Body

ICC ஆண்கள் T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் 2026 தொடரை இலங்கையர்களுக்கு நெருக்கமாக்கும் டயலொக்

24 January, 2026         Colombo

 

ICC ஆண்கள் T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் 2026 தொடரை இலங்கையர்களுக்கு நெருக்கமாக்கும் டயலொக்

திரு. பந்துல திஸாநாயக்க (கௌரவ செயலாளர், Sri Lanka Cricket), திரு. ரவீன் விக்ரமரத்ன (கௌரவ உப தலைவர், Sri Lanka Cricket), கலாநிதி ஜயந்த தர்மதாச (கௌரவ உப தலைவர், Sri Lanka Cricket), திரு. எஸ். அச்சுதன் (விளையாட்டுத் துறை பணிப்பாளர் நாயகம்), திரு. சுபுன் வீரசிங்க (பணிப்பாளர் / குழுமத் தலைமை நிர்வாக அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி), திரு. தசுன் சானக்க (தலைவர் – இலங்கை தேசிய T20 அணி), திரு. லசந்த தெவரப்பெரும (குழுமத்தின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி) மற்றும் திரு. புபுது அளுத்கெதர (துணைத் தலைவர் / வணிகத் தலைவர் – ஊடகம் மற்றும் Home, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி)

இலங்கையின் #1 இணைப்புச் சேவை வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, 2026 ஆம் ஆண்டுக்கான ICC ஆண்கள் T20 கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை முன்னிட்டு, முக்கிய பங்குதாரர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களை ஒன்றிணைக்கும் வகையில் ஒரு சிறப்பு நிகழ்வை ஏற்பாடு செய்தது. உலகின் மிக அதிகமாக எதிர்பார்க்கப்படும் விளையாட்டு நிகழ்வுகளில் ஒன்றை நோக்கிய இலங்கையின் பயணத்தில், இந்த நிகழ்வு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.

பல ஆண்டுகளாக, இலங்கையில் விளையாட்டை, குறிப்பாக கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு, Dialog தொடர்ச்சியான ஆதரவுப் பங்கினை வகித்து வருகிறது. கூட்டாண்மைகள் மற்றும் தீவு முழுவதும் முன்னெடுக்கப்படும் முயற்சிகள் மூலம் கிரிக்கெட் விளையாட்டை அனைவருக்கும் எளிதாக அணுகக்கூடியதாக மாற்றி, “தேசத்தின் ஆர்வத்திற்கு சக்தி அளித்தல்” என்ற தன்னுடைய உறுதியை Dialog பிரதிபலித்து வருகிறது. இந்தப் பின்னணியில், 2026–2028 காலப்பகுதிக்கான ICC ஊடக உரிமைகளை இலங்கையில் Dialog பெற்றிருப்பது, உலகின் முன்னணி கிரிக்கெட் போட்டிகளை இலங்கை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் Dialog-இன் தொடர்ச்சியான பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக விளங்குகிறது.

இந்நிகழ்வில் விளையாட்டு அமைச்சு, Sri Lanka Cricket, ஊடகங்கள் மற்றும் பெருநிறுவனத் துறையின் பிரதிநிதிகளுடன், முன்னாள் மற்றும் தற்போதைய தேசிய கிரிக்கெட் நட்சத்திரங்களும் கலந்துகொண்டனர். இது இலங்கையின் பெருமைமிக்க கிரிக்கெட் பாரம்பரியத்தையும், ரசிகர்கள் மத்தியில் இவ்விளையாட்டிற்கு இருக்கும் அசைக்க முடியாத ஆதரவையும் கௌரவிப்பதோடு, 2026 உலகக் கிண்ணத் தொடர் உள்ளூர் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தப்போகும் பிரம்மாண்டமான தாக்கத்தையும் முக்கியத்துவத்தையும் பறைசாற்றியது.

