Body

வவுனியா அபீஷா வைத்தியசாலையுடன் வட மாகாணத்திற்கு தனது சேவையை விரிவுபடுத்துகிறது Doc990

2026 ஜனவரி 12         கொழும்பு

 

இடமிருந்து வலமாக: ஆர். கிருஷ்ணரூபி, ஊழியர், அபிஷா வைத்தியசாலை; எம். துர்க்கா, ஊழியர், அபிஷா வைத்தியசாலை; சர்மேன்ராஜ் ஹரிஹரன், உதவி மேலாளர் - தகவல் தொழில்நுட்ப செயல்பாடுகள் (IT Operations), Digital Health Pvt Ltd; டாக்டர் சிவப்பிரகாசம் சிவமோகன், பணிப்பாளர் - அபிஷா வைத்தியசாலை; தர்ஷன் ரொபர்ட், குழுத் தலைவர் - வணிக மேம்பாடு (Business Development), Digital Health Pvt Ltd; தேவேந்திரன் ரொஷன், சிரேஷ்ட கணக்கு மேலாளர் - வணிக மேம்பாடு, Digital Health Pvt Ltd ; ககனக்க கல்ஹார, முகாமைத்துவப் பயிற்சியாளர் - வணிக மேம்பாடு, Digital Health Pvt Ltd.

இலங்கையின் முதற்தர இணைப்பு வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இன் துணை நிறுவனமான Digital Health (Pvt) Ltd இனால் இயக்கப்படும், இலங்கையின் முன்னோடி டிஜிட்டல் சுகாதார தீர்வுகளை வழங்கும் Doc990, வவுனியாவிலுள்ள அபீஷா வைத்தியசாலையுடன் இணைந்ததன் மூலம் தனது சேவையை வட மாகாணத்திற்குப் பெருமையுடன் விரிவுபடுத்தியுள்ளது. இருப்பிடம் எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு இலங்கையருக்கும் தரமான சுகாதார சேவையை எளிதாகக் கிடைக்கச் செய்யும் Doc990 இன் இலட்சியத்தில் இது மற்றுமொரு மைல்கல்லாகும்.

இந்தக் கூட்டாண்மையின் மூலம், வவுனியா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நோயாளிகள் இப்போது அபீஷா வைத்தியசாலையில் வைத்தியர்களைச் சந்திப்பதற்கான நேரத்தை (Doctor channeling appointments) Doc990 தளத்தின் மூலம் இலகுவாக முன்பதிவு செய்ய முடியும். இந்த முயற்சியானது நோயாளிகள் ஒரு வைத்தியரை முன்பதிவு செய்வது முதல் ஆலோசனை பெறுவது வரை மிகவும் தடையற்ற, வினைத்திறனான மற்றும் வெளிப்படையான சுகாதார அனுபவத்தைப் பெற வழிவகுக்கிறது.

அபீஷா வைத்தியசாலையின் இணைவு, Doc990 இன் விரிவடைந்து வரும் சுகாதார பங்காளிகளின் வலையமைப்பில் மற்றுமொரு மைல்கல்லாக அமைவதோடு, புதிய சமூகங்களுக்கு தனது சேவையை விரிவுபடுத்துவதுடன் இலங்கையின் முன்னணி டிஜிட்டல் சுகாதார தளமாக அதன் பங்கையும் உறுதிப்படுத்துகிறது. இந்த ஒத்துழைப்பானது நோயாளிகள், வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலைகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைத்து, அனைவருக்கும் அதிக அணுகல், வசதி மற்றும் தரமான பராமரிப்பை வழங்குவதன் மூலம் நாட்டின் சுகாதாரத் துறையை மாற்றுவதற்கான Doc990 இன் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.