இயங்கலை நியதிகள் மற்றும் நிபந்தனைகள்

1. வரைவிலக்கணங்கள் மற்றும் பொருள்கோடல்கள்

சூழ்நிலைகள் வேறுவகையில் வேண்டாதவரை, பின்வரும் சொற்கள் முறையாக அவற்றுக்கு வழங்கப்படுகின்ற பின்வரும் கருத்துக்களைக் கொண்டிருக்கும்,

“உடன்படிக்கை” டயலொக் ப்ரோட்பேண்ட் நெட்வேர்க் (டீபீஎன்) மற்றும் வாடிக்கையாளருக்கிடையில் நிறைவேற்றப்படுகின்ற டயலொக் ஸ்மார்ட்லைப் சொலுஷன் இற்கான உடன்படிக்கை எனப் பொருள்படும், என்பதோடு இந்த நியதிகள் மற்றும் நிபந்தனைகள் ,சொலுஷன் முன்மொழிவு, அட்டவணைகள் அதற்கான இணைப்புக்கள் என்பவற்றையும் மற்றும் டயலொக் ப்ரோட்பேண்ட் நெட்வேர்க் மற்றும் வாடிக்கையாளருக்கிடையில் நிறைவேற்றப்படுகின்ற தொடர் திருத்தங்களையும் உள்ளடக்கும் என்தோடு விடயப்பொருள் தொடர்பாக ஏதேனும் முன்னைய உடன்படிக்கை, புரிந்துணர்வு, எழுத்து மூல அல்லது வாய்மொழிமூல பிரதிநிதித்துவங்கள். என்பவற்றை இந்த உடன்படிக்கை மேலோங்கி நிற்கும்.

“நாள்” என்பது பஞ்சாங்க நாள் எனப் பொருள்படும்

“நிறுவுதல்” என்பது குறிப்பிட்ட அமைவிடத்தில் சொலுஷன் கருவியை முழுமையாக பொருத்துதல் எனப்படும்.

“தரப்பினர்” என்பது தனிப்பட்ட முறையில் ஒன்றில் டீபீஎன் அல்லது வாடிக்கையாளர் என பொருள்படும்.

“தரப்பினர்கள்” கூட்டாக டீபீஎன் மற்றும் வாடிக்கையாளர் எனப் பொருள்படும்.

“சொலுஷன்” என்பது அட்டணை 1 இல் நன்கு விபரிக்கப்பட்டவாறு ஸ்மார்ட் ஹோம் இற்கு ஏற்ப சொலுஷன் கருவி எனப் பொருள்படும். என்பதோடு இதன் கீழ் வழங்கப்படுகின்ற வன்பொருள் மற்றும்/அல்லது மென்பொருள் என்பவற்றையும் உள்ளடக்கியிருக்கும்.

”சேவை/கள்” என்பது சொலுஷன் கருவியின் விநியோகம், நிறுவுதல், ஆதரவு, பராமரிப்பு மற்றும் பின்தொடர் நிறுவுதல் எனப் பொருள்படும்.

“இடம்” என்பது வன்பொருள் மற்றும்/அல்லது மென்பொருள் மற்றும்/அல்லது சொலுஷன் கருவி பொருத்தப்படக் கூடிய அமைவிடம்/ வாடிக்கையாளர் வளவு என்பதாகும்.

“தொகுதி” (Unit) என்பது தனியான உரிமைக்காக நியமிக்கப்பட்ட இடத்தின் ஒரு பாகம் எனப் பொருள்படும் என்பதோடு அது வன்பொருள்/மென்பொருள் மற்றும்/அல்லது பொருத்தப்பட்ட சொலுஷன் கருவியையும் உள்ளடக்கும்.

“வேளை நாள்” என்பது இலங்கையில் எவையேனும் பொது அல்லது வர்த்தக விடுமுறைகள் தவிர்ந்த திங்கள் முதல் வெள்ளி வரையான நாட்கள் என்பதாகும்.

“வருடம்” என்பது ஒரு பஞ்சாங்க வருடம் என்பதாகும்.

1.1 சூழ்நிலைகள் வேண்டுகின்றவிடத்து ஒருமைக் கருத்தைக் குறிக்கின்ற சொல் பன்மைக் கருத்தையும் அதேபோன்று பன்மை கருத்தைக் குறிக்கின்ற சொல் ஒருமைக் கருத்தையும் குறிக்கும்.

1.2 இந்த நிபந்தனைகளின் தலைப்பு குறிப்பீட்டு வசதிக்காக மாத்திரமாகும் என்பதோடு இந்த உடன்படிக்கையின் ஒரு பகுதியாக கருதப்பட முடியாது அல்லது அதன் பொருள்கோடலை அல்லது உருவாக்கத்தை எந்த வகையிலும் மாற்றுவதாகக் கருதப்பட மாட்டாது.

1.3 உடன்படிக்கைக்கான அட்டவணைகள் இதன் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக அமையும்.

1.4 தரப்பினர் ஒருவரின் பிரதிகூலத்திற்கு நிர்மாணிப்பு சட்டவிதி ஏற்புடையதாகாது ஏனென்றால் உடன்படிக்கையை அல்லது அதன் ஏதேனும் ஒரு பகுதியை தயாரிப்பதற்காக அத்தகைய தரப்பினர் பொறுப்பாக இருந்திருப்பார்.

