EFC தேசிய சிறந்த தொழில்வழங்குநர் விருதுகள் 2025: இலங்கையின் சிறந்த 10 நிறுவனங்களில் ஒன்றாக டயலொக் தெரிவு
2026 பிப்ரவரி 17 கொழும்பு
சாடிக் காசிம் (உதவி மேலாளர் - பணியாளர் உறவுகள்), டீனா கம்லத் (தலைவர் - மனிதவள செயல்பாடுகள்), சுபுன் வீரசிங்க (இயக்குநர் / குழும தலைமை நிர்வாக அதிகாரி), குசலித தேவ்ருவன் (தலைவர் - மனிதவள வணிகப் பங்காளர் மற்றும் கலாசாரம்), ஹிமாஷா கொலம்பகே (மேலாளர் - மனிதவள வணிகப் பங்காளர்), ரேகா வீரசூரிய (குழும தலைமை மக்கள் அதிகாரி), ஆயுஷாதி வேரகே (மேலாளர் - பணியாளர் ஈடுபாடு மற்றும் கலாசாரம்) மற்றும் துமிது தஸநாயக்க (உதவித் துணைத் தலைவர் - குழும வெகுமதிகள் மற்றும் நிறுவன வடிவமைப்பு).
இலங்கையின் முன்னணி இணைப்புச் சேவை வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, இலங்கை மு தொழில்வழங்குநர் சம்மேளனத்தினால் (EFC) ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய சிறந்த தொழில்வழங்குநர் விருதுகள் 2025 நிகழ்வில், நாட்டின் சிறந்த 10 தொழில்வழங்குநர்களில் (Top 10 Employers) ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நீண்டகால வளர்ச்சி, உள்ளடக்கிய பணியிடப் பண்பாடு மற்றும் ஊழியர்களின் சிறப்பான செயல்திறன் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கும் டயலொக் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை இந்த விருது உறுதிப்படுத்துகின்றது.
சர்வதேச தரத்திலான தலைமைத்துவ நடைமுறைகள், பணியிட கலாசாரம் மற்றும் மனிதவள மேலாண்மை முறைமைகளின் அடிப்படையில் இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது. ஊழியர்களின் ஈடுபாட்டை அதிகரிப்பதற்கும், அவர்களின் தொழில்முறை வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் டயலொக் நிறுவனம் தொடர்ச்சியாக முதலீடு செய்து வருகின்றது.
இந்த அங்கீகாரம் குறித்து கருத்து தெரிவித்த டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும தலைமை மக்கள் அதிகாரி ரேகா வீரசூரிய, "டயலொக்கில், வலுவான செயல்திறன் என்பது ஒரு சிறந்த கலாசாரத்திலிருந்தே ஆரம்பமாகின்றது என நாங்கள் நம்புகிறோம். இலங்கையின் சிறந்த 10 தொழில்வழங்குநர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டிருப்பது, எமது ஊழியர்கள் மதிப்புடனும் ஆதரவுடனும் பணியாற்றுவதற்கான சூழலை உருவாக்குவதில் எமக்கிருக்கும் பொறுப்பை மீள உறுதிப்படுத்துகின்றது," எனத் தெரிவித்தார்.