Body

இலங்கையில் நவீன 'Smart Living' வசதிகளை மேம்படுத்த டயலொக் மற்றும் OREL நிறுவனங்கள் கைகோர்ப்பு

2026 ஏப்ரல் 21         கொழும்பு

 

படத்தில் இடமிருந்து வலமாக: ரனோஜ் நோர்பர்ட், Product Manager IPTV & Smart Home, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; ஷானக பெர்னாண்டோ, Senior Product Manager - Post Paid and Enterprise Business, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; சம்பத் வெல்ஹெனகே, Head of Home Business, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; புபுது அலுத்கெதர, Head of Business - Media & Home, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; லிம் லி சான், Group Chief Operating Officer, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; மஞ்சுள பிரியதர்ஷன, Chief Operating Officer, OREL; சுதத் குமார, Director, Wealth Management, OREL; டாக்டர் ரங்கிக டி சில்வா, Director, Innovations; செல்வி சேதனா அல்விஸ், Head of Electrical & Electronics Product Development (R&D), OREL; கயான் லக்ஷன் பெரேரா, Assistant General Manager, Marketing, OREL; ரகித வனிகசூரிய, Senior Manager, Sales & Marketing (Electronics), OREL.

இலங்கையின் முதன்மை இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, OREL Corporation நிறுவனத்துடன் மூலோபாய ரீதியான கூட்டிணைப்பு ஒன்றினை அறிவித்துள்ளது. டிஜிட்டல் தளங்கள் மற்றும் சாதனப் புத்தாக்கத்தில் கொண்டுள்ள இரு நிறுவனங்களினதும் பலத்தை ஒன்றிணைத்து, இலங்கையர்களுக்கு மேம்பட்ட 'Smart Living' அனுபவங்களை வழங்குவதே இக்கூட்டணிப்பின் நோக்கமாகும்.

இந்த ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, இரு நிறுவனங்களும் டிஜிட்டல் பொழுதுபோக்கு மற்றும் Smart Home தீர்வுகளில் இணைந்து செயற்படவுள்ளன. இதன் முதற்கட்டமாக, OREL நிறுவனத்தின் Smart TV வரிசையில் Dialog Play Smart TV App உள்ளீர்க்கப்படவுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மேலதிக சாதனங்கள் ஏதுமின்றி நேரடியாகத் தமது தொலைக்காட்சிகள் ஊடாகப் பரந்த அளவிலான உள்ளடக்கங்களை அணுக முடியும். அத்துடன், டயலொக்கின் Smart Home App உடன் இணைக்கப்படக்கூடிய Smart power strips உள்ளிட்ட இரு நிறுவனங்களினதும் நாமங்களைக் கொண்ட (Co-branded) Smart Home சாதனங்களும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

OREL நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் வடிவமைப்புத் திறனையும், டயலொக்கின் டிஜிட்டல் தளங்கள் மற்றும் வாடிக்கையாளர் வலையமைப்பையும் ஒன்றிணைப்பதன் மூலம், இலங்கையில் ஸ்மார்ட் கட்டமைப்பை விரிவுபடுத்துவதே இந்த கூட்டாண்மையின் முக்கிய இலக்காகும்.

இந்தக் கூட்டாண்மை குறித்து டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும தலைமை செயல்பாட்டு அதிகாரி திருமதி லிம் லி சான் (Lim Li San) கருத்துத் தெரிவிக்கையில், “வாடிக்கையாளர்கள் தமது அன்றாட வாழ்வில் தொழில்நுட்பத்தை மிக எளிமையாகப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்துவதே டயலொக்கின் முக்கிய உத்தியாகும். OREL உடனான இந்த கூட்டாண்மையின் மூலம், எமது Dialog Play App-ஐ OREL ஸ்மார்ட் டிவிகளில் ஒருங்கிணைப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் 50,000 மணித்தியாலங்களுக்கும் மேலான உள்ளடக்கங்களை எவ்வித மேலதிக உபகரணங்களும் இன்றி (No additional hardware) ரசிக்க முடியும். அதேபோல், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட் ஹோம் சாதனங்களை டயலொக்கின் Smart Home App உடன் இணைப்பதானது, இலங்கையில் ஸ்மார்ட் வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதில் ஒரு முக்கிய மைல்கல்லாகும்” எனத் தெரிவித்தார்.

OREL கார்ப்பரேஷனின் தலைமை செயல்பாட்டு அதிகாரி திரு. மஞ்சுள பிரியதர்ஷன கருத்துத் தெரிவிக்கையில், “வடிவமைப்பு, தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் உற்பத்தித் திறன்களை முழுமையாகக் கொண்டு இலங்கையில் இயங்கும் ஒரு சில நிறுவனங்களில் OREL நிறுவனமும் ஒன்றாகும். டயலொக் உடனான எமது கூட்டணி, எமது உயர்தர சாதனங்களை இலகுவான டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் இணைப்பதன் மூலம் தடையற்ற ஸ்மார்ட் ஹோம் அனுபவத்தை வழங்குகிறது. இது சந்தையில் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

இந்த ஒத்துழைப்பின் ஊடாக, இலங்கையர்களுக்கு நடைமுறைச் சாத்தியமான மற்றும் உள்நாட்டுத் தேவைகளுக்கு ஏற்ற ஸ்மார்ட் தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்க இரு நிறுவனங்களும் இலக்கு வைத்துள்ளன.