147-ஆவது Battle of the Blues: டயலொக் ஆசிஆட்டாவின் 21 வருட கால இடைவிடாத அர்ப்பணிப்புடன் புதிய அத்தியாயம் ஆரம்பம்
2026 பிப்ரவரி 20 கொழும்பு
அடுத்ததாக நடைபெறவுள்ள றோயல்-தோமியர் (Royal-Thomian) கிரிக்கெட் போட்டிக்காக, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி உடனான 21-ஆவது ஆண்டு காலப் பங்களிப்பை உறுதிப்படுத்தும் வகையில், பிரதான அனுசரணைக்கான காசோலை வழங்கி வைக்கப்பட்டது. டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் Dialog Enterprise குழும தலைமை அதிகாரி திரு. நவின் பீரிஸ் மற்றும் குழும சந்தைப்படுத்தல் பிரிவின் துணைத் தலைவர் திரு. ஹர்ஷ சமரநாயக்க ஆகியோரால் இந்தக் காசோலை வழங்கப்பட்டது. இதனை புனித தோமியர் கல்லூரியின் வார்டன் (Warden) திரு. அசங்க பெரேரா மற்றும் றோயல் கல்லூரியின் அதிபர் திரு. அதுல விஜேவர்தன ஆகியோர் உத்தியோகபூர்வமாகப் பெற்றுக்கொண்டனர்.
புகைப்படத்தில் (இடமிருந்து வலம்): கியரன் லாரன்ஸ் (தலைமை மாணவர், புனித தோமியர் கல்லூரி), அவிநாஷ் பெர்னாண்டோ (தலைவர், புனித தோமியர் கல்லூரி), திரு. சஜித் குலரத்ன (இணைத் தலைவர், றோயல்-தோமியர் போட்டி ஏற்பாட்டுக் குழு), திரு. ஹர்ஷ சமரநாயக்க (துணைத் தலைவர் - குழும சந்தைப்படுத்தல், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி), திரு. அசங்க பெரேரா (வார்டன், புனித தோமியர் கல்லூரி), திரு. அதுல விஜேவர்தன (அதிபர், றோயல் கல்லூரி), திரு. நவின் பீரிஸ் (குழும தலைமை அதிகாரி - டயலொக் என்டர்பிரைஸ், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி), திரு. ரமேஷ் அபேவிக்ரம (இணைத் தலைவர், றோயல்-தோமியர் கூட்டுப் போட்டி ஏற்பாட்டுக் குழு - RC), ரேஹான் பீரிஸ் (தலைவர், றோயல் கல்லூரி) மற்றும் சஹான் அகலவத்த (தலைமை மாணவர், றோயல் கல்லூரி).
புகைப்படத்தில் (இடமிருந்து வலம்): கியரன் லாரன்ஸ் (தலைமை மாணவர், புனித தோமியர் கல்லூரி), அவிநாஷ் பெர்னாண்டோ (தலைவர், புனித தோமியர் கல்லூரி), திரு. சஜித் குலரத்ன (இணைத் தலைவர், றோயல்-தோமியர் போட்டி ஏற்பாட்டுக் குழு), திரு. ஹர்ஷ சமரநாயக்க (துணைத் தலைவர் - குழும சந்தைப்படுத்தல், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி), திரு. அசங்க பெரேரா (வார்டன், புனித தோமியர் கல்லூரி), திரு. அதுல விஜேவர்தன (அதிபர், றோயல் கல்லூரி), திரு. நவின் பீரிஸ் (குழும தலைமை அதிகாரி - டயலொக் என்டர்பிரைஸ், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி), திரு. ரமேஷ் அபேவிக்ரம (இணைத் தலைவர், றோயல்-தோமியர் கூட்டுப் போட்டி ஏற்பாட்டுக் குழு - RC), ரேஹான் பீரிஸ் (தலைவர், றோயல் கல்லூரி) மற்றும் சஹான் அகலவத்த (தலைமை மாணவர், றோயல் கல்லூரி).
