Doc990, Allianz உடன் இணைந்து OPD Wallet அறிமுகம்: சுகாதாரச் சேவைகள் இனி எளிதாக!
2025 ஆகஸ்ட் 14 கொழும்பு

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இன் துணை நிறுவனமான Digital Health (Pvt) Ltd-ஆல் இயக்கப்படும், இலங்கையின் முன்னணி டிஜிட்டல் சுகாதார தீர்வுகள் வழங்குனரான Doc990, Allianz Insurance Lanka Limited உடன் இணைந்து, OPD Wallet என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வசதி, Allianz மருத்துவக் காப்பீட்டுதாரர்களுக்கு சுகாதார சேவைகளைப் பெறுவதை விரைவாகவும், எளிதாகவும், மேலும் வசதியாகவும் மாற்றியுள்ளது.
இந்த OPD Wallet மூலம், Allianz மருத்துவக் காப்பீட்டுதாரர்கள் Doc990 தளத்தின் வழியாக மருத்துவர் சந்திப்புகளை முன்பதிவு செய்யும்போது, ஆலோசனைக்கான கட்டணம் அவர்களின் OPD காப்பீட்டு நன்மைகளில் இருந்து நேரடியாகக் கழிக்கப்படும். இதனால், முன்பணம் செலுத்துதல் மற்றும் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் சிரமங்கள் தவிர்க்கப்பட்டு, மிகவும் எளிமையான மற்றும் வசதியான சுகாதார அனுபவம் கிடைக்கிறது. அத்துடன், காப்பீட்டுதாரர்கள் Doc990 இன் சேவை கட்டணங்களில் 35% தள்ளுபடியையும் பெறுவதால், சேவையின் மதிப்பு மேலும் அதிகரிக்கிறது.
“நாட்டின் முன்னணி டிஜிட்டல் சுகாதார தளமாகிய எங்களின் நோக்கம், அனைத்து இலங்கையர்களுக்கும் தரமான சுகாதார சேவைகளை எளிதாக்குவதே ஆகும். Allianz உடனான இந்தக் கூட்டு முயற்சி, அந்த இலக்கை நோக்கிய ஒரு முக்கியமான படியாகும். இதன் மூலம், காப்பீட்டுதாரர்களுக்கு சில clicks-களிலேயே சிறந்த மற்றும் ஒருங்கிணைந்த சுகாதார அனுபவத்தை வழங்க முடியும்,” என்று Digital Health (Pvt) Ltd-இன் தலைமை நிர்வாக அதிகாரி ஜனித் பீரிஸ் தெரிவித்தார்.
Doc990 மற்றும் Allianz நிறுவனங்களின் இந்தக் கூட்டு முயற்சி, சிறப்பான மற்றும் எளிமையாகப் பயன்படுத்தக்கூடிய சுகாதார, காப்பீட்டுத் தீர்வுகளை வழங்குவதில் அவற்றின் உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. இலங்கையின் சுகாதாரத் துறையில் வசதி, குறைந்த செலவு மற்றும் எளிதான அணுகல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக, இரு நிறுவனங்களும் தொடர்ந்து புதுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.