SLIM-KANTAR People’s Awards 2026: ஆண்டின் சிறந்த Service Brand மற்றும் Telecommunication Brand ஆக டயலொக் தெரிவு
2026 மார்ச் 19 கொழும்பு
இலங்கையின் முதற்தர இணைப்புச்சேவை வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, 2026 மார்ச் 18 அன்று நடைபெற்ற SLIM-KANTAR People’s Awards 2026 விருது விழாவில், 5ஆவது முறையாக ‘Service Brand of the Year’ விருதையும், தொடர்ச்சியாக 15ஆவது ஆண்டாக ‘Telecommunication Brand of the Year’ விருதையும் வென்றுள்ளதாக அறிவித்துள்ளது. நாடு தழுவிய ரீதியில் நுகர்வோர் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இலங்கை மக்களால் வழங்கப்பட்ட இந்த வாக்குகள், டயலொக் சேவைகள் மீதான மக்களின் தொடர்ச்சியான விருப்பத்தையும் இந்த Brand மீது நாடு முழுவதும் வைத்துள்ள நம்பிக்கையையும் பிரதிபலிக்கின்றன.
2007ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட SLIM-KANTAR People’s Awards, பல்வேறு பிரிவுகளின் கீழ் நுகர்வோரின் கருத்துக்களைக் கண்டறியும் ஆய்வின் அடிப்படையில் அமைந்ததாகும். இது பொதுமக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ள Brands மற்றும் தனிநபர்களை அங்கீகரிக்கும் ஒரு சுயாதீனமான அளவீடாகும்.
இது குறித்து டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் பணிப்பாளரும் குழும முதன்மை நிறைவேற்று அதிகாரியுமான சுபுன் வீரசிங்க கூறுகையில்: “எமது நிறுவனம் மீது மக்கள் தொடர்ந்து வைத்துள்ள இந்த நம்பிக்கைக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இது நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்வதில் எமக்குள்ள பொறுப்பை மேலும் உறுதிப்படுத்துகிறது. எமது சேவைகள் மற்றும் டிஜிட்டல் தளங்களை நாங்கள் தொடர்ந்து மேம்படுத்தி வரும் வேளையில், இலங்கை மக்களின் வாழ்க்கையையும் வர்த்தகங்களையும் வலுப்படுத்தும் எமது நோக்கத்திற்கு உண்மையாக இருந்து, உயர்தரமான அனுபவங்களை வழங்குவதில் எமது கவனம் தொடரும்.” என தெரிவித்தார்.
நாடு தழுவிய ரீதியில் நுகர்வோரின் குரலாக வழங்கப்பட்ட இந்த விருதுகள், வேகமாக மாறிவரும் டிஜிட்டல் சூழலில் தனிநபர்கள், வீடுகள் மற்றும் வணிகங்களின் இணைப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் டயலொக் கொண்டுள்ள முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.