பொருள் விரிவாக்கம்

Dialog Finance நுண், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அதிநவீன fintech தீர்வுகளை வழங்கும் Genie Business தளத்தை அறிமுகப்படுத்தியது

2024 ஏப்ரல் 08         கொழும்பு

 

Dialog Powers President’s Gold Cup Volleyball Tournament 2024

படத்தில் இடமிருந்து வலமாக: டயலொக் ஃபைனான்ஸ் பிஎல்சி தலைவரும், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழுமத்தின் பிரதம டிஜிட்டல் சேவைகள் அதிகாரியுமான ரேணுகா பெர்னாண்டோ, Genie வர்த்தக தலைவர் சச்சினி டி சில்வா, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி பணிப்பாரும் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சுபுன் வீரசிங்க மற்றும் டயலொக் ஃபைனான்ஸ் பிஎல்சியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான நசீம் மொஹமட் ஆகியோரை காணலாம்.

இலங்கை வணிகங்களுக்கான Genie Business தளமானது, டயலொக் ஃபைனான்ஸ் பிஎல்சி மூலம் நாட்டிலுள்ள நுண், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (Micro, Small and Medium Enterprises - MSMEs) வணிக பரப்பில் புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்டு புதியதொரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற இதற்கான வெளியீட்டு நிகழ்வில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் பணிப்பாளரும் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சுபுன் வீரசிங்க மற்றும் ஏனைய சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டிருந்தனர். மேற்படி வெளியீட்டு நிகழ்வின் போது, Genie Business அதன் Tap-to-Pay பரிவர்த்தனையையும் சம்பிரதாயபூர்வமாக நடத்தியதுடன், அதன் நேரடி அட்டையை (card) ஏற்றுக்கொள்ளும் தீர்வின் எளிமை மற்றும் செயல்திறனை எடுத்துக்காட்டுவதாக இது அமைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Genie Business இன் மேம்பட்ட இயங்குதளமானது MSME எனும் நுண், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான தடையற்ற பரிவர்த்தனைகளை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளமை அதன் சிறப்பம்சமாகும். பலவிதமான கட்டண ஏற்பு தீர்வுகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், Tap-to-Pay, Payment links, E-Store, Internet Payment Gateway, Card Tokenization, Multi Currency Pricing மற்றும் QR Codes உள்ளிட்ட விரிவான அளவிலான சலுகைகள் மூலம் டிஜிட்டல் சகாப்தத்தை மேம்படுத்துவதற்கு வணிகங்களுக்கு இந்த தளம் அதிகாரம் அளிப்பதுடன், இந்த இயங்குதளமானது MSME களை டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்போடு இணைப்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், புதிய வாடிக்கையாளர் பிரிவுகளுக்கான அணுகலை செயல்படுத்துடன் e-commerce மற்றும் சமூக ஊடக தளங்கள் மூலம் ஈடுபாடுகளை கொண்ட புதிய பிரிவுகளையும் இது திறக்கின்றது. இதேவேளை, இந்த கட்டண ஏற்பு தீர்வுகளுடன் இணைந்து, Genie Business ஆனது MSME துறையிலுள்ள முக்கியமான தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக டிஜிட்டல் கடன் தெரிவுகளையும் வழங்குகின்றது, இந்த வழிமுறையானது வணிகர்கள் தமது வணிகங்களை மேலும் வளர்ப்பதற்கு வழிவகுக்கின்றமை சிறப்பம்சமாகும்.

டயலொக் ஃபைனான்ஸ் பிஎல்சி இன் தலைவரும் குழுமத்தின் பிரதம டிஜிட்டல் சேவைகள் அதிகாரியுமான ரேணுகா பெர்ணான்டோ இது குறித்து தெரிவிக்கையில்; “டயலொக் ஃபைனான்ஸ் இன் Genie Business என்பது ஒரு தளத்திற்கு அப்பாற்பட்டதாகும், இது MSME துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு நெறிமுறை மற்றும் ஆர்வத்தை குறிக்கின்றது எனலாம். இலங்கையில் MSME களின் செயல்பாடுகளை டிஜிட்டல் மயமாக்கவும் அளவிடவும் வடிவமைக்கப்பட்ட இந்த Genie Business வழிமுறையானது சந்தையில் மாற்றத்திற்கான ஊக்கியாக அமைந்துள்ளது என நாங்கள் நம்புகிறோம். மேற்படி Genie Business மூலம், நாங்கள் பரிவர்த்தனைகளை எளிதாக்குவது மட்டுமல்லாமல், புதிய தொடர்புகளை - உறவுகளை உருவாக்குவதுடன், எதிர்காலத்திற்கான பாதையை வகுத்தும் வருவதனால், அதனூடே நுண், சிறிய மற்றும் நடுத்தர வணிகங்கள் (MSME) எதுவும் பின்தங்கும் நிலையை அடையாமல் முன்செல்லும் என்பதும் நிதர்சனமாகும்” என்றார்.

Genie Business இன் அதிநவீன fintech தீர்வுகள், Dialog இன் "எதிர்காலம் இன்றே" என்ற தொலைநோக்குப் பார்வையை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில் அமைந்துள்ளது எனலாம், டயலொக் நிறுவனம் டிஜிட்டல் ரீதியில் வலுவூட்டப்பட்ட இலங்கையை நோக்கிய பயணத்தை தொடர்ந்து வழிநடத்துகின்ற அதன் தனித்துவத்தை இதன் மூலம் எடுத்துக்காட்டுவதாக உள்ளது.