வாடிக்கையாளர் அனுபவ அளவீட்டில் உலகின் சிறந்த நிறுவனமாக டயலொக் அங்கீகாரம்: 2025 வாடிக்கையாளர் மையத்தன்மை உலகத் தொடர் விருதுகள்
மேலும் மூன்று ஆசிய-பசிபிக் பிராந்திய விருதுகளைப் பெற்றது
2025 அக்டோபர் 16 கொழும்பு

இலங்கையின் முதன்மை இணைப்பு வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, துபாயில் நடந்த 2025 வாடிக்கையாளர் மையத்தன்மை உலகத் தொடர் விருதுகளில் (CCWS) நான்கு மிக உயர்ந்த விருதுகளை வென்று, உலக அரங்கில் கௌரவத்தைப் பெற்றுள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர் அனுபவத்தில் தனது அசைக்க முடியாத தலைமைத்துவத்தையும், ஒவ்வொரு வாடிக்கையாளர் தொடர்பிலும் உயர்ந்த தரத்தை வழங்குவதற்கான ஆழமான உறுதிப்பாட்டையும் டயலொக் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
ARCET குளோபல் நிறுவனத்தால் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த உலகளாவிய விழா, வாடிக்கையாளர் மற்றும் ஊழியர் அனுபவத்தில் புதிய தர நிர்ணயங்களை அமைக்கும் முன்னணி நிறுவனங்களைக் கொண்டாடுகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில், டயலொக் நான்கு முக்கிய விருதுகளை வென்றது: வாடிக்கையாளர் அனுபவ அளவீட்டில் உலகின் சிறந்தது (உலகத் தொடர் மற்றும் ஆசிய-பசிபிக் பிராந்திய வெற்றியாளர்), சிறந்த வாடிக்கையாளர் அனுபவ உத்தி (ஆசிய-பசிபிக் பிராந்திய வெற்றியாளர்), மற்றும் வாடிக்கையாளர் நுண்ணறிவு & பின்னூட்டம் – VoC (ஆசிய-பசிபிக் பிராந்திய வெற்றியாளர்). இந்த விருதுகள், வாடிக்கையாளர் நுண்ணறிவு, சேவைப் புதுமை மற்றும் ஒவ்வொரு தொடர்பிலும் மதிப்பை உருவாக்குவதில் டயலொக் கொண்டுள்ள ஆழ்ந்த ஈடுபாட்டை உறுதிப்படுத்துகின்றன.
"வாடிக்கையாளர் அனுபவத்தில் உலகளவில் தலைசிறந்த நிறுவனங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டதில் நாங்கள் உண்மையிலேயே பெருமிதம் கொள்கிறோம்.இந்த விருதுகள், நாங்கள் முன்னெடுக்கும் ஒவ்வொன்றிலும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டு அயராது உழைக்கும் எங்கள் பணியாளர்கள் மற்றும் பங்காளிகளின் அசைக்க முடியாத ஈடுபாட்டுக்குக் கிடைத்த மிகப் பெரிய மரியாதை ஆகும். டயலொக் நிறுவனத்தைப் பொறுத்தவரை, வாடிக்கையாளர் மையத்தன்மை என்பது வெறும் செயல்பாட்டு விதி அல்ல – அது எங்கள் நிறுவனத்தின் கலாச்சாரம் மற்றும் அடிப்படை நோக்கம். இந்த உலகளாவிய அங்கீகாரம், இலங்கையர்களின் வாழ்க்கையை வளப்படுத்தவும், அவர்களுக்கு அதிகாரமளிக்கவும், தினந்தோறும் சிறப்பான அனுபவங்களை உருவாக்கவும் நாங்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது," என்று டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும தலைமை வாடிக்கையாளர் அதிகாரி சாண்ட்ரா டி சொய்சா தெரிவித்தார்.
2025 வாடிக்கையாளர் மையத்தன்மை உலகத் தொடர் விருதுகளில் டயலொக் பெற்றுள்ள இந்த அங்கீகாரம், உள்ளூர் மற்றும் பிராந்திய அளவில் வாடிக்கையாளர் அனுபவத் தரங்களை உயர்த்துவதில் அதன் தொடர்ச்சியான தலைமைத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதுடன், இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட வர்த்தகநாமமாக அதன் பங்களிப்பை மேலும் வலுப்படுத்துகிறது.
வாடிக்கையாளர் மையத்தன்மை உலகத் தொடர் விருதுகள் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, https://customercentricityworldseries.com/winners/ ஐப் பார்வையிடவும்.