தற்போதைய மற்றும் பழைய Royalists மற்றும் Thomians, தங்களது அடையாளமான Blue, Gold and Black நிற உடைகளை அணிந்து, தங்களது பாடசாலைகளின் பெருமைமிகு பாரம்பரியத்தைக் கொண்டாட மீண்டும் ஒன்றுகூடவுள்ளனர். உலகம் முழுவதிலுமிருந்து வரும் கிரிக்கெட் ஆர்வலர்கள் மற்றும் பழைய மாணவர்களின் ஆரவாரம் மற்றும் பாரம்பரிய பாடல்களின் எதிரொலியுடன் SSC மைதானம் களைகட்டப்போகிறது.
இலங்கையின் சொந்த “Big Match” என்று கருதப்படும் இந்த கௌரவமான சந்திப்பு, பல இளம் திறமையாளர்களை தேசிய மற்றும் சர்வதேச நிலைக்கு உயர்த்தும் ஒரு தளமாக இருந்து வருகிறது. Dialog Big Match Season-இன் ஒரு அங்கமாக, இந்த வரலாற்றுச் சமர் தலைமுறைகளை ஒன்றிணைத்து நாட்டின் மிகவும் போற்றப்படும் விளையாட்டுப் பாரம்பரியத்தை பறைசாற்றுகிறது.
இலங்கையின் முதன்மை இணைப்பு வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி , இலங்கையின் பாடசாலை கிரிக்கெட் விளையாட்டுக்குத் தனது அசைக்க முடியாத ஆதரவை வழங்கி வருகிறது. இளம் திறமைகளை வலுப்படுத்துவதிலும் (Powering young talent), அடுத்த தலைமுறை கிரிக்கெட் நட்சத்திரங்களை உருவாக்குவதிலும் கொண்டுள்ள அர்ப்பணிப்புடன், Battle of the Blues பாரம்பரியத்தை முன்னெப்போதையும் விட வலிமையாக்குவதை டயலொக் உறுதி செய்கிறது. இவர்களின் ஆதரவு என்பது வெறும் அனுசரணை மட்டுமல்ல, அது இலங்கையின் விளையாட்டு எதிர்காலத்திற்கான ஒரு முதலீடாகும்.
பாடசாலைகளின் இயக்கம் நின்று, அனைவரது கண்களும் மைதானத்தின் மையத்தை நோக்கி ஆவலுடனும் பதற்றத்துடனும் நோக்கியிருக்கும் காலம் இது; 11 வீரர்கள் அந்த மதிப்புமிக்க Senanayake Trophy-க்காக விளையாடுவார்கள். 147-ஆவது அத்தியாயமாக அரங்கேறும் இந்த உடைக்கப்படாத பாரம்பரியத்தில் பங்கேற்கும் இரு அணிகளுக்கும் எங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தச் சந்திப்பு புனித தோமியர் கல்லூரி மற்றும் றோயல் கல்லூரியை இணைக்கும் என்றும் நிலைத்திருக்கும் ஒரு பாரம்பரியமாக அமையட்டும். இம்முறை எம்முடன் இணைந்த அனைத்து அனுசரணையாளர்களுக்கும் கல்லூரி மற்றும் கூட்டு ஏற்பாட்டுக் குழுவின் சார்பாக எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என புனித தோமியர் கல்லூரியின் வார்டன் (Warden) திரு. அசங்க பெரேரா தெரிவித்தார்.
