பொருள் விரிவாக்கம்

டயலொக் அனுசரணையில் மீண்டும் இலங்கையின் எதிர்காலத் தலைவர்களைக் கண்டறியும் Elephant House SuperHeroes போட்டியின், இரண்டாம் கட்டம் நடைபெற ஏற்பாடாகியுள்ளது

2023 மே 19         கொழும்பு

 

Innovative IoT Solution to Nurture Local Rubber Plantations

புகைப்படத்தில் (இ-வ) : கசுன் குணரத்ன – சந்தைப்படுத்தல் தலைவர் – CCS Frozen Confectionery, John Keells Holdings இன் உதவி உப தலைவர், சுசார டினால் – தலைமை நிறைவேற்று அதிகாரி, வரையறுக்கப்பட்ட தனியார் MTV Channels, மற்றும் ஹர்ஷ சமரநாயக்க – உப தலைவர் – வர்த்தகநாமம் மற்றும் ஊடகம், குழும சந்தைப்படுத்தல், டயலொக் ஆசிஆட்டா பீஎல்சி

முதல் கட்டத்தின் நம்பமுடியாத வெற்றியின் பின்னர், டயலொக் அனுசரணையில் இடம்பெறும் எலிஃபன்ட் ஹவுஸ் சுப்பர்ஹீரோஸ் (Elephant House SuperHeroes) போட்டியானது, இலங்கை இளைஞர்களின் திறமையை போஷிக்கவும் அங்கீகரிக்கவும், உலக அளவில் அவர்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்குமான நோக்கில் மீண்டும் அடுத்த கட்டத்தை நோக்கி களம் காண்கின்றது. நாடளாவிய ரீதியில் மிகவும் பிரபலமான ஐஸ்கிரீம் வர்த்தக நாமமான Elephant House Ice Cream, இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி உடன் மீண்டும் கைகோர்த்துள்ளது. இப்போட்டியானது இலங்கையின் எதிர்கால சந்ததியினரை ஒன்றிணைக்கவும், ஈடுபாடு கொள்ளவும் மற்றும் மேம்படுத்தவும் முயல்கிறது, மேலும் அவர்கள் திறமையான புத்தாக்கத் தலைவர்களாகவும் பொறுப்புள்ள குடிமக்களாகவும் மாறுவதற்கான வழிவகைகளை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

டயலொக் அனுசரணையில் இடம்பெறும் Elephant House SuperHeroes போட்டியானது 'Super Talent' (சிறந்த திறமையாளர் ), 'Super Innovator' (சிறந்த புத்தாக்குனர்) மற்றும் 'Super Responsible' (சிறந்த பொறுப்புமிகுந்தவர்) ஆகிய மூன்று பிரிவுகளைக் கொண்டிருக்கும். இந்த போட்டிக் களமானது மேற்படி திறமைகளை உள்ளடக்கிய தனிநபர்கள் மற்றும் குழுக்கள் பங்கேற்கவும், தனித்துவமான திறமைகள், புதுமையான திறன்கள் மற்றும் நிலையான வாழ்க்கை முயற்சிகளை வெளிப்படுத்தவும் களம் அமைக்கின்றது. அடுத்த ஆறு மாதங்களில், மேற்படி போட்டிகளில் பங்கேற்கும் போட்டியாளர்களில் வாராந்த பரிசுகளுடன் மூன்று பிரிவுகளிலும் மூன்று வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்நிகழ்ச்சி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலை 6 மணிக்கு சிரச டிவியில் ஒளிபரப்பாகும். டயலொக் அனுசரணையில் இடம்பெறும் Elephant House Super Heroes போட்டியானது வெற்றியாளர்களுக்கு அவர்களின் கல்வி மற்றும் திறமை மேம்பாட்டு வாய்ப்புகளுக்கு உதவும் வகையில் ஊக்குவிப்பு பரிசுகளை வழங்கவும் முன்வந்துள்ளது.

“இலங்கை வாழ் குடும்பங்களுக்கு நெருக்கமான ஒரு வர்த்தக நாமம் என்ற ரீதியில், பிள்ளைகள் நம்பிக்கையுடன் முன்வந்து தமது திறமைகளை வெளிப்படுத்துவதற்கான ஒரு களம் அல்லது மேடையின் அவசியத்தை நாங்கள் உணர்ந்துள்ளோம். இன்றைய பிள்ளைகள் நமது தேசத்தின் எதிர்காலத் தலைவர்கள் ஆவர், மேலும் அவர்களை திறமையான, பொறுப்பான நபர்களாக வளர வழியமைப்பது நமது பொறுப்பாகும். எலிஃபென்ட் ஹவுஸ் சுப்பர் ஹீரோஸ் போட்டியும் இந்த நோக்கத்தின் ஒரு வெளிப்பாடாகும்” என CCS Frozen Confectionery இன் சந்தைப்படுத்தல் தலைவரும் துணை உப தலைவருமான (JKH) கசுன் குணரத்ன இது குறித்து தெரிவித்தார்.

"டயலொக் நிறுவனமாகிய நாம், இலங்கை இளைஞர்களுடன் அர்த்தமுள்ள உறவுகளை உருவாக்குவதற்கும் அவர்களின் திறமைகளை வளர்ப்பதற்கும் கடமைப்பட்டுள்ளோம்" என வர்த்தகநாம மற்றும் ஊடக துணைத் தலைவர் ஹர்ஷ சமரநாயக்க தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் " டயலொக் அனுசரணையில் எலிஃபன்ட் ஹவுஸ் சுப்பர் ஹீரோஸ் போட்டியை நடத்துவதில் எலிபன்ட் ஹவுஸுடன் மீண்டும் கைகோர்த்திருப்பதையிட்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். இலங்கை இளைஞர்கள் தமது திறமைகள் மற்றும் திறன்களை வெளிப்படுத்தவும் சமூகத்திற்கு சாதகமான பங்களிப்பை வழங்கவும் இந்த போட்டியானது ஒரு தளத்தை வழங்குகிறது. இந்த முயற்சியின் மூலம் இலங்கையின் எதிர்கால தலைவர்கள் உருவாவதை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்" என்றார்.

இப்போட்டிகளில் அடங்குகின்ற 'Super Innovator' (சிறந்த புத்தாக்குனர்) பிரிவானது , 2022-2023 வரை இருக்கும் வளங்களைப் பயன்படுத்தி தாம் கண்டுபிடித்த அல்லது உருவாக்கிய புதுமையான சாதனம்/ யோசனைகளை காண்பிக்க இளைஞர்களை ஊக்குவிக்கிறது. 'Super Talent' (சிறந்த திறமையாளர்) பிரிவின் கீழ், நடனம், நாடகம் அல்லது பிற படைப்பாற்றல் திறமைகள் போன்ற தனித்துவமான பொழுதுபோக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்படுகின்றது. 'Super Responsible' (சிறந்த பொறுப்புமிகுந்தவர்) பிரிவில் சமூகத்திற்கு நன்மை பயக்கும் ஒரு தீர்வு / திட்டம் / கண்டுபிடிப்பை உருவாக்கியவர்களை கொண்டிருக்கும்.