Body

Huawei இலங்கையில் பல தனியார் துறைகள் மற்றும் நிறுவனங்களால் செயல்படுத்தப்படும் "மனிதநேய ஒன்றிணைவு" அவசரகால நிவாரண திட்டத்துடன் கைகோர்க்கிறது.

பாதிக்கப்பட்ட 200,000 அதிகளவான குடும்பங்களுக்கு அவசரகால நிவாரணம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது

ஆகஸ்ட் 10, 2022         கொழும்பு

 

Huawei Joins Manudam Mehewara Emergency Relief Initiative

படத்தில் இடமிருந்து வலம்: சர்வோதய சிரமதான இயக்கத்தின் தலைவர் டொக்டர். வின்யா ஆரியரத்ன, Huawei Technologies Lanka Pvt Ltd நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி Liang Yi, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும பிரதான தொழில்நுட்ப அதிகாரி பிரதீப் டி அல்மேடா, Huawei Technologies Lanka Pvt Ltd நிறுவனத்தின் சிரேஷ்ட தயாரிப்பு தீர்வு முகாமையாளர் காவிந்த மஞ்சுள

இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கும் நோக்கில் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, MAS Holdings, Hemas Holdings PLC, விநியோக பங்காளியாக சர்வோதய சிரமதான சங்கம் மற்றும் சுயாதீன கணக்காய்வாளர் PwC ஸ்ரீலங்கா ஆகியவற்றால் நிறுவப்பட்ட இந்த மனிதநேய ஒன்றிணைவு செயற்றிடடத்திற்கு CBL Group, Citi, Sunshine Holdings PLC மற்றும் Huawei Technologies Lanka Co ஆகியவையும் பின்னர் படிப்படியாக இணைந்துக்கொண்டன.

சமூக நல்வாழ்வை இலக்காகக் கொண்ட பங்காளர்களுடன் இணைந்து செயல்படுத்தப்படும் 'மனிதநேய ஒன்றிணைவு' செயற்றிட்டத்தின் மூலம் நாடளாவிய ரீதியில் பாதிக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த 200,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அவசரகால நிவாரணம் வழங்குவதே இச்செயற்றிட்டத்தின் நோக்கமாகும். தற்போது ​​25 மாவட்டங்களிலும் அவசரகால நிவாரணங்கள் விநியோகிக்கப்படுவதுடன் மேலும் 100,000 க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இதுவரை நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. பயனுள்ள பொருளாதார முன்மாதிரி திட்டத்தினூடாக நிலையான நலன் பரிமாற்ற முறையொன்று நாட்டில் நிறுவப்படும்வரை இந்த “மனிதநேய ஒன்றிணைவு” நிவாரண திட்டமானது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்

“இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் இயங்கி வரும் ஒரு நிறுவனம் என்ற வகையில், Huawei, இலங்கை எப்போதும் சவால்களை வெற்றிகொள்ளக்கூடிய வரலாற்று புகழை கொண்ட அழகான தேசம் என்று உறுதியாக நம்புகிறது. இலங்கைக்குள் இலங்கைக்கான எங்கள் அர்ப்பணிப்பு என்ற வகையில், இந்த சவாலான நேரத்தில் இலங்கை மக்களுடன் நாங்கள் என்றும் ஒன்றாக இணைந்து நிற்கிறோம். எனவே, தற்போதைய நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களை ஆதரிப்பதற்காக எங்கள் மூலோபாய பங்காளிகளான டயலொக் ஆசிஆட்டாவுடன் கைகோர்க்க முடிவு செய்தோம். இலங்கை விரைவில் ஒரு நிலையான மற்றும் வளமான எதிர்காலத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்று Huawei Sri Lanka இன் பிரதம நிறைவேற்று அதிகாரி Liang Yi தெரிவித்தார்.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இன் குழும தலைமை தொழில்நுட்ப அதிகாரி பிரதீப் டி அல்மேடா கருத்து தெரிவிக்கையில், “மனிதநேய ஒன்றிணைவு" மனிதாபிமான செயற்றிட்டத்திற்கு நாடளாவிய ரீதியில் பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் இந்த திட்டத்தில் இணைந்துக்கொண்டமைக்காக அனைத்து பங்காளிகள் சார்பாக, Huawei க்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். 200,000 அல்லது அதற்கு மேற்பட்ட குடும்பங்களை ஆதரிப்பதே எங்கள் இலக்காகும், மேலும் இந்த இலக்கை அடைய சமூக நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட பிற நிறுவனங்களையும் எங்களுடன் இணைந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். ஒற்றுமையின் மூலம் எங்களால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும், 17 மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்களின் விருப்பமான டிஜிட்டல் பங்காளியாக, எங்கள் சமூகத்தின் தேவையின் போது அவர்களுக்கு ஆதரவளிப்பது எங்கள் பொறுப்பு என்றும் நாங்கள் எப்போதும் நம்புகிறோம்.

நாட்டின் தற்போதைய பொருளாதார சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ள நமது சொந்த மக்களுக்கு அவசரகால நிவாரணம் வழங்குவதற்கான கூட்டு முயற்சியில் இணையுமாறு ஏனைய அனைத்து பெருநிறுவனங்களுக்கு மனிதநேய ஒன்றிணைவு அழைப்பு விடுக்கின்றது. அனைவரும் தங்களின் கிரெடிட்/டெபிட் கார்ட், வங்கி வைப்பு eZ Cash, Star Points, genie அல்லது 0776 421421 என்ற இலக்கத்திற்கு Top up செய்வதன் மூலம் இணைந்துக்கொள்ள முடியும். நன்கொடை வழங்குதல் தொடர்பாக செயல்முறை பற்றிய மேலதிக தகவல்களுக்கு https://dlg.lk/donate க்கு செல்லுங்கள்.

மனிதநேய ஒன்றிணைவு பற்றிய மேலதிக தகவல்களுக்கு https://dlg.dialog.lk/manudam-mehewara க்கு செல்லுங்கள்.