2. உடன்படிக்கையின் விடயப்பரப்பு

2.1 குடியிருப்பாளர்கள், வருகை தருவோர்கள் மற்றும் சொல்லப்பட்ட அமைவிடத்தின்/வாடிக்கையாளரின் வாடிக்கயாளர்களின் பிரத்தியேகமற்ற பாவனைக்காக உடன்படிகையின் அட்டவணை 1 இல் நன்கு விபரிக்கப்பட்ட சில வசதிகளை வழங்குவதற்கு/மேம்படுத்துவதற்கு சொல்லப்பட்ட இடத்தில் சொலுஷன் கருவியை நிறுவுதல் மற்றும் பராமரித்தல் என்பன உடன்படிக்கையின் விடயப்பரப்பாகும்.

2.2 வாடிக்கையாளருக்கு முன்னறிவித்தல் வழங்கி காலத்துக்கு காலம் சேவைகளின் நியதிகளை டீபீஎன் திருத்தும். அத்தகைய திருத்தங்களுக்கு வாடிக்கையாளர் உடன்படாத சந்தர்ப்பத்தில், இந்த உடன்படிக்கையின் நியதிகள் மற்றும் நிபந்தனைகள் என்பவற்றுக்கு அமைவாக, வாடிக்கையாளர் இந்த உடன்படிக்கையை மற்றும் இந்த உடன்படிக்கையில் நன்கு விபரிக்கப்பட்ட சேவைகளை முடியுறுத்தலாம்.

3. செயன்முறை

3.1 அமைவிடம் தொடர்பான ஆய்வொன்றை மேற்கொள்வதற்காக திகதி ஒன்றை தீர்மானிப்பதற்காக டீபீஎன் அதன் சேவைப் பங்காளர்களுடன் சேர்ந்து வாடிக்கையாளரின் அமைவிடத்திற்கு வருகை தரும்.

3.2 அமைவிட ஆய்வானது அதன் அளவு மற்றும் சிக்கலான தன்மை என்பவற்றை பொறுத்ததாக இருக்கும். எவ்வாறாயினும், ஒவ்வொரு ஆய்வையும் உடன்படிக்கையின் அட்டவணை 1 இல் விபரிக்கப்பட்ட நாட்களின் எண்ணிக்கைக்குள் மேற்கொள்வதற்கான முயற்சியை டீபீஎன் மேற்கொள்ளும்.

3.3 வாடிக்கையாளரால் சொலுஷன் கருவிக்கான கொள்வனவுக் கட்டளை ஒன்றை மேற்கொண்டதைத் தொடர்ந்து, அத்தகைய கட்டளை கிடைக்கப்பெற்ற திகதியிலிருந்து பதிநான்கு முதல் நாற்பத்திரண்டு (14-42) நாட்களுக்குள் சொல்லப்பட்ட அமைவிடத்திற்கு சொலுஷன் கருவி மற்று தொடர்புடைய ஏனைய கருவிகள் விநியோகிக்கப்படும்.

4. வாடிக்கையாளரின் கடப்பாடுகள்

வாடிக்கையாளர் பின்வரும் விடயங்களை செய்ய வேண்டும்,

4.1 தொடர்புடைய உபகரணங்கள் மற்றும் வயர் வழிகள் உள்ளடங்குகின்ற சொலுஷன் கருவியை நிறுவுவதற்கு குறிப்பிட்ட அமைவிடத்திற்குள் டீபீஎன் மற்றும் அதன் பங்காளிகளுக்கு இடம் மற்றும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை அனுமதித்தல் மற்றும் ஒதுக்குதல்.

4.2 சொலுஷன் கருவியை பொருத்துவதற்கு உரிய அதிகார சபைகளிலிருந்து சகல தேவையான அங்கீகாரங்களைப் பெற்றுக் கொள்தல்.

4.3 நியூட்டல் வயரிடுதல் மற்றும் ஆழமான குழிப் பெட்டிகள் (neutral wiring, deep sunk boxes) போன்ற சொலுஷன் கருவிக்கு தேவையான சாதனங்களை நிறுவுவதற்கு தேவையான எண்ணிக்கையிலான மின் விநியோகிப்பான்கள் மற்றும் மின் பொருத்துதல்களை வழங்குதல்,

4.4 சொலுஷன் கருவியை பயன்படுத்துகின்ற சகல கருவிகளுக்காக தேவையான டயலொக் ப்ரோட்பேண்ட் வசதிகளை பெற்று பராமரித்தல்;

4.5 நிறுவுதலைத் தொடர்ந்து மற்றும் சொலுஷன் சோதனையை மேற்கொள்கின்றபோது தளத்தில் நிறுவப்பட்ட சொலுஷன் கருவியை ஏற்றுக் கொண்டு, தேவைப்பட்டால் பயனாளர் ஏற்பு படிவத்தில் (UAT) கையொப்பமிடுதல்,

4.6 கதவுகள், விளக்குகள் அல்லது வாடிக்கையாளரால் தேவைப்பகின்றதாக் கருதக் கூடிய எவையேனும் ஏனைய பொருட்கள் போன்ற அமைவிடத்திற்கு தேவையான அத்தியவசியப் பாகங்களுக்கான மாற்று அணுகுவழிக் கட்டுப்பாடுகள் இருப்பதை உறுதி செய்தல்.

