Dialog நிறுவனம், GovPay கொடுக்கல்-வாங்கல்களை 55,000-க்கும் மேற்பட்ட eZ Cash நிலையங்கள் ஊடாக அனைத்து இலங்கையர்களுக்கும் சாத்தியமாக்குகிறது
2026 ஜனவரி 28 கொழும்பு
இடமிருந்து வலமாக: திருமதி ரேணுகா பெர்னாண்டோ (குழும தலைமை டிஜிட்டல் சேவைகள் அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி); திரு. கே. வி. கே. அல்விஸ் (பணிப்பாளர், கொடுப்பனவுகள் மற்றும் தீர்வுத் திணைக்களம், இலங்கை மத்திய வங்கி); திரு. சன்ன டி சில்வா (தலைமை நிர்வாக அதிகாரி, LankaPay); மற்றும் திரு. சுபுன் வீரசிங்க (பணிப்பாளர் / குழும தலைமை நிர்வாக அதிகாரி டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி) ஆகியோருடன் கௌரவ பொறியியலாளர் எரங்க வீரரத்ன (டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர்) முதலாவது உத்தியோகபூர்வ கொடுக்கல்வாங்கலை மேற்கொள்கின்றனர்.
இலங்கையின் முதன்நிலை mobile wallet தளமான Dialog eZ Cash, அரசாங்கத்தின் டிஜிட்டல் கட்டண சேவைகளின் பரவலை விரிவுபடுத்தும் வகையில், தீவு முழுவதும் உள்ள 55,000-க்கும் மேற்பட்ட eZ Cash விற்பனை மையங்கள் மூலம் GovPay சேவையை செயல்படுத்தியுள்ளது. இதன் மூலம், இருப்பிடம் அல்லது தொழில்நுட்ப அணுகல் எதுவாயினும், அனைத்து இலங்கையர்களுக்கும் அரசாங்க கட்டண சேவைகள் எளிதாக கிடைக்க உறுதி செய்யப்படுகிறது. இது, டிஜிட்டல் பொது சேவைகளிலும் நிதி உட்புகுத்தலிலும் (Financial Inclusion) அனைவருக்கும் சமமான அணுகலை உருவாக்கும் முக்கியமான முன்னேற்றமாகும்.
GovPay மற்றும் eZ Cash உத்தியோகபூர்வ அங்குரார்ப்பண நிகழ்வு, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் கௌரவ பொறியியலாளர் எரங்க வீரரத்ன அவர்களின் தலைமையில் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் பண்டார ஹேரத் (ஓய்வு), டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் பணிப்பாளரும் குழும தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு. சுபுன் வீரசிங்க, LankaPay தலைமை நிர்வாக அதிகாரி திரு. சன்ன டி சில்வா, இலங்கை மத்திய வங்கியின் கொடுப்பனவுகள் மற்றும் தீர்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு. கே. வி. கே. அல்விஸ் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
பிரதி அமைச்சர் மற்றும் டயலொக் குழும தலைமை நிர்வாக அதிகாரியினால் இந்த சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் எவ்வாறு வசதியாக அரச கொடுப்பனவுகளைச் செய்யலாம் என்பதை விளக்கும் வகையில் பிரதி அமைச்சரினால் முதலாவது உத்தியோகபூர்வ கொடுக்கல்வாங்கல் மேற்கொள்ளப்பட்டது.
நிகழ்வில் உரையாற்றிய பிரதி அமைச்சர் கௌரவ பொறியியலாளர் எரங்க வீரரத்ன, “eZ Cash வலையமைப்பின் ஊடாக GovPay சேவையை விரிவுபடுத்துவது, டிஜிட்டல் அரச சேவைகள் ஒவ்வொரு குடிமகனையும் சென்றடைவதை உறுதி செய்வதற்கான ஒரு முக்கியமான படியாகும். இது இலங்கையின் பரந்த டிஜிட்டல் பொருளாதார தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க அமைகிறது,” என்றார்.
டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழும தலைமை நிர்வாக அதிகாரி திரு. சுபுன் வீரசிங்க குறிப்பிடுகையில், “இந்த முன்னெடுப்பு வெறும் கொடுப்பனவுகளுக்கு அப்பாற்பட்டு, குடிமக்களுக்கும் பொதுச் சேவைகளுக்கும் இடையிலான தொடர்பை தேசிய அளவில் வலுப்படுத்துகிறது. 55,000-க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள் ஊடாக நிதி உள்ளடக்கம் மற்றும் நாட்டின் டிஜிட்டல் மாற்றத்திற்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம்,” என்றார்.
eZ Cash உடனான GovPay ஊடாக, நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்துவதற்கும் டிஜிட்டல் சேவைகளை நாடு முழுவதும் கொண்டு சேர்ப்பதற்கும் டயலொக் தனது அர்ப்பணிப்பைத் தொடர்கிறது. மேலதிக விபரங்களுக்கு 0777 456 456 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும் அல்லது https://www.ezcash.lk/ இணையதளத்தைப் பார்வையிடவும்.