Body

1.5 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களுடன் இலங்கையின் பாரிய 5G வலையமைப்பை அறிமுகப்படுத்துகிறது டயலொக்!

2025 டிசம்பர் 18         கொழும்பு

 

இடமிருந்து வலமாக: Dialog 5G Ultra மூலம் இயங்கும் NOVA எனும் Humanoid Robot; சுபுன் வீரசிங்க, பணிப்பாளர் / குழும தலைமை நிர்வாக அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி.

  • ஏற்கனவே 1.5 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் டயலொக் 5G உடன் இணைந்துள்ளனர்.
  • நாடு முழுவதும் 220 க்கும் மேற்பட்ட நேரடி 5G தளங்களுடன் (Sites), இலங்கையில் முதன்முதலாக வணிக ரீதியான 5G சேவையை அறிமுகப்படுத்திய பெருமை.
  • அதிவேக Gigabit வேகம் மற்றும் நிறுவனங்களுக்கான மேம்பட்ட தீர்வுகளை வழங்கக்கூடிய 27 GHz அலைக்கற்றையைத் தன்வசப்படுத்திய ஒரே நிறுவனம். அத்துடன் 3500 MHz அலைவரிசை ஊடாக நாடு தழுவிய 5G கவரேஜ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • அடுத்த இரண்டு ஆண்டுகளில் இலங்கை முழுவதும் 5G வலையமைப்பை விரிவுபடுத்துவதற்காக 100 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு.
  • 76 நாடுகளில் 155 சர்வதேசப் பங்காளர்களுடன் இணைந்து, சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு இலங்கையின் விரிவான 5G ரோமிங் வசதி வழங்கப்படுகிறது.

இலங்கையை மேம்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி தனது "Dialog 5G Ultra" சேவையை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இது நாட்டின் டிஜிட்டல் பரிணாம வளர்ச்சியிலும், 5G யுகத்திற்கான மாற்றத்திலும் ஒரு முக்கிய மைல்கல்லாகும். நாடு முழுவதும் 220-க்கும் அதிகமான நேரடி 5G தளங்களுடன், 1.5 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்குச் சேவையளிக்கும் இலங்கையின் பிரம்மாண்டமான 5G வலையமைப்பை டயலொக் தற்போது இயக்கி வருகின்றது. இலங்கையில் முதன்முதலாகப் பொதுமக்களுக்கான 5G சேவையை வழங்கிய முன்னோடி என்ற பெருமையுடன், அடுத்த தலைமுறைத் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் டயலொக் தனது தலைமைத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

Dialog 5G Ultra சேவையானது அதிவேகம், குறைந்த தாமதம் (low latency) மற்றும் மேம்பட்ட வலையமைப்புத் திறன் ஆகியவற்றை வழங்குகிறது. இது இலங்கையிலுள்ள நுகர்வோருக்குச் செழுமையான டிஜிட்டல் அனுபவங்களை வழங்குவதோடு, பெருநிறுவனங்கள் மற்றும் கைத்தொழில் துறைகளுக்கான மேம்பட்ட ஆற்றலையும் வழங்குகிறது. பரந்த அளவிலான மொபைல் கவரேஜிற்கான 3500 MHz அலைக்கற்றை மற்றும் அதிவேகத் தரவுப் பயன்பாட்டிற்கான 27 GHz அலைக்கற்றை ஆகிய இரண்டையும் பயன்படுத்துவதன் மூலம், எதிர்காலத் தேவைகளுக்கான நுகர்வோர் மற்றும் பெருநிறுவனப் பயன்பாடுகளை ஆதரிப்பதில் டயலொக் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது.