4.7 சொலுஷன் கருவியின் நிறுவுதலிலிருந்து மூன்று (03) நாட்களுக்குள் சொலுஷன் கருவியின் நிறுவுதல் தொடர்பான ஏதேனும் கரிசனை இருந்தால் டீபீஎன் நிறுவத்திற்கு தெரிவித்தல்;

4.8 ஸ்மார்ட் கருவிகளை மற்றும் சேவையின் பயன்பாட்டிற்காக முழுப் பொறுப்பை ஏற்றுக்கொள்தல் வேண்டும் என்பதோடு மேலும் இங்கு நன்கு விபரிக்கப்பட்ட சேவைகளின் நியதிகளைக் கடைப்பிடித்தல்,

4.9 சொலுஷன் கருவியின் உள்நுழைவு பயனர் பெயர்கள் மற்றும் கடவுச்சொற்களின் இரகசியத்தன்மைக்கு முழுமையாக பொறுப்பாக வேண்டும்;

4.10 சொலுஷன் கருவியின் நிறுவுதல் மற்றும் சேவை வழங்குதல் காரணமாக அமைவிடத்தில் ஒப்பனைப் பொருட்கள் இருக்கலாம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

5. தொழிநுட்ப நிபந்தனைகள்

வாடிக்கையாளர் பின்வருமாறு உடன்படுகின்றார் மற்றும் ஏற்றுக் கொள்கின்றார்,

5.1 ஒளியைக் கூட்டி குறைக்கக் கூடிய (dimmable) விளக்குச் செயற்பாட்டின் நோக்கத்திற்காக, இழை விளக்குகள் (Filament) மற்றும்/அல்லது தேவையான ஆதரவளிக்கின்ற விளக்குகளை வாடிக்கையாளர் வழங்க வேண்டும்.

5.2 ஒவ்வொரு விளக்கினதும் சக்தி நுகர்வு ஒரு தனி ஆளிக்காக குறைந்த பட்சம் 20 வாட் மற்றும் அதிகபட்சம் 300 வாட் இருக்க வேண்டும்.

5.3 ஒவ்வொரு ஆளி பொருத்துகின்ற பெட்டியின் ஆழம் 1.5 அங்குலத்தை விட கூடுதலாக அல்லது அதற்கு சமமாக இருக்க வேண்டும்.

5.4 சொலுஷன் கருவி வேண்டினால்/குறிப்பிட்டால். மின் சார உட்டகட்டமைப்பில் நியூட்டல் வயரிடுதல் இருக்க வேண்டும்.

5.5 சொலுஷன் கருவிக்கு ஆயுள் முடிவொன்று உண்டு என்பதோடு சொலுஷன் கருவியை பராமரிப்பதற்கும் மற்றும் நாளாந்த நடவடிக்கைகளைத் தொடர்வதற்கும் ஒரு மாற்று தீர்வைப் பயன்படுத்துவதற்கு சில சந்தர்ப்பங்களில் தேவைப்படலாம்.

5.6 சொலுஷன் கருவியை பராமரிப்பதற்கு டயலொக் ப்ரோட்பேண்ட் இணைப்பானது கட்டாயமானதாகும் என்பதோடு தேவைப்படுகின்றவாறு இணைய அல்லது வை-பை சேவைகளை வழங்குவதற்கு உடன்பட வேண்டும்.

5.7 டயலொக் ப்ரோட்பேண்ட் இணைப்பு முடிவுறுத்தப்படுகின்ற சந்தர்ப்பத்தில், உடனடியாக உடன்படிக்கையை முடிவுறுத்துவதற்கான உரிமையை டீபீஎன் கொண்டுள்ளது.

6. டீபீஎன் நிறுவனத்தின் கடப்பாடுகள்

டீபீஎன் நிறுவனம் பின்வருமாறு செயற்பட வேண்டும்,

6.1 டீபீஎன் நிறுவனத்தால் குறிப்பிடப்பட்ட தரநியமங்களுக்கு ஏற்ப சொல்லப்பட்ட இடத்தில் சொலுஷன் கருவி தொடர்பான சேவைகளை சேவைப் பங்காளர் நிறுவனத்தின் ஊடாக சேவைகளை வழங்குதல், மேலே சொல்லப்பட்ட விடயங்களுக்கு மாறாக ஏதேனும் நோக்கத்திற்காக சொல்லப்பட்ட வியாபாரச் செயற்பாட்டை டீபீஎன் பயன்படுத்த மாட்டாது.

6.2 உரிய விபரக்குறிப்புக்களுக்கு ஏற்ப நிறுவுதல் மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்தல் மற்றும் நிறுவுதல் பணி பூர்த்தியடைந்ததுடன் சொலுஷன் கருவியின் சோதனையை வாடிக்கையாளரின் திருப்திக்கு ஏற்பவும் மற்றும் உடன்படிக்கையின் தேவைப்பாடுகள் மற்றும் நியதிகள் மற்றும் நிபந்தனைகள் என்பவற்றுக்கு ஏற்பவும் மேற்கொள்வதை உறுதிசெய்தல்.

