பொருள் விரிவாக்கம்

Diaog – SLESA தேசிய Esports விளையாட்டு விருதுகள் 2023

2023 பெப்ரவரி 28         கொழும்பு

 

Dialog – SLESA National Esports Awards 2023

DIALOG-SLESA தேசிய Esports விருதுகள் - 22 இல் Maximum Esports சிறந்த Esports Clan பட்டத்தை சூடிக்கொண்டது

Maximum Esports தலைவரான ஷிஹான் மொறாயஸ் தனது குழுவினர் சகிதமாக விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் அமல் எதிரிசூரியவிடமிருந்து வெற்றிக் கிண்ணத்தை பெறுவதை படத்தில் காணலாம்.

மேலும் படத்தில் (இடமிருந்து வலமாக ): டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும சந்தைப்படுத்தல் வர்த்தக மற்றும் ஊடக பிரிவு உப தலைவர் ஹர்ஷ சமரநாயக்க , டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி ஐடியாமார்ட் பிரிவின் சிரேஷ்ட பொது முகாமையாளர் விரங்க செனவிரத்ன, இலங்கை Esports இன் தலைவர் ரவீன் விஜயதிலக, இலங்கை Esports இன் செயலாளர் ரமேஷ் லியனகே ஆகியோரையும் காணலாம்.

விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் அமல் எதிரிசூரிய தலைமையில் அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்ற ஏழாவது Dialog – SLESA ஈஸ்போர்ட்ஸ் (Esports) தேசிய விளையாட்டு விருது வழங்கும் விழாவில் இலங்கையின் செம்பியனான Esports விளையாட்டு வீரர்கள் அங்கீகரிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

இலங்கை ஈஸ்போர்ட்ஸ் விளையாட்டுச் சங்கம் (SLESA) 2010 ஆம் ஆண்டில் Gamer.LK மற்றும் நான்கு முன்னணி Esports குலங்களால் நாட்டில் Esports ஐ ஊக்குவிக்கும் மற்றும் மேம்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதாகும். இலங்கை Esports ஆனது நாட்டில் Esports ஐ தரப்படுத்துவதில் முக்கிய பங்கினை வகித்து வருகின்றது, சர்வதேச தரநிலைகள் மற்றும் விதிகளுக்கு இணங்க இளம் Esports விளையாட்டு வீரர்களை சர்வதேச மட்டத்தை அடைய தயார்படுத்துவதை இது நோக்காகக் கொண்டுள்ளது.

2013 ஆம் ஆண்டில் தொடங்கிய தேசிய Esports விருதுகள் விழா, கொரோனா பெருந்தொற்றின் காரணமாக தடைபட்டு மூன்று வருட குறுகிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடைபெற்றுள்ளது. அதற்கமைய 2019, 2020, 2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்ட Esports விளையாட்டு வீரர்கள் அங்கீகரிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குநரும், விளையாட்டுத்துறையின் சிறந்த ஊக்குவிப்பாளருமான டயலொக் ஆசிஆட்டா நிறுவனம், Sri Lanka Esports இன் பெருமைமிக்க அனுசரணையாளராக முன்னோக்கிச் சென்றுள்ளது, இது இலங்கையின் இளைஞர்களை Esports துறையில் ஈடுபடவும் வளரவும் உதவுகிறது. டயலொக் நிறுவனமானது Esports ஐ எதிர்கால விளையாட்டாக அங்கீகரித்து ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இலங்கையில் Esports ஐ மேம்படுத்தி வருகிறது. அந்தவகையில், Dialog உள்நாட்டில் Esports விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி மற்றும் முக்கிய திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன் இலங்கையின் அனைத்து மக்களுக்கும் கட்டமைக்கப்பட்ட Esports ஐ கொண்டுவரவும் உதவுகிறது.

2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் சிறப்பாகச் செயல்பட்ட Esports விளையாட்டு வீரர்கள் மற்றும் குலங்கள் இந்த நிகழ்வில் அங்கீகரிக்கப்பட்டனர், அதேவேளை 2022 இல் சிறந்து விளங்கிய Esports விளையாட்டு வீரர்கள் மற்றும் குலங்களுக்கும் மேடையில் விருது வழங்கப்பட்டது. Esports 2022 ஆம் ஆண்டின் சிறந்த Esports Clan (ஈஸ்போர்ட்ஸ் குலம்) ஆக கிரீடம் சூடப்பட்டது, அதன் உறுப்பினர்கள் பலர் தனிப்பட்ட செயல்திறன் விருதுகள் வழங்கியும் கெளரவிக்கப்பட்டனர்.

இலங்கை மற்றும் தெற்காசிய பிராந்தியத்திற்கு முதன்முறையாக, சர்வதேச அரங்கில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய 39 Esports விளையாட்டு வீரர்களுக்கு இலங்கை Esports தேசிய நிறங்கள் இந்த விழாவில் வழங்கப்பட்டது. இந்த மதிப்புமிக்க விருதானது, அடுத்த தலைமுறை Esports விளையாட்டு வீரர்களை போட்டியிட ஊக்குவிபதாகவும், சாத்தியமான மிக உயர்ந்த திறமைகளை எட்டுவதற்கான ஊக்குவிப்பை வழங்குவதாகவும் அமைந்தது.

“விளையாட்டு வீரர்கள் மற்றும் போட்டி அமைப்புக்கள் எந்தவொரு விளையாட்டின் மையத்தையும் உருவாக்குகின்றன, மேலும் , இலங்கை Esports சிறந்த செயல்திறன் மிக்கவர்கள் மற்றும் இலங்கை Esports துறைக்கு மிகப்பெரிய பங்களிப்பாளர்களை அங்கீகரிக்க முயற்சிக்கிறது. DIALOG-SLESA தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கலானது விளையாட்டு வீரரை முன்னோடியாக நிறுத்துவதுடன் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அவர்கள் வெளிப்படுத்திய திறமையின் சாதனைகளை அங்கீகரிக்கிறது” என இலங்கை Esports இன் தலைவர் ரவீன் விஜயதிலக தெரிவித்தார்.

"இந்த ஆண்டு வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். Sri Lanka Esports இன் அனுசரணையாளர் என்பதில் Dialog நாம் பெருமிதம் கொள்கின்றோம், மேலும் உள்ளூர் Esports விளையாட்டு வீரர்களை வலுவூட்டுவதிலும், Esports ஐ எதிர்கால விளையாட்டாக ஊக்குவிப்பதிலும் எங்களது ஆதரவைத் தொடர்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும சந்தைப்படுத்தல் வர்த்தக மற்றும் ஊடக பிரிவு உப தலைவர் ஹர்ஷ சமரநாயக்க தெரிவித்தார்.

இலங்கையில் Esports ஐ முதன்மையான விளையாட்டாக மாற்றுவதற்கான தனது முயற்சிகளைத் தொடர்வதில் இலங்கை Esports உற்சாகத்துடனும் உறுதியுடனும் எதிர்காலத்தை நோக்கிய அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றது. Dialog மற்றும் ஏனைய பங்காளிகளின் ஆதரவுடன், இலங்கை Esports ஆனது Esports விளையாட்டு வீரர்களுக்கு அவர்களின் திறமைகளை வளர்த்துக்கொள்ளவும் சர்வதேச ரீதியில் உயர் மட்டங்களில் போட்டியிடவும் ஒரு சூழலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.