப்படைக் கோட்பாட்டின்படி செயற்படுவதால், எங்கள் அனைத்து பணிகளிலும் வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்க முடிந்துள்ளது. அதன் மூலம் நமது வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான சேவையை வழங்குவதற்கு சாத்தியமாகியுள்ளது. இந்த விருது, சேவைகளை வழங்குவதில் நமது அசைக்க முடியாத உறுதி,பேரார்வத்துடன் 'ஆத்மார்த்தமான சேவை' மற்றும் 'எதிர்காலம் இன்றே' என நாம் அளித்த வாக்குறுதியையும் அர்த்தமுள்ளதாக்கும் எங்கள் ஊழியர்களின் மகத்தான அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும்" என்றார்.

“ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான Forrester's Customer-obsessed Enterprise விருதை வென்றதற்காக டயலொக் ஆசிஆட்டா நிறுவனத்திற்கு வாழ்த்துகள்" என Forrester நிறுவனத்தின் சர்வதேச ஆராய்ச்சி மற்றும் உற்பத்திக்கான சிரேஷ்ட துணைத் தலைவர் டேன் என்டர்சன் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் "தமது வணிகத்தின் தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் லாபத்திற்காக வாடிக்கையாளரை அவர்களின் வணிக நடவடிக்கைகளில் முன்னணியில் வைத்திருப்பது மற்றும் அவர்களின் வாடிக்கையாளர்களையும் அவர்களின் ஊழியர்களையும் தக்கவைத்துக்கொள்வது எப்படி என்பதை டயலொக் மிகவும் சாத்தியமான நடைமுறை வழியில் எங்களுக்கு காட்டியுள்ளது " என்றார்.

ஹில்டன் சிட்னியில் இரண்டு நாட்கள் நடைப்பெற்ற CX APAC 2023 விருது வழங்கல் விழாவின் போதே, ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான Forrester's Customer-obsessed Enterprise விருது வழங்கி டயலொக் நிறுவனம் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. DBS Singapore மற்றும் NRMA Australia ஆகிய நிறுவனங்களும் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தமை முக்கிய அம்சமாகும். உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க ஆராய்ச்சி மற்றும் ஆலோசனைகள் வழங்கல் நிறுவனமாக NASDAQ - இனால் பட்டியலிடப்பட்ட அந்தஸ்தைக் கொண்ட நிறுவனமே Forrester நிறுவனம் ஆகும். வாடிக்கையாளர் அனுபவம், புதிய தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை போக்குகள் பற்றிய விரிவான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு போன்ற செயற்பாடுகளில் மிகவும் பிரபல்யம் பெற்ற நிறுவனமாக Forrester அறியப்படுகிறது. சிறந்த வாடிக்கையாளர் அனுபவங்களை எவ்வாறு வழங்குவது, புத்தாக்கங்களை ஊக்குவித்தல் மற்றும் சந்தையில் போட்டித்தன்மையுடன் இருப்பது எப்படி என்பது குறித்து தொழிற்துறை நிறுவனங்களுக்கு இந்நிறுவனம் நுண்ணறிவு மற்றும் வழிகாட்டுதலை வழங்குகிறது. Forrester CX APAC பற்றி மேலும் அறிய மற்றும் பதிவு செய்ய, https://www.forrester.com/event/cx-apac/ ஐப் பார்வையிடவும்.