இணைத் தலைவர் திரு. ரமேஷ் அபேவிக்ரம கூறுகையில்: “மற்றுமொரு Roy–Tho போட்டியை காணத் தயாராகும் இவ்வேளையில், சவால்கள் மற்றும் மாற்றங்களுக்கு மத்தியிலும் 147 ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் இந்தச் சாதனையை நாங்கள் கொண்டாடுகிறோம். சமீபத்திய ஆண்டுகளில், டிஜிட்டல் மயமாக்கல், நிலைத்தன்மை மற்றும் CSR போன்ற அம்சங்களை உள்வாங்கி இந்தப் போட்டி பரிணாமம் அடைந்துள்ளது. இதில் டயலொக் நிறுவனம் 21 தடவைகள் பிரதான அனுசரணையாளராகப் பெருமையுடன் பணியாற்றியுள்ளது. இது ஒரு போட்டியை விட மேலானது—இது ஆளுமைகளை வடிவமைக்கும் ஒரு பாரம்பரியம்,” என்றார்.
கொழும்பு றோயல் கல்லூரியின் அதிபர் திரு. அதுல விஜேவர்தன குறிப்பிடுகையில்: “வருடத்தின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வின் வாசலில் நாம் நிற்கிறோம். 22 சிறுவர்கள் மற்றும் எண்ணற்ற பங்குதாரர்களால் 146 ஆண்டுகளாகத் தடையின்றி முன்னெடுத்துச் செல்லப்படும் இந்த உலகப் பாரம்பரியத்தைப் பற்றி நாம் பெருமை கொள்கிறோம். இரு அணிகளுக்கும் எமது வாழ்த்துகள்,” என்றார்.
இந்த நிகழ்வு குறித்து Dialog Enterprise குழும தலைமை அதிகாரி நவின் பீரிஸ் கூறுகையில்: “பாடசாலை கிரிக்கெட் நாட்காட்டியில் மிக முக்கியமான நிகழ்வான Battle of the Blues உடன் எங்களது நீண்டகாலப் பங்களிப்பைத் தொடர்வதில் டயலொக் மிகவும் பெருமிதம் கொள்கிறது. இளம் வீரர்களை ஊக்குவிப்பதன் மூலம் கிரிக்கெட் மீதான ஆர்வத்தை வளர்ப்பதே எமது நோக்கம். நாளைய வெற்றியாளர்களை உருவாக்குவதில் நாங்கள் என்றும் உறுதியாக இருக்கிறோம்,” என்றார்.
மார்ச் 2025-இல் நடைபெற்ற 146-ஆவது மோதலைத் தொடர்ந்து, றோயல் கல்லூரி 36 வெற்றிகளையும், புனித தோமியர் கல்லூரி 36 வெற்றிகளையும் பெற்றுள்ளதுடன், 74 போட்டிகள் சமநிலையில் (Draw) முடிந்துள்ளன. கடந்த முறை 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற புனித தோமியர் கல்லூரியை இம்முறை அவிநாஷ் பெர்னாண்டோ வழிநடத்துகிறார். றோயல் கல்லூரி ரேஹான் பீரிஸ் தலைமையில் மீண்டுமொரு வெற்றியைப் பதிவு செய்யக் காத்திருக்கிறது.
147-ஆவது Battle of the Blues மற்றும் 49-ஆவது Mustangs Trophy போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை றோயல் கல்லூரி யூனியன் (RCU) மற்றும் STCML OBA செயலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியை இலங்கையின் முதன்மை 5G Network ஊடாக நேரலையில் ரசிக்குமாறு டயலொக் ஆசிஆட்டா பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கிறது. இப்போட்டிகளை ThePapare TV (Dialog Television அலைவரிசை 126), Dialog Play Mobile App மற்றும் ThePapare.com ஊடாக நேரலையில் காணலாம்.
டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி கிரிக்கெட், கரப்பந்து, வலைப்பந்து மற்றும் Esports ஆகியவற்றின் தேசிய அணிகளுக்குப் பெருமையுடன் ஆதரவளித்து வருகிறது. அத்துடன், இலங்கை Golf Open, பாராலிம்பிக் போட்டிகள் (Paralympic sports), பிரசிடென்ட் கோல்ட் கப் கரப்பந்து மற்றும் பாடசாலை ரக்பி போன்ற விளையாட்டுக்களையும் வலுப்படுத்தி வருகின்றது.