Body

800-க்கும் மேற்பட்ட 5G நிலையங்களுடன் இலங்கையின் அதிவேக 5G விரிவாக்கத்தை முன்னெடுத்து, நாட்டின் டிஜிட்டல் எதிர்காலத்தை டயலொக் வலுப்படுத்துகிறது

2026 மார்ச் 23         கொழும்பு

 

இலங்கையின் #1 இணைப்புச் சேவை வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, 24 மாவட்டங்களில் உள்ள 800-க்கும் மேற்பட்ட நேரடி நிலையங்களுக்கு (Live Sites) தனது 5G வலையமைப்பை விரிவாக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களில் தொடர்ச்சியான முதலீடுகளை மேற்கொள்வதன் மூலம், தேசத்தின் டிஜிட்டல் மாற்றத்தை துரிதப்படுத்தும் தனது அர்ப்பணிப்பை இதன் மூலம் நிறுவனம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. ஏற்கனவே 220-க்கும் மேற்பட்ட நிலையங்களுடன் 1.5 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களுக்குச் சேவையளிக்கும் Dialog 5G Ultra வணிக ரீதியாக அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்த வலையமைப்பு தற்போது அசுர வேகத்தில் விரிவடைந்துள்ளது. இரத்தினபுரி, மொனராகலை, பதுளை, வவுனியா, பொலன்னறுவை, அம்பாந்தோட்டை, முல்லைத்தீவு மற்றும் கேகாலை ஆகிய புதிய மாவட்டங்களுக்கும் இச்சேவை தற்போது விஸ்தரிக்கப்பட்டுள்ளது. இது இலங்கையின் மிக வேகமான 5G வலையமைப்பு வளர்ச்சியாகக் கருதப்படுகிறது.

வாடிக்கையாளர்கள் 5G புத்தாக்கங்களின் வியக்கத்தக்க ஆற்றலை Dialog Iconic தலைமையகம், உலக வர்த்தக மையம் (WTC) மற்றும் கண்டி Dialog Experience Centre ஆகியவற்றில் அமைந்துள்ள பிரத்தியேக Experience Zones-களில் நேரடியாக அனுபவிக்க முடியும். Iconic Centre-இல் 5G Powered VR Cycling, 5G Smart City செயல்முறை விளக்கம் மற்றும் 5G Powered AI Portrait அனுபவம் ஆகியன இடம்பெற்றுள்ளன. அதேபோல், WTC கிளையில் 5G Powered AI Portrait அனுபவமும், கண்டி கிளை விற்பனை நிலையத்தில் 5G Powered VR Cycling வசதியும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இது குறித்து டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி-இன் குழும தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி லசந்த தெவரப்பெரும கருத்து தெரிவிக்கையில், “அறிமுகப்படுத்தப்பட்ட 3 மாதங்களுக்குள் எமது 5G வலையமைப்பை 800-க்கும் மேற்பட்ட நிலையங்களுக்கு விரிவாக்கம் செய்திருப்பது, இலங்கையின் டிஜிட்டல் எதிர்காலத்தை முன்னெடுப்பதில் டயலொக் கொண்டுள்ள அசைக்க முடியாத அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. நாட்டில் 2G, 3G, 4G மற்றும் இப்போது 5G தொழில்நுட்பங்களின் முன்னோடியாக, நுகர்வோர் மற்றும் வணிகங்களை வலுப்படுத்தும் உருமாற்றத் தொழில்நுட்பங்களில் நாங்கள் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறோம். இது அனைத்து இலங்கையர்களுக்கும் உள்ளடக்கிய மற்றும் எதிர்காலத்திற்குத் தயாரான (Future-ready) இணைப்பு வசதியை உறுதி செய்கிறது,” என்றார்.

இந்த மைல்கல்லின் மூலம், அடுத்த தலைமுறை இணைப்புச் சேவைகளில் டயலொக் தனது தலைமைத்துவத்தை மேலும் பலப்படுத்தியுள்ளது. இலங்கைக்கு மேம்பட்ட மொபைல் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாகத் திகழும் டயலொக், உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு மற்றும் தொடர்ச்சியான முதலீடுகள் மூலம் மேம்பட்ட டிஜிட்டல் வாழ்க்கை முறை, வணிக புத்தாக்கம் மற்றும் நிலையான தேசிய வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. 5G வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், இலங்கையின் மிகப்பெரிய மற்றும் மிக வேகமாக வளர்ந்து வரும் 5G வலையமைப்பை அனுபவிக்க அழைக்கப்படுகிறார்கள்.