இலங்கையில் முதல் நேரடி வலையமைப்பு VoNR சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தி 5G புதுமையில் முன்னிலை வகிக்கிறது டயலொக்
2025 ஏப்ரல் 11 கொழும்பு

இலங்கையின் #1 இணைப்பு வழங்குனரான Dialog Axiata PLC, நாட்டின் 5G பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. அதாவது, இலங்கையின் முதலாவது Voice over New Radio (VoNR) நேரடி 5G வலையமைப்பில் வெற்றிகரமாக சோதனை செய்து முடிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை சமீபத்திய Samsung Galaxy S25 Ultra கைபேசியைப் பயன்படுத்தி நடத்தப்பட்டது, இது தடையற்ற 5G இணைப்பில் முழுமையான 5G Voice அனுபவத்தைக் குறிக்கிறது.
5G புதுமையில் தனது முன்னோடி முயற்சிகளை மேலும் வலுப்படுத்தும் விதமாக, டயலொக் இதற்கு முன்பு 2023 இல் ஒரு PoC Core அமைப்பைப் பயன்படுத்தி ஆய்வக அடிப்படையிலான VoNR Proof of Concept (PoC) சோதனையை நடத்தியது. ஆய்வக அடிப்படையிலான சோதனையிலிருந்து ஒரு படி மேலே சென்று, இந்த சோதனையை டயலொக் இன் நேரடி 5G Standalone (SA) Core வலையமைப்பில் மேற்கொள்ளப்பட்டது, இது VoNR சேவைகளின் உண்மையான உலக சாத்தியக்கூறுகளை நிரூபிக்கிறது.
VoNR பழைய 2G/3G அல்லது VoLTE சேவைகளை விட தெளிவான குரல் தரம், விரைவான அழைப்பு இணைப்புகள் மற்றும் வலுவான பாதுகாப்பை வழங்குகிறது. கூடுதலாக, இது 5G New Calling போன்ற எதிர்கால திறன்களை ஆதரிக்கிறது மற்றும் 5G அலைக்கற்றையின் சிறந்த பயன்பாடு மூலம் ஒட்டுமொத்த வலைப்பின்னல் செயல்திறனை மேம்படுத்துகிறது.
Dialog Axiata PLC இன் குழும தலைமை தொழில்நுட்ப அதிகாரி ரங்க காரியவசம் கூறுகையில், "இந்த மைல்கல் இலங்கையின் 5G பரிணாமத்தை முன்னெடுப்பதில் டயலொக் இன் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது. எங்கள் நேரடி 5G வலையமைப்பில் VoNR ஐ வெற்றிகரமாக சோதனை செய்வது, அடுத்த தலைமுறை இணைப்பின் முழு திறனையும் பயன்படுத்தவும், 5G இல் தடையற்ற, உயர்தர குரல் அனுபவத்தை வழங்குவதற்கும் எங்களை ஒரு படி நெருக்கமாகக் கொண்டு செல்கிறது."
இந்த மைல்கல் டயலொக் இன் பல 5G முதன்மைகளில் ஒன்றாகும். இப்பிராந்தியத்தின் முதல் 5G சோதனை வலையமைப்பு, முதல் 5G Standalone (5G SA) வலையமைப்பு சோதனை, இலங்கையின் முதல் தரநிலை அடிப்படையிலான 5G fixed-wireless pilot பரிமாற்றம் மற்றும் அதன் 5G மேம்பட்ட சோதனை வலையமைப்பில் 6Gbps க்கும் அதிகமான வேகத்தை எட்டியது ஆகியவை இதில் அடங்கும். இது அடுத்த தலைமுறை 5.5G தொழில்நுட்பத்தின் திறன்களை மேலும் நிரூபிக்கிறது. டயலொக் தொழில்நுட்ப முன்னேற்றங்களை முன்னெடுப்பதற்கும், அடுத்த தலைமுறை இணைப்பை விரைவுபடுத்துவதற்கும், 'எதிர்காலம் இன்றே' என்ற இலக்கை இலங்கைக்கு கொண்டு வருவதற்கும் தொடர்ந்து உறுதியாக உள்ளது.