Body

147-வது Battle of the Blues தொடருடன் இணைந்து ‘Play for a Cause’ திட்டத்தை டயலொக் ஆசிஆட்டா தொடர்கிறது

2026 மார்ச் 10         கொழும்பு

 

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும சந்தைப்படுத்தல் பிரிவின் துணைத் தலைவர் திரு. ஹர்ஷ சமரநாயக்க, ரோயல்-தோமியன் உறுதிமொழிக்கான (Royal–Thomian Pledge) அனுசரணை காசோலையை கல்கிசை புனித தோமஸ் கல்லூரியின் பாடசாலைக் காப்பாளர் (Warden) திரு. அசங்க பெரேரா மற்றும் கொழும்பு ரோயல் கல்லூரியின் அதிபர் திரு. அதுல விஜேவர்தன ஆகியோரிடம் கையளித்தார். இந்நிகழ்வில் திரு. சஜித் குலரத்ன (STC) மற்றும் திரு. ரமேஷ் அபேவிக்ரம (RC) தலைமையிலான இணை ஏற்பாட்டுக்குழு உறுப்பினர்களுடன், கிரிக்கெட் உபகரணங்களைப் பெற்றுக்கொள்ளும் பயனாளி பாடசாலைகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

நாளைய வெற்றியாளர்களுக்கு வலுவூட்டும் தனது இலக்கிற்கு இணங்க, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனம் 2026 ஆம் ஆண்டில் தனது ‘Play for a Cause’ செயற்திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி, மேலதிகமாக நான்கு பாடசாலைகளுக்கு ஆதரவளிக்கவுள்ளது. 147-வது Battle of the Blues கிரிக்கெட் தொடருடன் இணைந்து முன்னெடுக்கப்படும் இந்த நிலைபேறான திட்டமானது, இலங்கையெங்கும் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிகளுக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் வளங்களை வழங்கி, அடிமட்ட பாடசாலை கிரிக்கெட்டை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

2026 ஆம் ஆண்டிற்கான பயனாளிகளாக நாவுல ஸ்ரீ நாக தேசிய பாடசாலை, மாத்தளை நாலந்த மகா வித்தியாலயம், அக்குரம்பொடை வீர கெப்பெட்டிபொல மத்திய கல்லூரி மற்றும் தியபெதும ஐரஹத கெட்டுவெவ மகா வித்தியாலயம் ஆகிய நான்கு பாடசாலைகளை ரோயல்-தோமியன் கிரிக்கெட் இணை ஏற்பாட்டுக் குழு தேர்ந்தெடுத்துள்ளது. இதன் மூலம் இந்த பாடசாலைகளின் இளம் வீரர்கள் சிறந்த வசதிகளுடனும் நம்பிக்கையுடனும் பயிற்சி பெறத் தேவையான கிரிக்கெட் உபகரணங்களைப் பெற்றுக்கொள்வர்.

இந்த ‘Play for a Cause’ திட்டத்திற்கான நிதி திரட்டும் முறைமையானது வீரர்களின் திறமையுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி, வருடாந்த ரோயல்-தோமியன் போட்டியில் பெறப்படும் ஒவ்வொரு ஓட்டத்திற்கும் (Run) 1,000 ரூபாவையும், வீழ்த்தப்படும் ஒவ்வொரு விக்கெட்டிற்கும் (Wicket) 10,000 ரூபாவையும் வழங்க டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி உறுதியளித்துள்ளது. இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுவரை நாடு முழுவதும் 52-க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு மில்லியன் கணக்கான ரூபா பெறுமதியான கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இது குறித்து டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும தலைமை நிறுவன அதிகாரி அசங்க பிரியதர்ஷன கூறுகையில், "விளையாட்டானது இலங்கையின் இளம் திறமையாளர்களுக்குப் புதிய பாதைகளைத் திறந்துவிடும் என டயலொக் நம்புகிறது. பாரம்பரியமான ரோயல்-தோமியன் தொடரை ஒரு சமூக நோக்கத்துடன் இணைப்பதன் மூலம், ஒவ்வொரு ஓட்டமும் விக்கெட்டும் வளர்ந்து வரும் பாடசாலைகளுக்குத் தேவையான கிரிக்கெட் உபகரணங்களை வழங்க உதவுகிறது. 2026 இல் மேலும் நான்கு பாடசாலைகளுக்கு இந்த ஆதரவை வழங்குவதன் மூலம், அடிமட்ட கிரிக்கெட்டை வலுப்படுத்தவும் நாளைய வெற்றியாளர்களை உருவாக்கவும் நாம் கடமைப்பட்டுள்ளோம்," என்றார்.

பாடசாலை கிரிக்கெட் வரலாற்றில் நீண்ட பாரம்பரியம் கொண்ட Battle of the Blues தொடரானது தற்போது 147-வது ஆண்டாகத் தொடர்ந்து நடைபெறுகிறது. உலகில் தடையின்றி நடத்தப்படும் இரண்டாவது மிக நீண்ட கிரிக்கெட் தொடராக இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

கல்கிசை புனித தோமஸ் கல்லூரி மற்றும் கொழும்பு ரோயல் கல்லூரி ஆகிய அணிகள் மோதும் 147-வது Battle of the Blues போட்டி, எதிர்வரும் மார்ச் 12, 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் SSC மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து 49-வது Mustangs Trophy போட்டி மார்ச் 28 ஆம் திகதி அதே மைதானத்தில் இடம்பெறும்.

இந்த விறுவிறுப்பான போட்டிகளை இலங்கையின் முதற்தர 5G வலையமைப்பின் ஊடாக நேரலையில் கண்டு மகிழுமாறு டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கின்றது. ரசிகர்கள் இந்தப் போட்டிகளை ThePapare TV (அலைவரிசை 126), Dialog Play Mobile App மற்றும் ThePapare.com ஊடாக நேரடியாகப் பார்க்கலாம்.

டயலொக் ஆசிஆட்டா தேசிய கிரிக்கெட், கைப்பந்து, வலைப்பந்து மற்றும் Esports அணிகளின் பெருமைமிகு அனுசரணையாளராகும். டயலொக் Srilanka Golf open மற்றும் தேசிய பாரா விளையாட்டுக்கள் மற்றும் உலக பாராலிம்பிக் விளையாட்டுக்களுக்கான இலங்கை அணியின் முக்கிய அனுசரணையாளராகவும் உள்ளது. மேலும் நாளைய சாம்பியன்களை ஊக்குவிக்கும் தனது உறுதிப்பாட்டிற்கு ஏற்ப, ஜனாதிபதி தங்கக் கிண்ண கைப்பந்து, தேசிய இளையோர் மற்றும் மூத்தோர் வலைப்பந்து போட்டிகள் மற்றும் பாடசாலை ரக்பி ஆகியவற்றையும் நிறுவனம் தொடர்ந்து ஆதரித்து வருகிறது.