Body

நன்கொடையாளர்களை உதவிகள் தேவைப்படுபவர்களுடன் இணைக்கும் Karuna.lk

 

டயலொக் அறக்கட்டளையினால் அறிமுகப்படுத்தப்படும் இலங்கையின் முதலாவது, அங்கீகரிக்கப்பட்ட தொண்டு செயற்றிட்டங்களுடன் கூடிய Crowdfunding தளம்

ஒக்டோபர் 18, 2022         கொழும்பு

 

Karuna.lk - Connecting Donors to the Needy

படத்தில் இடமிருந்து வலமாக : PwC ஸ்ரீ லங்காவின் பங்குதாரர் திவங்க ஜெயசிங்க, ஆசிஆட்டா குழும பெர்ஹாட், தலைமை நிறைவேற்று அதிகாரி, தொலைத்தொடர்பு வணிகம்/குழும நிறைவேற்று உப தலைவர் டாக்டர் ஹான்ஸ் விஜயசூரிய, சர்வோதய சிரமதான சங்கத்தின் தலைவர் கலாநிதி வின்ய ஆரியரத்ன மற்றும் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் இயக்குனர்/ குழும பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்ஹ ஆகியோர் இலங்கையின் முதலாவது அங்கீகரிக்கப்பட்ட தொண்டு செயற்றிட்டங்களுடன் கூடிய Crowdfunding தளமாக திகழும் Karuna.lk இணையத்தளத்தை அறிமுகப்படுத்துகின்றார்கள்.

இந்த சவாலான காலக்கட்டத்தில் நடவடிக்கை எடுக்கவும், தேவைப்படும் சக இலங்கையர்களுக்கு உதவவும் விரும்பும் ஒத்த எண்ணம் கொண்டவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில், டயலொக் அறக்கட்டளையின் முதன்மை மதிப்பீட்டாளர் - சர்வோதய சிரமதான சங்கம் மற்றும் சுயாதீன கணக்காய்வாளர் - PwC ஸ்ரீலங்கா ஆகியவை இணைந்து, உறுதிப்படுத்தப்பட்ட மற்றும் நம்பிக்கைக்குரிய இலாப நோக்கற்ற நிறுவனங்கள், மற்றும் தொண்டு செயற்றிட்டங்களை கொண்ட இலங்கையின் முதலாவது crowdfunding தளமாக திகழும் Karuna.lk ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் பின்னணியில், சரியான நேரத்தில் உயர்மட்ட நிர்வாகத்தில் இயங்கும் நம்பகமான மற்றும் பாதுகாப்பான நிதி திரட்டலானது சமூகப் பொறுப்புணர்வு மூலம் பொருத்தமான முன்முயற்சியின் ஊடாக இலங்கையர் வாழ்வை வலுவூட்டுவதையும் வளப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளது. தனிநபர்கள், இலாப நோக்கற்ற நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்கள், குறிப்பிட்ட/சிறப்பு மதிப்பீட்டாளர்களால் மதிப்பாய்வு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படும் செயல்முறையைப் பின்பற்றலாம். மேலும் முற்றிலும் இலவசமான மற்றும் பயன்படுத்த எளிதான சேவையைப் பெற Karuna.lk இல் தங்கள் காரணத்தை/தொண்டுகளை பதிவு செய்யலாம்.

மேலும், நலன், சமூகம், கல்வி, அவசரநிலை, சுற்றுச்சூழல், விளையாட்டு, புற்றுநோய், விலங்குகள் பராமரிப்பு நலன் தன்னார்வ தொண்டு உள்ளிட்ட பல்வேறு வகைகளில் பரந்து விரிந்துள்ள பல சமூகக் தொண்டு செயற்றிட்டங்களுக்கான அணுகலுடன், பயனாளிகளுக்கு நிதிப் பரிமாற்றத்தின் முழு வெளிப்படைத்தன்மையையும் இந்த தளம் நன்கொடையாளர்களுக்கு வழங்குகிறது. தற்போது, karuna.lk ஆனது UNDP, Red Cross, SOS Village, Heart To Heart Trust Fund, PRDA, Samastha Lanka Kidney Patient’s Association, Child Action Lanka, மனிதநேய ஒன்றிணைவு மற்றும் பலவற்றை உள்ளடக்கிய அரசாங்க அங்கீகாரம் பெற்ற தொண்டு நிறுவனங்களுக்கு தாயகமாக உள்ளது. டெபிட்/கிரெடிட் கார்டுகள் (மாஸ்டர் மற்றும் விசா), eZ Cash, Dialog add-to-bill, Star Points, சேவை நிலையங்கள் அல்லது ஆன்லைன் வங்கி பரிமாற்றங்கள் உட்பட பல்வேறு கட்டண தெரிவுகள் மூலம் நன்கொடையாளரின் விருப்பத்திற்கு அமைய சரிபார்க்கப்பட்ட காரணங்கள்/தொண்டு நிறுவனங்களுக்கான நன்கொடைகளை வசதியாக வழங்கிடலாம்.