6.3 சொல்லப்பட்ட சொலுஷன் கருவி மற்றும் ஏனைய தொடர்புடைய உபகரணங்களை நிறுவும் போது அந்த தளத்திற்கு குறைந்தளவு சேதம் ஏற்படுவதை உறுதி செய்தல்;

6.4 நேரடியாக ஏற்படக் கூடிய குறைபாடு டீபீஎன் நிறுவனத்தின் மற்றும்/அல்லது அதன் பிரதிநிகளின், அவர்களின் ஊழயர்களின் மற்றும் எவரேனும் மூன்றாம் தரப்பினர் சேவை வழங்குனர்களின் வேண்டுமென்றே செய்கின்ற செயல்கள் அல்லது மொத்த உதாசீன செயல்கள் அல்லது செயல்களை செய்யாமை காரணமாக வாடிக்கையாளருக்கு ஏற்படக்கூடிய ஏதேனும் இழப்பு அல்லது சேதத்திற்கு எதிராக வாடிக்கையாளருக்கு நட்ட உத்தரவாதமளிக்கவேண்டும் என்பதோடு அவற்றின் தீங்கிலிருந்து வாடிக்கையாளர் விடுபட்டவராகவும் வைத்திருத்தல்.

6.5 டீபீஎன் சேவை பங்காளர்களுடன் ஒத்துழைப்புடன் காலத்திற்கு காலம் கருவிகள் மற்றும் கையடக்க செயலிகளை இற்றைப்படுத்துவதற்கு வணிக ரீதியான நியாயமான முயற்சிகளை மேற்கொள்தல்.

7. கொடுப்பனவுகள்

7.1 உடன்படிக்கையில் விபரிக்கப்பட்ட கொடுப்பனவு நியதிகளை அட்டவணை 2 இற்கு ஏற்ப சொலுஷன் கருவி மற்றும் சேவைக் கிரயங்கள் முழுமையாக வாடிக்கையாளரால் செலுத்தப்பட வேண்டும். சொலுஷன் கருவிக்காக கொடுப்பனவானது, ஒரே முறைக்கொடுப்பனவாக இருக்கும் என்பதோடு டீபீஎன் நிறுவனத்தால் வாடிக்கையாளருக்கு அறிவிக்கப்பட்ட ஒரு விசேட ஊக்குவிப்பு சந்தர்ப்பம் இருந்தால் அல்லாது சொலுஷன் கருவிக்கான ஏதேனும் கொடுப்பனவுத் திட்டங்கள் இருக்கமாட்டாது என வாடிக்கையாளர் உடன்படுகின்றார் மற்றும் ஏற்றுக்கொள்கின்றார்.

7.2 சேவைகள் தொடர்பிலான எவையேனும் வரிகளின் கொடுப்பனவுகளுக்கு வாடிக்கையாளர் பொறுப்பாக வேண்டும் என்பதோடு வரிகளின் ஏதேனும் குறைப்பு இல்லாமல் வாடிக்கையாளர் டீபீஎன் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும்.

7.3 உடன்படிக்கைக்கு அமைவாக, ஒவ்வொரு தேவைப்பாட்டிற்கு ஏற்ப அறவிடப்படக் கூடிய போக்குவரத்து கிரயங்களுக்காக செலுத்துவதற்கு வாடிக்கையாளர் பொறுப்பாக வேண்டும்.

7.4 சொலுஷன் கருவியை நிறுவிய பின்னர், ஏதேனும் காரணத்துக்காக எவையேனும் காசு மீள்-கொடுப்பனவுகளை டீபீஎன் நிறுவனம் மேற்கொள்ளமாட்டது.

7.5 வழங்கப்பட்ட சேவைகளுக்காக மாதாந்த அடிப்படையில் வாடிக்கையாளருக்கு டீபீஎன் நிறுவனம் பட்டியல் அனுப்பும் என்பதோடு அத்தகைய பட்டியல் திகதியிலிருந்து முப்பது (30) நாட்களுக்குள் பட்டியல் தொகையை வாடிக்கையாளர் செலுத்த வேண்டும்.

7.6 அத்தகைய பட்டியல்களில் ஏதேனும் பிணக்கு இருந்தால், அத்தகைய பட்டியல் திகதியிலிருந்து ஐந்து (05) வேலை நாட்களுக்கும் டீபீஎன் நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும். அத்தகைய காலத்திற்குள் ஏதேனும் பிணக்கு தொடர்பில் கரிசனை எழுப்பப்படாவிட்டால், வாடிக்கையாளரால் பட்டியல் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் என்பதோடு அதன் பின்னர் மீளாய்வு/திருத்தம் மேற்கொள்ளப்படமாட்டாது.

7.7 வாடிக்கையாளரினால் ஏதேனும் கொடுப்பனவை தவணை தவறுகின்ற சந்தர்ப்பத்தில், டீபீஎன் நிறுவனத்திற்கு தவணை தவறிய முழுத் தொகையையும் செலுத்தும் வரை, வழங்கிய சேவைகளை உடனடியாக டீபீஎன் முடிவுறுத்தும்.

8. உத்தரவாதம்

8.1 டீபீஎன் நிறுவனத்தால் வாடிக்கையாளருக்கு இரண்டு (02) வருட கால சேவை உத்தரவாதம் வழங்கப்படும். என்பதோடு அத்தகைய உத்தரவாத்தில் கருவிகள் மற்றும் சொலுஷன் கருவியையும் உட்பட்டது.

8.2 சொலுஷன் கருவியின் கிடைப்பனவைப் பொறுத்து கருவியை பதிலீடு செய்வதில் டீபீஎன் மற்றும் அதன் சேவைப் பங்காளர்கள் அவர்களின் சுய தீர்மானத்தை தக்கவைத்துக் கொள்கின்றனர்.