இந்த அறிமுகம் குறித்து டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும தலைமை நிர்வாக அதிகாரி சுபுன் வீரசிங்க கருத்துத் தெரிவிக்கையில், "இலங்கையின் எதிர்கால டிஜிட்டல் உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் 'Dialog 5G Ultra' அறிமுகமானது ஒரு தீர்க்கமான மைல்கல்லாகும்; 5G என்பது வெறும் அதிவேக இணைய இணைப்பு மட்டுமல்ல, அது டிஜிட்டல் பொருளாதாரத்தில் புத்தாக்கம், உற்பத்தித்திறன் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உருவாக்குவதற்கான ஒரு முக்கியமான உந்துசக்தியாகும். இலங்கையின் மிகப்பெரிய 5G வலையமைப்பு என்ற வகையில், நாடு முழுவதும் 5G இணைப்பை விரிவுபடுத்துவதற்காக அடுத்த இரண்டு ஆண்டுகளில் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம்; இதன் மூலம் தனிநபர்கள், வணிகங்கள் மற்றும் தொழில்துறையினர் ஒரு டிஜிட்டல் இலங்கையின் நன்மைகளில் முழுமையாகப் பங்கேற்பதை நாம் உறுதி செய்கிறோம். மேலும், 5G அலைக்கற்றையை ஒதுக்குவதற்காக மிகவும் வெளிப்படையான ஏல முறையை முன்னெடுத்த இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.

தெற்காசியாவிலேயே முதன்முதலாக 2G, 3G மற்றும் 4G தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியது முதல், ஆரம்பகால 5G செயல்விளக்கங்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தது மற்றும் பல ஆண்டுகளாக நாட்டின் மிகப்பெரிய 5G சோதனை வலையமைப்பை இயக்கியது வரை, டயலொக்கின் 5G பயணமானது புத்தாக்கத்தில் ஒரு வலுவான பாரம்பர்யத்தைக் (Legacy of Innovation) கொண்டுள்ளது. தற்போது 'Dialog 5G Ultra' அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகியுள்ள நிலையில், இந்த உயர் செயல்திறன் கொண்ட தொழில்நுட்பமானது அன்றாட வாழ்வியலோடும் வணிகச் செயல்பாடுகளோடும் ஒன்றிணைந்து புதிய மாற்றங்களை உருவாக்குகிறது.

Dialog’s 5G journey builds on a strong legacy of innovation — from being the first to introduce 2G,3G and 4G in South Asia, to pioneering early 5G demonstrations, and operating the country’s most extensive 5G trial network over several years. The commercial launch of Dialog 5G Ultra now brings these advancements into widespread use, embedding high-performance connectivity into everyday life and business.

இந்த அறிமுகத்தைக் கொண்டாடும் வகையில், ஸ்மார்ட்போன்கள், Data திட்டங்கள் மற்றும் உள்ளடக்கங்கள் (Content) எனப் பல்வேறு 5G சலுகைகளை டயலொக் அறிமுகப்படுத்தியுள்ளது. இது வாடிக்கையாளர்கள் மொபைல் மற்றும் பொழுதுபோக்குத் தேவைகளுக்காக 5G இன் முழுமையான ஆற்றலை அனுபவிக்க வழிவகுக்கும். மேலதிக தகவல்களுக்கு https://www.dialog.lk/ ஐப் பார்வையிடவும்.

மேலும், 76 நாடுகளில் 155 சர்வதேச மொபைல் நிறுவனங்களுடன் இணைந்து இலங்கையின் விரிவான 5G ரோமிங் வலையமைப்பையும் டயலொக் வழங்குகிறது. இதன் மூலம் 5G வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தும் டயலொக் வாடிக்கையாளர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் போதும் தடையற்ற அதிவேக இணையத்தைப் பெற முடியும். இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த மொபைல் அனுபவத்தை வழங்குவதில் டயலொக்கின் முன்னிலையை உறுதிப்படுத்துகிறது.

இலங்கைக்கு எதிர்காலத் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாகத் திகழும் டயலொக், நாட்டின் டிஜிட்டல் மாற்றத்தை மேம்படுத்துவதற்கும், தனிநபர்கள் மற்றும் வணிகங்களை வலுப்படுத்தும் உலகத்தரம் வாய்ந்த தொடர்பாடல் அனுபவங்களை வழங்குவதற்கும் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளது.

இடமிருந்து வலமாக: ரங்க காரியவசம், குழும தலைமை தொழில்நுட்ப அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; லிம் லி சான், குழும தலைமை செயல்பாட்டு அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; Dialog 5G Ultra மூலம் இயங்கும் NOVA எனும் Humanoid Robot; சுபுன் வீரசிங்க, பணிப்பாளர் / குழும தலைமை நிர்வாக அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; முனேஷ் டேவிட், குழும தலைமை வணிக அதிகாரி மற்றும் பதில் குழும தலைமை நிதி அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி.