பொருள் விரிவாக்கம்

‘டயலொக் 13வது தடவையாகவும் 'ஆண்டின் பிரபலமான தொலைத்தொடர்பு வர்த்தக நாமம்' விருதிற்கு மக்களால் தெரிவாகியுள்ளது

March 20th, 2024         Colombo

 

Dr. Hans Wijayasuriya Receives GSMA Chairman's Award

SLIM-KANTAR மக்கள் விருது 2024 இல் 'ஆண்டின் பிரபலமான தொலைத்தொடர்பு வர்த்தக நாமம்' என்ற விருதை வென்றுள்ள டயலொக் நிறுவனத்தின் சார்பாக டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழுமத்தின் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி லசந்த தெவரப்பெரும குறித்த விருதினை பெறுவதை படத்தில் காணலாம்.

இலங்கையின் #1 தொலைத் தொடர்பு இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, 'SLIM-KANTAR மக்கள் விருதுகள் 2024' தெரிவில் தொடர்ந்து பதின்மூன்றாவது வருடமாக 'ஆண்டின் சிறந்த தொலைத்தொடர்பு வர்த்தக நாமம்' விருதிற்கு இலங்கை வாடிக்கையாளர்களால் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் சந்தைப்படுத்தலுக்கான தேசிய நிறுவனமான Sri Lanka Institute of Marketing (SLIM) மூலம் நடத்தப்படுகின்ற மேற்படி விருதுகள், இலங்கை மக்களின் மனதை வென்ற வர்த்தக நாமங்களை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு நிகழ்வாகும்.

இலங்கை நுகர்வோரின் வாக்குகளின் மூலம் அடையப்பெற்றுள்ள இந்த வெற்றியானது, சேவையில் சிறந்து விளங்குவதற்கான டயலொக்கின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு, புத்தாக்கம் மற்றும் நாட்டின் டிஜிட்டல் மாற்றத்தில் டயலொக் வழங்கும் பங்களிப்பிற்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது என கருதப்படுகின்றது.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழுமத்தின் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி லசந்த தெவரப்பெரும இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில், “தொடர்ச்சியாக பதின்மூன்றாவது வருடமாக ‘ஆண்டின் சிறந்த தொலைத்தொடர்பு வர்த்தக நாமமாக’ டயலொக் அங்கீகரிக்கப்பட்டுள்ளதையிட்டு நாம் பெருமையடைகிறோம். இலங்கையர்களின் வாழ்வை வலுவூட்டுவதற்கு எப்போதும் அயராது பாடுபடும் ஒரு நிறுவனம் என்ற வகையில், அந்த அயராத உழைப்பின் பிரதிபலிப்பை இலங்கையின் நுகர்வோர் மத்தியில் நாம் காணும் போது உண்மையிலேயே மகிழ்ச்சியாக உள்ளது. இந்த விருதானது, எமது வாடிக்கையாளர்களுக்கான நமது 'அசைக்க முடியாத அர்ப்பணிப்பு' மற்றும் 'எதிர்காலத்தை வழங்குவதற்கான நமது தொடர்ச்சியான முயற்சிகளுக்கான அங்கீகாரம்' என கருத முடியும். 'எதிர்காலம் இன்றே' எனும் நமது வர்த்தக நாம தொனிப் பொருளுக்கமைய வாடிக்கையாளர்களின் அபிமான தொலைத்தொடர்பு வழங்குனராக டயலொக்கை தொடர்ந்தும் தேர்ந்தெடுப்பதில் அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கை மற்றும் விசுவாசத்திற்காக எமது நன்றிகளை தெரிவிக்கின்றோம்" என்றார்.

இம்முறை ‘SLIM-KANTAR மக்கள் விருதுகள்’ பதினெட்டாவது வருடமாக வெற்றிகரமான முறையில் 2024 மார்ச் மாதம் 19 ஆம் திகதி நடைபெற்றது. சிறந்த நிறுவனங்களை தெரிவு செய்வதற்கான இந்த வாக்கெடுப்பிற்கான கட்டமைப்பின்படி 15 முதல் 60 வயதுக்குட்பட்ட ஆண்களும் பெண்களும் பங்கேற்கப்படுவர், 5 மாத காலப்பகுதியில் நடத்தப்படும் இந்த செயல்முறையின் போது, கணக்கெடுப்பில் பங்களிக்கும் நபர்களுக்கு ஒரு கட்டமைக்கப்பட்ட வினாக்கொத்து வழங்கப்படும். நாடு தழுவிய அளவில் நேருக்கு நேர் இவ்வாறு நடைபெறும் இந்த ஆய்வு மூலம் மக்கள் வழங்குகின்ற அபிப்பிராங்களின், வாக்குகள் மூலம் மட்டுமே பல்வேறு பிரிவுகளுக்கான விருது பெற்றவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த விருதுகள் இலங்கை மக்களின் மனதை தனிப்பட்ட முறையில் ஈர்க்கும் வர்த்தக நாமங்கள் மற்றும் ஆளுமைகளை அங்கீகரிப்பதாக அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.