8.3 உத்தரவாத காலம் முடிவடைந்த பின்னர், பராமரிப்பதற்கு மற்றும் வளவின் மீது தொழிநுட்ப உதவிக்கும் அழைப்பு நிலையத்தை தொடர்புகொள்வதற்கு வாடிக்கையாளருக்கு தேவைப்படுகின்ற சந்தர்ப்பத்தில், உடன்படிக்கையின் அட்வைணை 3 இல் நன்கு விபரிக்கப்பட்டவாறு, சொலுஷன் கருவி முன்மொழிவில் (“பராமரிப்பு திட்டம்”) விபரிக்கப்பட்ட ஒரு மாதாந்த அல்லது வருடாந்த பராமரிப்பு கட்டணம் அறிவிடப்படும்.

8.4 பராமரிப்பு திட்டம் ஒன்றிற்கு வாடிக்கையாளர் தரப்பினர் ஒருவராக இல்லாத சந்தர்ப்பத்தில், அழைப்பு நிலைய உதவிக்கு வாடிக்கையாளருக்கு அணுக முடியாமல் இருக்கும். எவையேனும் பராமரிப்பு தேவைப்பாடுகள் இருந்தால், சொலுஷன் முன்மொழிவில் விபரிக்கப்பட்டவாறு வருகை தருதல் அடிப்படையில் அறவிடப்படும்.

8.5 உடன்படிக்கையின் அட்டவணையில் 3 இல் விபரிக்கப்பட்ட பராமரிப்பு திட்ட ஏற்பாடுகள் ஒன்றுக்கு வாடிக்கையளர் தரப்பினர் ஒருவராக இருக்கின்ற சந்தர்ப்பத்தில், முகாமை செய்யப்படுகின்ற சேவைகள் ஏற்டையதாக இருக்கும்.

8.6 வாடிக்கையாளருக்கு முன் அறிவித்தல் வழங்கி பராமரிப்பு கட்டணங்கள் மாற்றப்படலாம்.

9. 9. காலம்

இந்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அமுலாக்கல் திகதியிலிருந்து இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் மற்றும் உடன்படிக்கையின் அட்டவணை 1 இல் குறிப்பிடப்பட்டுள்ள காலத்திற்கு செல்லுபடியாகும். மேற்கூறிய காலத்தின் காலாவதிக்குப் பின்னர், எவரேனும் தரப்பினரால் உடன்படிக்கை முடிவுறுத்தப்படாத வரை, உடன்படிக்கை "புதுப்பித்தல் காலம்" அட்டவணை 1 இல் குறிப்பிடப்பட்டுள்ள மேலதிக காலத்திற்கு தானாகவே புதுப்பிக்கப்படும்.

10. முடிவுறுத்தல்

10.1 இந்த உடன்படிக்கையின் எவையேனும் ஏற்பாடுகளை எவரேனும் தரப்பினர் மீறுகின்ற சந்தர்ப்பத்தில் மற்றும் அது தொடர்பில் எழுத்து மூல அறிவித்தலொன்று கிடைக்கப் பெற்று அறுபது (60) நாட்களுக்குள் அத்தகைய மீறுகையை சீர்செய்யாவிட்டல், முடிவுறுத்தல் நேரத்தில் ஏற்கனவே அடைந்திருக்கின்ற கடப்பாடுகள், உரிமைக்கோரிக்கைகள் மற்றும் பொறுப்புக்கள் என்பவற்றுக்கு பங்கமில்லாமலும் மற்றும் அவற்றுக்கு அமைவாகவும் எவரேனும் தரப்பினர் மற்றத் தரப்பினருக்கு எழுத்து மூலம் அறிவித்தல் வழங்குவதன் மூலம் இந்த உன்படிக்கையை முடிவுறுத்தலாம்.

10.2 பின்வரும் எவையேனும் சூழ்நிலைகள் நிகழ்கின்ற சந்தர்ப்பத்தில், இந்த உடன்படிக்கையின் எவையேனும் ஏனைய உரிமைகளுக்கு பங்கமில்லாமல், டீபீஎன் நிறுவனம் இந்த உடன்படிக்கையை உடனடியாக முடிவுறுத்தலாம்,

அ) வாடிக்கையாளர் கடன் தீர்க்க முடியாதவராக அல்லது தன்னார்வ ஒடுக்கத்துக்கு அல்லது கட்டாய ஒழித்துக்கட்டுதலுக்கு உட்படுதல் அல்லது ஒடுக்குதலுக்காக ஒரு செயற்பாடான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றல் அல்லது வாடிக்கையாளரின் கடன் கொடுநர்களுடன் ஒரு ஏற்பாட்டை அல்லது இணைப்பை ஏற்படுத்திக் கொள்தல், அல்லது கடன் பத்திரம் வைத்திருப்பவர்கள் சார்பில் அல்லது வேறுமுறையில் எவரேனும் பெறுநர் நியமிக்கப்படுதல்.

10.3 டீபீஎன் நிறுவனத்திற்கு முப்பது (30) நாட்கள் முன் எழுத்து மூல அறிவித்தல் வழங்கி எந்த நேரத்திலும் வாடிக்கையாளர் இந்த உடன்படிக்கையை முடிவுறுத்தலாம்.

