பொருள் விரிவாக்கம்

ஒப்பற்ற பொழுதுபோக்கு! இலங்கையில் Dialog Play எனும் புதிய சகாப்தத்தை ஆரம்பித்து வைக்கும் டயலொக்

2026 பிப்ரவரி 03         கொழும்பு

 

ஹர்ஷ சமரநாயக்க, துணைத் தலைவர் - குழும சந்தைப்படுத்தல், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; புபுது அலுத்கெதர, துணைத் தலைவர் / வணிகப் பிரிவுத் தலைவர் - மீடியா மற்றும் Home, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; லசந்த தெவரப்பெரும, குழும சந்தைப்படுத்தல் அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; சுபுன் வீரசிங்க, பணிப்பாளர் / குழும முதன்மை நிறைவேற்று அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி ஆகியோருடன் Dialog Play-இன் Brand Ambassadors மாதவ விஜேசிங்க, பாலன் ஆண்ட்ரியா மற்றும் ராஷிபிரபா சந்தீபனி ஆகியோர் காணப்படுகின்றனர்.

இலங்கையின் முதற்தர இணைப்புச் சேவை வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, தனது Dialog Television மற்றும் Dialog ViU ஆகிய சேவைகளை ஒன்றிணைத்து, 'Dialog Play' எனும் புதிய அடையாளத்தின் கீழ் ஓர் ஒருங்கிணைந்த பொழுதுபோக்குத் தளத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. 'Entertainment, Unlocked' எனும் வாக்குறுதியுடன் அறிமுகமாகியுள்ள Dialog Play, வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்தமான உள்ளடக்கங்களை (Content), அவர்கள் விரும்பும் திரைகளில் எவ்விடத்திலிருந்தும் தடையின்றி ரசிப்பதற்கான அதிக தெரிவுகளையும், நெகிழ்வுத்தன்மையையும் வழங்குகிறது.

இன்றைய காலகட்டத்தில் இலங்கையர்களின் பொழுதுபோக்குத் தேவைகள் மற்றும் ரசனைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இந்த Dialog Play பிரதிபலிக்கிறது. தொலைக்காட்சி மற்றும் மொபைல் ஆகியவற்றுக்கு இடையே தடையற்ற, தனிப்பயனாக்கப்பட்ட அனுபவங்களை (Personalised experiences) மக்கள் எதிர்பார்க்கும் நிலையில், டயலொக் தனது பொழுதுபோக்குச் சேவைகளை ஒரே தளத்தின் கீழ் கொண்டு வந்துள்ளது. இது சேவைகளை அணுகுவதை எளிதாக்குவதுடன், புதிய வாய்ப்புகளையும் விரிவுபடுத்துகிறது.

திரைப்படங்கள், தந்திநாடகங்கள், விளையாட்டு, இசை, Lifestyle மற்றும் அறிவுசார் விடயங்கள் என உள்நாட்டு மற்றும் சர்வதேச உள்ளடக்கங்களை (Content) Dialog Play உள்ளடக்கியுள்ளது. ஒவ்வொரு தனிநபர் மற்றும் குடும்பங்களின் ரசனைக்கு ஏற்ப, நேரலை விளையாட்டுப் போட்டிகள் முதல் கற்றல் சார்ந்த விடயங்கள் வரை அனைத்தும் எல்லைகளின்றி இதில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

Dialog Play அனுபவமானது Satellite, Hub, Mini மற்றும் Smart TV App போன்ற தொலைக்காட்சி சாதனங்கள் ஊடாகவும், பயணங்களின் போது Dialog Play mobile app ஊடாகவும் தடையின்றி வழங்கப்படுகிறது. ஏற்கனவே Dialog Television மற்றும் Dialog ViU சேவைகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், எவ்வித இடையூறுமின்றி அதே சேவைகளை புதிய Dialog Play அடையாளத்தின் கீழ் தொடர்ந்து அனுபவிக்க முடியும்.

இந்த அறிமுகம் குறித்து டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் பணிப்பாளரும் குழும முதன்மை நிறைவேற்று அதிகாரியுமான சுபுன் வீரசிங்க குறிப்பிடுகையில், 'எமது பொழுதுபோக்குச் சேவைகளின் ஒரு Strategic Evolution-ஆக (மூலோபாய வளர்ச்சி) Dialog Play அமைகிறது. மக்களின் ரசனைகளும், திரைகளைப் பயன்படுத்தும் முறைகளும் (Viewing habits) தொடர்ந்து மாறிவரும் நிலையில், வாடிக்கையாளர்களுக்கு மிக எளிமையாகவும் சிரமமின்றியும் கிடைக்கக்கூடிய ஓர் ஒருங்கிணைந்த தளம் அவசியமாகிறது. Dialog Play மூலம் எமது சேவைகளை எளிதாக்குவதுடன், வாடிக்கையாளர்கள் எங்கு இருந்தாலும் ஒரு செழுமையான பொழுதுபோக்கு அனுபவத்தைப் பெறுவதை நாங்கள் உறுதி செய்கிறோம்,' என்றார்.

இந்த பிராண்ட் மாற்றம் குறித்து டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும சந்தைப்படுத்தல் அதிகாரி லசந்த தெவரப்பெரும கருத்துத் தெரிவிக்கையில், 'Dialog Play என்பது வெறும் பெயர் மாற்றம் மட்டுமல்ல; எமது வாடிக்கையாளர்கள் பொழுதுபோக்குத் துறையை ஒரு புதிய பரிமாணத்தில் அணுகுவதற்கான எமது தொலைநோக்குப் பார்வையாகும். ‘Entertainment, Unlocked’ என்ற எமது தாரக மந்திரம், வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்தமான உள்ளடக்கங்களை, தங்களுக்கு ஏற்ற சூழலில், எவ்விதத் தடைகளுமின்றி ரசிப்பதற்கான சுதந்திரத்தை வழங்குகிறது. இது எதிர்காலத் தேவைகளை முன்னறிந்து செயல்படும் எமது அர்ப்பணிப்பையே பறைசாற்றுகிறது,' என்றார்.

மாறிவரும் நுகர்வோர் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப, டிஜிட்டல் பொழுதுபோக்குத் துறையில் தனது மேலாதிக்கத்தை Dialog Play ஊடாக டயலொக் மீண்டும் நிலைநிறுத்துகிறது. வாடிக்கையாளர்களின் விருப்பத் தெரிவு, நெகிழ்வுத்தன்மை மற்றும் தடையற்ற இணைப்பு (Seamless Connectivity) ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்டு, டயலொக்கின் பொழுதுபோக்கு வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக இந்த அறிமுகம் அமைகிறது.