உலகக் கிண்ணத் தொடருக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கிரிக்கெட் உலகின் மிக உயரிய அடையாளமான ICC ஆண்கள் T20 உலகக் கிண்ண வெற்றிச் சின்னம் இந்நிகழ்வில் உத்தியோகபூர்வமாகக் காட்சிப்படுத்தப்பட்டது. இது அங்கிருந்தவர்களுக்கு கிரிக்கெட்டின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சின்னத்தை மிக அருகில் நேரில் காண்பதற்கான ஒரு அரிய வாய்ப்பை வழங்கியது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த விளையாட்டுத் துறை பணிப்பாளர் நாயகம் எஸ். அச்சுதன் அவர்கள்: “தேசிய ஒருமைப்பாட்டையும் அடையாளத்தையும் வலுப்படுத்துவதில் விளையாட்டுத் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. கிரிக்கெட் விளையாட்டிற்கு டயலொக் நிறுவனம் வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவைப் போன்ற அரச-தனியார் கூட்டாண்மைகள் (Public–private partnerships), விளையாட்டுத்துறையின் கட்டமைப்பை நிலைநிறுத்துவதற்கும், பிரம்மாண்டமான சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளைப் பொதுமக்கள் அனைவரும் கண்டுகளிப்பதற்கும் மிகவும் அவசியமானவை” என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வு குறித்து டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் பணிப்பாளரும் குழுமத் தலைமை நிர்வாக அதிகாரியுமான சுபுன் வீரசிங்க அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்: “இலங்கையில் கிரிக்கெட் என்பது தலைமுறைகளையும் சமூகங்களையும் கடந்து மக்களின் இதயங்களில் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது. ICC ஆண்கள் T20 உலகக் கிண்ணம் போன்ற உலகளாவிய தொடர்கள், ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கும் மற்றும் என்றும் நினைவில் போற்றும் தருணங்களாகும். டயலொக் நிறுவனத்தைப் பொறுத்தவரை, இத்தகைய அனுபவங்களை மக்களுக்கு வழங்குவதில் ஒரு ஆக்கபூர்வமான பங்கினை ஆற்றுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளோம். அந்த வகையில், தரம், நம்பகத்தன்மை மற்றும் விரிவான ஒளிபரப்பு வசதிகளுடன் பல்வேறு தளங்களின் ஊடாக இலங்கை ரசிகர்கள் இப்போட்டிகளைத் தடையின்றி ரசிப்பதை நாங்கள் உறுதி செய்கிறோம்” என்றார்.

இந்தக் கூட்டாண்மை குறித்து Sri Lanka Cricket நிறுவனத்தின் கௌரவ செயலாளர் திரு. பந்துல திஸாநாயக்க கருத்துத் தெரிவிக்கையில்: “ICC ஆண்கள் T20 உலகக் கிண்ணமானது கிரிக்கெட் விளையாட்டிற்கும், இலங்கையைப் போன்ற கிரிக்கெட்டை நேசிக்கும் நாடுகளுக்கும் ஒரு மிக முக்கியமான தருணமாகும். 2026-2028 காலப்பகுதிக்கான ICC ஊடக உரிமையை இலங்கையில் டயலொக் நிறுவனம் பெற்றுள்ள நிலையில், இந்தக் கூட்டாண்மையானது உலகக் கிண்ணத் தொடரைச் சுற்றி ரசிகர்களிடையே ஒரு பலமான ஈடுபாட்டை உருவாக்குவதோடு, நாடு முழுவதும் கிரிக்கெட் விளையாட்டு கொண்டுள்ள பிரம்மாண்டமான செல்வாக்கையும் பிரதிபலிக்கிறது” என்றார்.

ICC ஆண்கள் T20 கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2026 போட்டியை இலங்கை ரசிகர்கள் Dialog Television மற்றும் Dialog Play App வழியாகக் காணலாம். அதே நேரத்தில், Supreme TV உடனான இலவச ஒளிபரப்பு கூட்டாண்மையின் மூலம், இந்தப் போட்டி பரந்த அளவில் ரசிகர்களைச் சென்றடைவது உறுதி செய்யப்படுகிறது.