10.4 வாடிக்கையாளருக்கு முப்பது (30) நாட்கள் முன் எழுத்து மூல அறிவித்தல் வழங்கி எந்த நேரத்திலும் டீபீஎன் நிறுவனம் அதன் சுய தீர்மானத்தின்படி இந்த உடன்படிக்கையை முடிவுறுத்தலாம்.

10.5 வாடிக்கையாளரால் ஏதேனும் முக்கிய மீறுகையை மேற்கொள்கின்ற சந்தர்ப்பத்தில் டீபீஎன் நிறுவனம் உடனடியாக இந்த உடன்படிக்கையை முடிவுறுத்தலாம்.

10.6 உடன்படிக்கையின் முடிவுறுத்துகை மேற்கொள்ளப்பட்ட பின்னர் கொடுப்பனவு திருப்பிச் செலுத்தப்படமாட்டாது என்பதற்கு வாடிக்கையாளர் உடன்படுகின்றார் மற்றும் ஏற்றுக்கொள்கின்றார்.

11. பொறுப்பின் வரையறை

11.1 இதன் கீழ் சொலுஷன் கருவியின் ஏற்பாட்டின் விளைவாக அல்லது சொலுஷன் கருவியின் பயன்பாட்டின் விளைவாக, ஏதேனும் காரணத்திற்காக சொலுஷன் கருவியின் இடைநிறுத்தம் அல்லது இந்த உடன்படிக்கையின் முடிவுறுத்தல் அல்லது இதன் கீழ் டீபீஎன் நிறுவனத்தின் ஏதேனும் உரிமையை பிரயோகித்தலின் விளைவாக, அத்தகைய இழப்பு அல்லது சேதத்தின் சாத்தியப்பாட்டை டீபீஎன் நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டிருந்தாலும் வாடிக்கையாளருக்கு ஏற்படுகின்ற வியாபார இழப்பு, வருமான இழப்பு, விளைவாந்தன்மை அல்லது இடைநேர் இழப்பு அல்லது ஏதேனும் ஏனைய இழப்புக்காக டீபீஎன் பொறுப்பாக மாட்டாது.

11.2 இந்த உடன்படிக்கைக்கு அமைவாக டீபீஎன் நிறுவனத்தின் பொறுப்பானது இலங்கை ரூபாய் ஒரு இலட்சம் தொகைக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டிருக்கும்.

11.3 இந்த உடன்படிக்கையில் வெளிப்படையாகத் தரப்பட்ட விடயங்கள் தவிர, இந்த உடன்படிக்கையின் கீழ் விநியோகிக்கப்படுகின்ற சொலுஷன் கருவி, எவையேனும் துணைக் கருவிகள், உதிரிப்பாகங்கள் மற்றும் சேவைகளுக்கான உறுதிப்பாடுகள், உத்தரவாதங்கள் அல்லது பிரதிநிதித்துவங்களை டீபீஎன் நிறுவனம் வழங்குவதில்லை.

12. நட்டஉத்தரவாதம்

12.1 சொலுஷன் கருவியின் ஏற்பாடு மற்றும்/அல்லது இதன் கீழான சேவைகளில் வாடிக்கையாளர் அவரின் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், வருகை தருவோர்கள் அல்லது எவரேனும் மூன்றாம் தரப்பினர்களின் உதாசீனம், வேண்டுமென்றே செய்கின்ற செயல் அல்லது நிறைவேற்றப்படாத செயல்களிலிருந்து எழுகின்ற எவையேனும் மற்றும் சகல மூன்றாம் தரப்பினர் உரிமைக்கோரிக்கைகளுக்கு எதிராக வாடிக்கையாளர் டீபீஎன் நிறுவனத்தைப் பாதுகாக்கவும் மற்றும் தீங்கின்றி வைப்பதற்கும் மற்றும் நட்ட உத்தரவாதமளிக்கவும் வேண்டும் என்பதோடு ஏதேனும் அத்தகைய உரிமைக் கோரிக்கையில் வழக்காடலுக்கான செலவினங்கள் உட்பட ஆனால் அவற்றுக்கு மாத்திரம் வரையறுக்கப்படாத சகல செலவினங்களையும் வாடிக்கையாளர் தாங்கிக் கொள்ள வேண்டும்.

12.2 இந்த உட்பிரிவு இந்த உடன்படிக்கையின் முன்னரே முடிவுறுத்தலை அல்லது முன்னரே காலாவதியாவதைத் தக்கவைக்கும்.

13. புலமைச்சொத்து உரிமைகள்

13.1 இந்த உடன்படிக்கையில் எந்த சந்தர்ப்பத்திலும் சொலுஷன் கருவி மற்றும்/அல்லது சேவைகள் தொடர்பில் புலமைச்சொத்தின் உரிமையார் வாடிக்கையாளராக மாட்டார். இந்த உடன்படிக்கையில் எந்த இடத்திலும் சொலுஷன் கருவியின் மற்றும்/அல்லது சேவைகள் ஏதேனும் புலமைச் சொத்து உரிமைகளை வாடிக்கையாளருக்கு சாட்டுதல் செய்யப்படுவதில்லை.

