பொருள் விரிவாக்கம்

Dialog தனது National Innovation Challenge போட்டிக்கான கூட்டாளர்களை அறிவித்தது

2023 நவம்பர் 13         கொழும்பு

 

Dialog MAS Enabler Programme

படத்தில் இடமிருந்து வலமாக: விரங்க செனவிரத்ன, Ideamart இன் சிரேஷ்ட பொது முகாமையாளர், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, அர்ஜூன் ஜெகர், துணைத்தலைவர், இலங்கை டிஜிட்டல் சந்தைப்படுத்தல் சங்கம் (DMASL), பேரா. ரஞ்சித் திசாநாயக்க, தலைவர், இலங்கை பொறியியலாளர்கள் நிறுவகம் (IESL), பேரா. மலிக் ரணசிங்க, தலைவர், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் (ICTA), சுபுன் வீரசிங்க, குழும பிரதம நிறைவேற்று அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, சனத் சேனாநாயக்க, பிரதம நிறைவேற்று அதிகாரி/ நிர்வாக இயக்குனர், இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவகம் (SLIM), வரதராஜா குமரகுரு, சிரேஷ்ட திட்ட முகாமையாளர், இலங்கை வர்த்தக சம்மேளனம் (CCC), சிரில் சுடுவெல்ல, ஆணையாளர், இலங்கை கண்டுபிடிப்பாளர்கள் ஆணைக்குழு, கலாநிதி. சச்சீ பணவல, மேலதிக பிரதம புத்தாக்க அதிகாரி, தேசிய கண்டுபிடிப்பு முகவர் நிறுவனம் (NIA).

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனர், Dialog Innovation Challenge இற்கான தனது கூட்டாளர்களை பெருமிதத்துடன் அறிவித்தது. நாட்டை டிஜிட்டல் தொழில்நுட்பம் நோக்கி இட்டுச்செல்லும் வல்லமை படைத்த புத்தாக்கமான டிஜிட்டல் தீர்வுகளை வலுப்படுத்துவதே இந்த முன்னெடுப்பின் நோக்கமாகும்.

சமீபத்திய கூட்டாளர் உள்ளடக்கங்கள், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வளர்க்கும் இந்த தேசிய முயற்சியில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் (ICTA) தேசிய தொழில்நுட்ப பங்காளராக பொறுப்பேற்று சவாலின் தொழில்நுட்ப அடித்தளத்திற்கு ஆதாரமாய் திகழ்கிறது. இலங்கை பொறியியலாளர்கள் நிறுவகம் (IESL), இலங்கை கண்டுபிடிப்பாளர்கள் ஆணைக்குழு (SLIC) மற்றும் தேசிய கண்டுபிடிப்பு முகவர் நிறுவனம் (NIA) ஆகியவை தொழில்நுட்ப சுற்றுச்சூழல் பங்குதாரர்களாக கைகோரக்கின்றன. வர்த்தக அறிவு கூட்டாளர்களாக, இலங்கை வர்த்தக சம்மேளனம் (CCC), இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவகம் (SLIM), மற்றும் இலங்கை டிஜிட்டல் சந்தைப்படுத்தல் சங்கம் (DMASL) ஆகியவை இந்த முன்னெடுப்புக்கு இணையற்ற தொழிற்துறை அறிவை அளிக்கின்றன.

தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் மலிக் ரணசிங்க இந்த கூட்டாண்மை குறித்து பேசுகையில், “ICTA சார்பாக, Innovation Challenge இல் Dialog உடன் பங்காளியாக கைகோர்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். தனியார் அல்லது பொதுத் துறையாக இருந்தாலும், நல்லபடியான வெளிப்பாடுகளுக்கான ஒத்துழைப்பு மீது நாம் நம்பிக்கை வைத்துள்ளோம். National Fuel Pass முன்னெடுப்பானது கடந்த காலத்தில் Dialog உடனான எங்களின் வெற்றிகரமான கூட்டாண்மையை எடுத்துக்காட்டுகிறது. இந்த தேசிய முன்னெடுப்பில் பெருமளவிலான இலங்கையர்களை சென்றடைந்து அவர்களை ஈடுபடுத்துவதில் டயலொக் வெற்றிபெற வாழ்த்துகின்றோம். இந்த முன்னெடுப்பின் வெற்றியை ஊர்ஜிதப்படுத்துவதற்காக டயலொக் மற்றும் தேசிய சமூகத்திற்கு ஆதரவளிக்க ICTA உறுதிபூண்டுள்ளது” என்றார்.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்க அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், “தேசிய Dialog Innovation Challengeக்காக எமது மதிப்பிற்குரிய பங்காளிகளுடன் இணைந்து இந்த மாற்றங்கள் மிகு பயணத்தை மேற்கொள்வதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் பங்காளிகளுடன் இணைந்து, இலங்கை முழுவதும் டிஜிட்டல் கண்டுபிடிப்புகளை இயக்க உள்ளோம். இந்த மூலோபாய கூட்டாண்மை நாட்டின் டிஜிட்டல் எதிர்காலத்தை வடிவமைப்பதில் எங்களின் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். நாடு முழுவதிலும் உள்ள தனிநபர்கள், வணிகங்கள் மற்றும் சமூகங்களுக்கு நன்மை பயக்கும் மாற்றத்தை உருவாக்குவதற்கு தொழில்நுட்பத்தின் சக்தியைப் பயன்படுத்துவதால், இந்த முன்னோடி முயற்சியில் எங்களுடன் இணைந்து கொள்ளுமாறு அனைத்து இலங்கையர்களுக்கும் நாம் அழைப்பு விடுக்கிறோம்” என்றார்.

Dialog Innovation Challenge ஆனது நாட்டின் டிஜிட்டல் எதிர்காலத்திற்கு பங்களிக்குமாறு அனைத்து இலங்கையர்களுக்கும் அழைப்பு விடுக்கிறது. AI, machine learning, IoT, blockchain மற்றும் பல போன்ற தொழில்நுட்பங்களை மேம்படுத்தும் புதுமையான தீர்வுகளை சமர்ப்பிக்க தனிநபர்களும் குழுக்களும் ஊக்குவிக்கப்படுகிறார்கள். ரூ. 5 மில்லியன் தாராளமான பரிசுத்தொகையுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்களுக்கு ரூ. 500 மில்லியன் DIF (Dialog Innovation Foundry) முதலீட்டு நிதியின் ஒரு பகுதியைப் பெறுவதற்கான வாய்ப்பு, வழிகாட்டுதல் மற்றும் டயலொக்கின் கண்டுபிடிப்பு சுற்றுச்சூழல் அமைப்புக்கான அணுகல் ஆகியன கிடைக்கப்பெறும். பங்கேற்பாளர்கள் தங்கள் யோசனைகளை முன்னோக்கி நகர்த்த ஒரு தனித்துவமான வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

பங்கேற்பதற்கு, www.dialog.lk/ic ஐ பார்வையிடுங்கள்