இந்நிகழ்வில் உரையாற்றிய டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்ஹ “டயலொக் அறக்கட்டளைக்கு Karuna.lk ஐ அறிமுகப்படுத்துவதில் பெரும் மகிழ்ச்சி அடைவதுடன் பாக்கியமாகவும் கருதுகின்றோம். இந்த தளம் விரும்பியவர்களுக்கும் உதவக் கூடியவர்களுக்கும் உணவு, நன்கொடை அளித்தல், குழந்தையின் கல்விக்கு உதவுதல், இலங்கையின் இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் பலவற்றின் ஊடாக உதவிகள் தேவைப்படுபவர்களுக்கு உதவ நம்பகமான வழிமுறையை வழங்குகின்றது. ஒரு உணர்வுள்ள பெருநிறுவன பிரஜையாகவும் 17 மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்களின் நம்பகமான டிஜிட்டல் துணையாகவும், இலங்கையர்களின் வாழ்க்கையை வலுவூட்டுவதற்கும் வளப்படுத்துவதற்கும் டயலொக் தொடர்ச்சியாக எமது சேவைகளை அர்ப்பணித்து வருகின்றது. ஒக்டோபர் மாதத்தில், டயலொக் அறக்கட்டளையானது தனது 10 வருட சேவையை கொண்டாடவுள்ளது மற்றும் Karuna.lk இன் அறிமுகமானது, இந்த சந்தர்ப்பத்திற்கு மிகவும் பொருத்தமான ஒன்றாக அமைந்திருக்கின்றது என நான் நம்புகிறேன்”.

இந்நிகழ்வின் போது உரையாற்றிய சர்வோதய சிரமதான சங்கத்தின் தலைவர் கலாநிதி வின்ய ஆரியரத்ன, “சர்வோதய சங்கம் டயலொக் மற்றும் டயலொக் அறக்கட்டளையுடன் இணைந்திருப்பதையிட்டு எப்போதும் மகிழ்ச்சி அடைகின்றது. இரக்கமும் கருணையும் இலங்கை கட்டமைக்கப்பட்டதன் அடித்தளமாகும், மேலும் Karuna.lk அவர்களின் குரல்களை உயர்த்துவதற்கான ஒரு தளத்தை வழங்கி நம்பகமான தளத்தை அணுகுவதற்கு உதவ தயாராக இருக்கின்றது. Karuna.lk தளத்தின் முதன்மை மதிப்பீட்டாளராக பணியாற்றுவதில் சர்வோதய சிரமதான சங்கம் மகிழ்ச்சியடைகிறதுடன் Karuna.lk இல் உள்ள கோரிக்கைகள் மற்றும் பெறுநர்களை நாங்கள் மதிப்பாய்வு செய்வோம். இலங்கையில் 60 வருடகால சேவை அனுபவத்துடன், இந்த பொருத்தமான மற்றும் சரியான நேரத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள முன்முயற்சிக்கு தேவையான ஆதரவை வழங்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

PwC ஸ்ரீலங்காவின் பங்குதாரரான திவங்க ஜயசிங்க கருத்த தெரிவிக்கையில் “இலங்கை மிகவும் கடினமான காலகட்டத்தை கடந்து வருகிறது, மேலும் பலரைச் சந்திக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கின்றது. சமூகங்களுக்கு உதவி தேவைப்படும் போது டயலொக் உதவுவதற்கு எவ்வாறு முன்வந்துள்ளது என்பதை நேரடியாகக் கண்டுள்ளோம். டயலொக் அறக்கட்டளை karuna.lk தளத்துடன் முன்வந்துள்ளது. மேலும் இந்த முயற்சி பல நன்கொடையாளர்களை ஈர்க்கும் என்று நம்புகின்றோம். அதே நேரத்தில் PwC உதவி தேவைப்படும் நபர்களுக்கு உதவுவதுடன், அதன் சரியான பயனாளிகளுக்கு நிதி வழங்குவதை சரிபார்க்கவும் அதனை கணக்காய்வு செய்வதற்கு இணைந்துக்கொண்டமையினையிட்டு பெருமை கொள்கின்றது. இந்த முன்முயற்சி மிகவும் தேவையான பங்களிப்புகளை ஊக்குவிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், இது எங்கள் மக்களுக்கு பெரிதும் உதவும் என மேலும் தெரிவித்தார்.

மேலதிக விபரங்களுக்கு www.karuna.lk க்கு செல்லுங்கள்