13.2 மற்றைய தரப்பினரின் வர்த்தக குறியீடுகள் சேவைக் குறியீடுகள் மற்று/அல்லது ஏனைய குறியீடுகளை அல்லது அதன் உற்பத்திகளை அல்லது சேவைகளை அல்லது ஏனையவர்களின் அல்லது அவர்களின் உற்பத்திகளை அல்லது சேவைகளை தவறான முறையில் ஏனையவர்களுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துகின்ற முறையில் ஒரு தரப்பினர் பயன்படுத்தக் கூடாது. ஏனைய தரப்பினரின் வர்த்தகக் குறியீடுகள், சேவைக் குறியீடுகள், இலச்சினைகள் மற்றும்/அல்லது ஏனைய வர்த்தக அடையாளஙகைளை பயன்படுத்திவதில் மற்றைய தரப்பினரின் வேண்டுகோள்களுக்கு ஒவ்வொரு தரப்பினரும் இணங்க வேண்டும் என்பதோடு ஏதேனும் முறையில் அத்தகைய வர்த்தகக் குறியீடு, சேவைக் குறியீடு மற்றும்/அல்லது ஏனைய அடையாளங்களின் பெறுமதிகளைக் குறைக்கின்ற ஏதேனும் நடவடிக்கையை மேற்கொள்வதிலிருந்து வாடிக்கையாளர் தவிர்ந்திருக்க வேண்டும்.

14. இரகசியத்தன்மை

14.1 (இதனகத்துப் பின்னர் “இரகசியத் தகவல்கள்” எனக் குறிப்பீடு செய்யப்படுகின்ற) இந்த உடன்படிக்கையின் கீழ் அல்லது இந்த உடன்படிக்கையின் செயலாற்றுகை தொடர்பில் எவரேனும் மூன்றாம் தரப்பினரிடமிருந்து அல்லது மூன்றாம் தரப்பினர் கரிசனை கொள்கின்ற (ஒன்றில் நேரடியாக அல்லது மறைமுகமாக) இந்த உடன்படிக்கையினால் அடையப்பெற்ற ஏதேனும் வகை சகல வர்த்தக மற்றும் தொழிநுட்ப தகவல்களின் இந்த உடன்படிக்கையின் ஒவ்வொரு தரப்பினரும் கண்டிப்பான இரகசியத்தைப் பேணுவதற்கு சிறந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதோடு அதன் கண்டிப்பான இரகசியத்தை பேணுவதற்கு வாடிக்கையாளரின் ஊழியர்கள் மற்றும் முகவர்கள் கட்டுப்படவும் வேண்டும். அத்தகைய இரகசியத் தகவல்களை உடன்படிக்கையில் குறிப்பிடப்படாத எவையேனும் நோக்கங்களுக்காக எத்தரப்பினரும் பயன்படுத்தக் கூடாது. மேலும், ஒரு தரப்பினர் மற்றத்தரப்பினரின் எழுத்து மூல சம்மதமில்லாமல் ஏதேனும் இரகசியத் தகவல்ளை மூன்றாம் தரப்பினருக்கு வெளிப்படுத்தக் கூடாது.

14.2 உடனடிக்கையின் காலாவதி அல்லது உடன்படிக்கையைத் தீர்மானித்தல் எவ்வாறிருந்த போதிலும், வரையறையற்ற காலப்பகுதியொன்றுக்காக உட்பிரிவில் குறிப்பிடப்பட்ட ஏற்பாடுகள் அமுலில் இருக்கும்.

15. பகிரங்கப்படுத்தல்

டீபீஎன் நிறுவனத்தின் முன் எழுத்து மூல சம்மதமில்லாமல் இந்த உடன்படிக்கையின் உள்ளடக்கங்கள் அல்லது அதில் உள்ளடக்கப்பட்ட பரிமாற்றல்கள் தொடர்பில் ஏதேனும் ஊடக வெளியீடு அல்லது பகிரங்க கூற்று அல்லது வெளிப்படுத்தலை வாடிக்கையாளர் மேற்கொள்ளக் கூடாது அல்லது அவ்வாறு மேற்கொள்வதற்கு அனுமதிக்கவோ அல்லது அங்கீகரிக்கவோ கூடாது என்பதோடு அத்தகைய சம்மதத்தை நியாயமற்ற முறையில் வைத்திருக்கவும் கூடாது.

16. நிருவகிக்கின்ற சட்டம்

இந்த உடன்படிக்கை இலங்கைச் சட்டங்களினால் நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதோடு அத்தகைய சட்டங்களுக்கு ஏற்ப வரைவிலக்கணப்படுத்தப்படும்.

17. பிணக்குத் தீர்த்தல்

இந்த உடன்படிக்கை தொடர்பில் அல்லது அதன் ஏதேனும் ஏற்பாடு தொடர்பில் கரிசனையுடைய தரப்பினர்களுக்கிடையில் ஏதேனும் பிணக்கு அல்லது வேறுபாடு எழுகின்ற சந்தர்ப்பத்தில், அதனை சுமுகமாகத் தீர்த்துக் கொள்வதற்கான சகல சிறப்பான முயற்சிகளையும் இதன் தரப்பினர்கள் மேற்கொள்ள வேண்டும். இங்கு குறிப்பிட்டவாறு ஏதேனும் பிணக்கை அல்லது வேறுபாட்டை இதன் தரப்பினர்களுக்கிடையே சுமுகமாகத் தீர்த்துக்கொள்ள முடியாவிட்டால், முப்பது (30) நாட்களுக்குப் பிந்தாமல் வழக்காடல் மூலம் இலங்கையில் உள்ள தகைமையுடைய நீதிமன்றங்களின் நியாயாதிக்கத்திற்கு சமர்ப்பிப்பதன் மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும்.

