டயலொக் ஆசிஆட்டா சுகாதார அமைச்சின் கீழ் உள்ள 12 மருத்துவமனைகளின் அத்தியாவசிய ஆக்சிஜன் செறிவூட்டிகள் நன்கொடையாக வழங்கி ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்கிறது
டயலொக் இன் சுகாதார துறை மேம்பாட்டின் மொத்த முதலீடுகள் ரூ. 400 மில்லியன்
மார்ச் 10, 2022 கொழும்பு

படத்தில் இடமிருந்து வலம்: டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும நிலைத்தன்மை நிபுணர் ஜெயராஜசிங்கம் ஐங்கரராஜ் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும நிலைத்தன்மை சிரேஷ்ட முகாமையாளர், அசித் டி சில்வா, எஸ்.ஏ.ஜே. கருணாதிலக்க, பிரதி பணிப்பாளர் நாயகம் (Actg) (BMES), டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்ஹ, சுகாதார அமைச்சர் கௌரவ. கெஹலிய ரம்புக்வெல்ல, சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் எஸ்.எச்.முனசிங்க, மருத்துவ தொழில்நுட்பம் மற்றும் விநியோகம், ஒருங்கிணைப்பு பொறுப்பு/கோவிட்-19 இயக்குனர் டாக்டர். அன்வர் ஹம்தானி
நோய் தொற்று பரவலுக்கு மத்தியில் தேசிய சுகாதாரப் பாதுகாப்பு முயற்சிகளை மேம்படுத்துவதற்கான அதன் தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இலங்கை முழுவதும் உள்ள 12 மருத்துவமனைகளுக்கு விநியோகிக்க அத்தியாவசிய ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை சுகாதார அமைச்சுக்கு (MOH) நன்கொடையாக வழங்கியது.
இந்த 10 லீட்டர் ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆக்சிஜனை உற்பத்தி செய்வதற்கும், சிலிண்டர்களை நிரப்புவதற்கும் உள்ளமைக்கப்பட்ட வசதிகளுடன் சுகாதார அமைச்சினால் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 மருத்துவமனைகள் மற்றும் கொவிட்-19 சிகிச்சை நிலையங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.. இது முக்கியமான கொவிட் -19 மற்றும் ஏனைய சுவாச நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கியுள்ளது. இந்த நன்கொடையானது, தொற்றுநோய்களின் போது தேசிய சுகாதாரப் பாதுகாப்பு முயற்சிகளுக்கு வலுவூட்டுவதற்காக டயலொக் வழங்கிய உறுதிமொழிக்கு அமைய பல திட்டங்களைப் பின்பற்றுகிறது. இன்றுவரை 446 மில்லியன் ரூபாவை மொத்தமான முதலீடு செய்துள்ளது.
இந்நிகழ்வின் போது உரையாற்றிய சுகாதார அமைச்சர் கௌரவ. கெஹலிய ரம்புக்வெல்ல “முழு உலகமும் தொற்று பரவலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டில் உள்ள முறைமைக்கு முடிந்தவரை ஆதரவினை வழங்க வேண்டியிருந்த நிலையில் டயலொக் அனைத்து நடவடிக்கைகளிலும் எங்களுக்கு பெரிய அளவில் உதவ முன்வந்தது. எப்பொழுதும் தங்கள் நல்லெண்ணத்தை விரிவுபடுத்தும் டயலொக் நிறுவனத்திற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம். இந்த தொற்று பரவலின் ஆரம்பம் காலம் முதல் டயலொக் நிறுவனம் எங்களுக்கு பல்வேறு வழிகளில் உதவிகளை வழங்கி வருகின்றது. சுகாதாரம் என்பது அரசாங்கத்தின் ஒரு நலன்புரித் துறையாக இருந்து வருகிறது, இந்த நலன்புரித் துறையின் ஒரு பகுதியாகவும் டயலொக் நிறுவனமும் உள்ளது”.
டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இன் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்ஹ கருத்து தெரிவிக்கையில், “தொற்றுநோயை பரவலை தடுப்பதற்கு அவர்களின் கூட்டு முயற்சிகளுக்காக அரசாங்கம், சுகாதார அமைச்சு மற்றும் முன்னணியில் அயராது உழைக்கும் அனைவருக்கும் நாங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். சுகாதார அமைச்சால் தேர்ந்தெடுக்கப்பட்ட மிகவும் தேவைப்படும் 12 மருத்துவமனைகளுக்கு இந்த ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். தேசிய கொவிட்-19 தணிப்பு முயற்சிகளை ஆதரிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.