LMD இன் 2025 விருதுகள்: மூன்று விருதுகளை அள்ளிச் சென்ற டயலொக்
2025 செப்டம்பர் 11 கொழும்பு

முதன்மை புகைப்பட விளக்கம்: (இடமிருந்து வலமாக): சுபுன் வீரசிங்க, பணிப்பாளர் / குழும பிரதம நிறைவேற்று அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; சான்ட்ரா டி சொய்சா, குழும பிரதம வாடிக்கையாளர் அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; லசந்த தெவரப்பெரும, குழும பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி.
இலங்கையின் முதன்மையான இணைப்புச் சேவை வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி , LMD இன் 2025 ஆம் ஆண்டுக்கான விருதுகள் விழாவில் மூன்று மதிப்புமிக்க விருதுகளைப் பெற்று கௌரவிக்கப்பட்டுள்ளது. டயலொக் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த சேவை அனுபவங்களை வழங்குவதில் கொண்டுள்ள அர்ப்பணிப்பு, சந்தையில் அதன் தலைமைத்துவம், வர்த்தக சிறப்பு, மற்றும் இலங்கை நுகர்வோர் மற்றும் வர்த்தக சமூகத்துடன் பேணிவரும் அர்த்தமுள்ள உறவுகள் ஆகியவற்றுக்கான அங்கீகாரமாகவே இந்த விருதுகள் அமைந்துள்ளன
டயலொக், 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கையின் No.1 சேவை வர்த்தகமாகவும் (No. 1 Service Brand), 2025 ஆம் ஆண்டுக்கான முன்னணி பெருநிறுவன வர்த்தகங்களில் ஒன்றாகவும் (Corporate Brands) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது, இலங்கையின் மிகவும் விரும்பப்படும் மற்றும் மதிக்கப்படும் சேவை வழங்குநராக டயலொக் திகழ்வதை மேலும் உறுதிப்படுத்துகிறது.
இந்தக் அங்கீகாரங்கள், LMD-இன் உள்நாட்டு ஆய்வுகள் மற்றும் முன்னணி ஆய்வு நிறுவனமான PepperCube Consultants உடனான ஒத்துழைப்பு மூலம் தொகுக்கப்பட்ட அதன் வருடாந்தர வெளியீடுகளான Brands Annual, Most Respected, Most Awarded மற்றும் LMD 100 ஆகியவற்றில் இடம்பெற்ற தரவரிசைகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன. இலங்கையின் Fortune 500 எனப் பெரும்பாலும் குறிப்பிடப்படும் LMD 100, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான இந்த விருதுகளுடன், நாட்டின் மிகச் சிறந்த செயல்திறன் கொண்ட மற்றும் மிகவும் நம்பகமான நிறுவனங்களை மதிப்பிடுகிறது. டயலொக் நிறுவனம் தொடர்ச்சியாகப் பெறும் இந்த அங்கீகாரம், நுகர்வோர் நம்பிக்கையை மட்டுமல்லாமல், தொலைத்தொடர்பு மற்றும் பரந்த பெருநிறுவனத் துறைகளில் அதன் நீடித்த வர்த்தக மதிப்பு, புத்தாக்கம் மற்றும் தலைமைத்துவத்தையும் பிரதிபலிக்கிறது.
"LMD ஆல் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளாக இலங்கையின் No. 1 சேவை வர்த்தகமாகவும், 2025 ஆம் ஆண்டுக்கான நாட்டின் முன்னணி பெருநிறுவன வர்த்தகங்களில் ஒன்றாகவும் அங்கீகரிக்கப்படுவது, வாடிக்கையாளர் அனுபவம், புத்தாக்கம் மற்றும் தேசிய முன்னேற்றம் ஆகியவற்றில் எமது அயராத அர்ப்பணிப்புக்குக் கிடைத்த சான்றாகும். டயலொக் நிறுவனத்தில், உலகத் தரம் வாய்ந்த இணைப்பு மற்றும் புரட்சிகரமான டிஜிட்டல் தீர்வுகளின் மூலம் இலங்கை மக்களின் வாழ்க்கையையும், வர்த்தகங்களையும் வளப்படுத்தவும், வலுவூட்டவும் நாங்கள் தொடர்ந்து கடமைப்பட்டுள்ளோம். எம்மீது நம்பிக்கை வைத்து, எம்மைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் எமது வாடிக்கையாளர்கள், பங்காளர்கள், ஊழியர்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்," என டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இன் பணிப்பாளர் / குழும பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்க அவர்கள் கருத்துத் தெரிவித்தார்.
டயலொக் நிறுவனம் பிராண்ட் மற்றும் பெருநிறுவனத் தரவரிசைகளில் தொடர்ந்து சிறந்து விளங்குவது, இலங்கையின் டிஜிட்டல் எதிர்காலத்தை உருவாக்குவதில் அதன் நீடித்த பங்கையும், தினமும் டயலொக் மீது நம்பிக்கை வைத்துள்ள மில்லியன் கணக்கான இலங்கையர்களுடனான அதன் ஆழமான உறவையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.