18. அறிவித்தல்கள்

ஒரு தரப்பினரால் மற்றத் தரப்பினருக்கு வழங்கப்பட வேண்டிய இந்த உடன்படிக்கையால் வேண்டப்படுகின்ற அல்லது அங்கீகரிக்கப்படுகின்ற ஏதேனும் அறிவித்தல் அல்லது ஏனைய தகவல்கள் உடன்படிக்கையில் விபரமாகத் தரப்பட்டவாறு உரிய ஏற்றுக்கொள்தல் மூலம் நேரடியாக அல்லது பதிவுத்தபால், தொலைநகல் பரிமாற்றல் அல்லது தொலைத் தொடர்பின் நிகரான முறைகளில் ஒரு தரப்பினரால் மற்றத் தரப்பினருக்கு அனுப்பப்படலாம்,

19. https://www.dialog.lk/legal இணையத்தளத்தில் அல்லது காலத்திற்கு காலம் டீபீஎன் நிறுவனத்தால் தீர்மானிக்கப்படுகின்ற ஏதேனும் ஏனைய இடத்தில் அமைந்துள்ள இலஞ்சம் எதிர்ப்பு, ஊழல் எதிர்ப்பு, வலைப்பின்னல் அணுகுதல் உட்பிரிவுகள், தகவல் பாதுகாப்பு மற்றும் தரவு பாதுகாப்பு என்பவற்றை வாடிக்கையாளர் பின்பற்ற வேண்டும்.

20. கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட செயல்கள்

ஒவ்வொரு தரப்பினரின் நியாயமான கட்டுப்பாட்டுக்கு அப்பால் குறைபாடு அல்லது உதாசீனம் இல்லாமல் ஏதேனும் காரணம் அல்லது காரணங்களிலிருந்து முழுமையாக அல்லது பகுதியளவில் அத்தகைய தவறுகை அல்லது தாமதம் ஏற்பட்டால் இந்த உடன்படிக்கையின் ஏதேனும் நியதி, கடப்பாடு அல்லது நிபந்தனையின் செயலாற்றுகை, பின்பற்றுகை அல்லது நிறைவேற்றுகையில் ஏற்படுகின்ற தவறுகை அல்லது தாமதத்தினால் ஏற்படுகின்ற இழப்புக்காக எந்தத் தரப்பினரும் பொறுப்பாக மாட்டார்.

21. உறவுமுறை

இந்த உடன்படிக்கையைத் தொடர்ந்து தரப்பினர்களால் மேற்கொள்ளப்படுகின்ற ஏதேனும் நடவடிக்கை டீபீஎன் மற்றும் வாடிக்கையாளரை ஒரு பங்காளராக, இணைக்கப்பட்ட நிறுவனமாக, ஒரு அமைப்பாக அல்லது மற்றவரின் ஏனைய இணைந்த நிறுவனமாக் கருதுவதற்கு இந்த உடன்படிக்கையில் எதுவும் உள்ளடக்கப்படவில்லை என்பதோடு இந்த உடன்படிக்கையைத் தொடர்ந்து மேற்கொள்கின்ற ஏதேனும் செயல் அவ்வாறு கருதப்படவோ மாட்டாது என்பதோடு ஆட்புள எல்லைக்குள் அல்லது அதற்கு வெளியே ஏதேனும் நோக்கங்களுக்காக ஒவ்வொரு தரப்பினரும் மற்றத் தரப்பினரின் முகவராக நியமிக்கப்பட மாட்டார். ஏதேனும் முறையில் அல்லது ஏதேனும் நோக்கத்திற்காக மற்றத் தரப்பினருக்கதிராக ஏதேனும் பொறுப்பை உருவாக்குவதற்கு அல்லது மற்றத் தரப்பினரின் பெயரைக் கட்டுப்படுத்துவதற்கான அதிகாரம் அல்லது தத்துவம் இரு தரப்பினருக்கும் இல்லை.

22. சாட்டுதல்

இந்த உடன்படிக்கையின் மற்றத் தரப்பினரின் முன் எழுத்து மூல சம்மதமில்லாமல் இந்த உடன்படிக்கையின் ஏற்பாடுகளை அல்லது அதன் உரிமைகள், கடமைகள் மற்றும்/அல்லது பொறுப்புக்களை எந்தத் தரப்பினரும் சாட்டுதல் செய்யக் கூடாது.

23. முழுமையான உடன்படிக்கை

தரப்பினர்களுக்கு இடையிலான முழுமையான உடன்படிக்கையை இந்த உடன்படிக்கை பதிவு செய்கின்றது என்பதோடு உடன்படிக்கையின் விடயத்தை கரிசனை கொள்கின்ற போது ஏதேனும் முன்னைய உடன்படிக்கையை மேலோங்கச் செய்கின்றது. இந்த உடன்படிக்கையின் நியதிகளுக்கான ஒரு மாற்றம்/ திருத்தம் ஒவ்வொரு தரப்பினரால் எழுத்து மூலம் அங்கீகரிக்கப்பட்டு கையொப்பமிடப்பட்டால் மாத்திரம் செல்லுபடியாகும்.