பொருள் விரிவாக்கம்

50,000+ மணிநேர Premium சர்வதேச பொழுதுபோக்கை இலங்கைக்கு வழங்க Sony LIV உடன் கைகோர்க்கிறது Dialog Television

2025 அக்டோபர் 17        அக்டோபர்

 

Dialog Television Partners with Sony LIV to Deliver 50,000+ Hours of Premium Global Entertainment to Sri Lanka

இலங்கையின் முதன்மை Pay-TV வழங்குநரான Dialog Television, உலகப் புகழ்பெற்ற Sony LIV streaming தளத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் 50,000 மணிநேரத்திற்கும் மேலான premium உள்ளடக்கங்களைக் கொண்ட, பிராந்தியத்தின் மிகப் பெரிய streaming தளங்களில் ஒன்றின் சேவையைப் பெற முடியும். இந்த மைல்கல், உலகத் தரமான பொழுதுபோக்கை அதிக மலிவு விலையிலும், எளிதில் அணுகக்கூடியதாகவும் மாற்றுவதன் மூலம், Dialog ViU+-ஆல் இயக்கப்பட்ட சாதனங்களில் (ViU Hub, ViU Mini மற்றும் ViU+App) தடையற்ற ஒருங்கிணைப்புடன் டிஜிட்டல் வாழ்க்கை முறைகளை மேம்படுத்துவதற்கான Dialog நிறுவனத்தின் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது.

Sony LIV மாதத்திற்கு ரூ. 499 வரிகள் உட்பட என்ற குறைந்த விலையில் கிடைக்கிறது. இதன் மூலம், ஹாலிவுட் பிளாக்பஸ்டர்கள், Sony LIV originals, உலக திரைப்படங்கள், பிரபல தொலைக்காட்சித் தொடர்கள், கிரிக்கெட் மற்றும் UEFA கால்பந்து போன்ற முக்கிய நேரலை விளையாட்டு நிகழ்வுகள் என 50,000 மணிநேரத்திற்கும் அதிகமான premium உள்ளடக்கத்தை வாடிக்கையாளர்கள் கண்டுகளிக்கலாம். மேலும், Dialog Television Gold சந்தாதாரர்களுக்கு இந்த சேவை இலவசமாக வழங்கப்படும். டயலொக் ViU-வை ஆதரிக்கும் தொலைக்காட்சிகள், set-top box -கள், ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், அல்லது Sony LIV App வழியாக நீங்கள் எந்தத் திரையில் விரும்பினாலும் தடையற்ற streaming அனுபவத்தைப் பெறலாம். அமெரிக்க டாலர்களில் கட்டணம் வசூலிக்கும் தளங்களைப் போலன்றி, இந்தச் சேவை உள்ளூர் நாணயத்தில் கிடைப்பதால், வாடிக்கையாளர்கள் நாணய மதிப்பு மாற்றங்களால் ஏற்படும் அபாயங்கள் பற்றிய கவலைப்படத் தேவையில்லை. மேலும், இது உள்ளூர் சந்தையில் உள்ள பாரம்பரிய TVOD சேவைகளை விடவும் மிகவும் எளிதாகவும், குறைந்த செலவிலும் கிடைக்கிறது.

இதை வெறும் ஒரு streaming சேவையாக மட்டும் பார்க்க முடியாது. டயலொக், இலங்கையின் பொழுதுபோக்குக்கான ஒரு 'பல்சேவை ஒருங்கிணைப்புத் தளம்' ஆகத் திகழ்கிறது. அதாவது, ViU+, Sony LIV, Lionsgate Play போன்ற முன்னணி உலகளாவிய மற்றும் பிராந்திய உள்ளடக்க வழங்குநர்களை ஒரே ஒருங்கிணைந்த தளத்தினுள் இது ஒன்றிணைக்கிறது. டிஜிட்டல் பொழுதுபோக்கில் ஒரு புதிய தரத்தை உருவாக்கும் நோக்குடன், அபிவிருத்தியடைந்த நாடுகளில் கிடைப்பதைப் போலவே, on-demand உள்ளடக்கத்தின் வகை, மலிவு மற்றும் வசதியை டயலொக் வழங்குகிறது. அதே சமயம், உள்ளூர் மக்களின் ரசனை விருப்பங்களுக்கும் இது முக்கியத்துவம் அளிக்கிறது. தொடர்ச்சியாக விரிவடையும் உள்ளடக்கத் தொகுப்பு மற்றும் சாதனங்கள் முழுவதும் தடையற்ற அணுகல் இருப்பதால், அனைத்து இலங்கையர்களும் நிகரற்ற நெகிழ்வுத்தன்மை, தேர்வு மற்றும் மதிப்புடன் உலகத் தரம் வாய்ந்த உள்ளடக்கத்தை அனுபவிப்பதை டயலொக் உறுதி செய்கிறது.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை இயக்க அதிகாரி லிம் லி சான், "உலகத் தரம் வாய்ந்த பொழுதுபோக்கை இலங்கையர்களுக்கு மேலும் நெருக்கமாக்குவதில் Sony LIV-உடனான எங்கள் கூட்டு ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது. உயர்தரமான, மலிவான மற்றும் அனைவருக்கும் பொருந்தக்கூடிய டிஜிட்டல் சேவைகளை வழங்குவதில் நாங்கள் கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த முயற்சி எடுத்துக்காட்டுகிறது. Dialog ViU+ உடனான தடையற்ற ஒருங்கிணைப்பு மற்றும் நிகரற்ற மதிப்பு ஆகியவற்றை வழங்குவதன் மூலம் எமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த உலகளாவிய உள்ளடக்கத்தை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் அனுபவிப்பதற்கான முழு சுதந்திரத்தையும் நாங்கள் அளிக்கிறோம்," என்று தெரிவித்தார்.

Sony LIV-இன் வளர்ச்சி மற்றும் வருவாய் ஈட்டல் பிரிவுத் தலைவர் மனிஷ் அகர்வால், “டயலொக்குடனான எங்கள் ஒத்துழைப்பு, இலங்கையில் Sony LIV-இன் பயணத்தில் ஒரு முக்கியமான தொடக்கத்தைக் குறிக்கிறது. டயலொக்கின் வலுவான விநியோகக் கட்டமைப்பை, எங்கள் செழுமையான மற்றும் பல்வேறு வகையான உள்ளடக்கங்களுடன் இணைப்பதன் மூலம், இலங்கைப் பார்வையாளர்களுக்கு எளிதாகவும், மலிவாகவும் உலகத் தரம் வாய்ந்த பொழுதுபோக்கு மற்றும் ஈடு இணையற்ற மதிப்பையும் வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்,” என்று தெரிவித்தார்.